இரட்டையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,414 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (கருவியல் அடிப்படை)
 
== கருவியல் அடிப்படை ==
மனித இனத்தில் இரட்டைப் பிள்ளைகள் ஒரே அண்டத்திலிருந்து உண்டாவன என்றும், இரண்டு [[அண்டம்|அண்டங்களிலிருந்து]] உண்டாவன என்றும் இரு வகைப்படும். சாதாரணமாக ஒரு தாய்க்கு[[தாய்]]க்கு மாதந்தோறும் ஒரே அண்டம் முதிர்ச்சியுறும். அது கருவுறுமானால், பிறகு குழந்தையாக வளரும். கருவுற்ற அண்டம் பன்முறை பிளவுபட்டு அணுத் தொகுதியாக இருக்கின்ற தொடக்கத்திலேயே ஏதோ காரணத்தால் இரண்டு அணுத் தொகுதிகளாகப் பிரிந்து, ஒவ்வோரணுத் தொகுதியும் ஒரு குழந்தையாக உருவாகும். இப்படிப் பிறக்கும் இரட்டைப்பிள்ளைகள் ஓரண்ட (Uniovular) இரட்டைகள் அல்லது ஒற்றுமை இரட்டைகள் (Identical twins) எனப்படும். மிக்க ஆரம்பத்திலே அணுத்தொகுதி உருவாவதற்கு முன்பே பிரிவதால் உண்டான ஒற்றுமை யிரட்டைகள் பல விவரங்களில் முழுதும் ஒத்திருக்கும். அவ்வாறின்றிச் சற்றுத் தாழ்த்து, அணுத்தொகுதி[[அணு]]த்தொகுதி ஓரளவிற்கு உருவாகி, வலம் இடம் என்ற வேறுபாடு தோன்றிய பிறகு அந்த அணுத்தொகுதி பிரிவதால் உண்டாகும் இரட்டைப் பிள்ளைகளை எளிதில் பிரித்தறிந்துகொள்ளலாம். அவை ஒன்றற்கொன்று பிம்பமும், கண்ணாடியில் தோன்றும் அதன் பிரதிபிம்பமும் போல இருக்கும். ஒரே அண்டத்திலிருந்து உண்டாகும் இரட்டைப் பிள்ளைகள் இரண்டும் ஒரே பாலாக இருக்கும். அதாவது இரண்டும் ஆணாக இருக்கும்; அல்லது இரண்டும் பெண்ணாக இருக்கும்.
 
== வகைமை ==
இரண்டு வெவ்வேறு அண்டங்கள் ஒரே சமயத்தில் முதிர்ச்சியுற்று வந்து, கருவுற்று இரண்டு குழந்தைகளாக வளர்வன ஈரண்ட (Biovular) அல்லது உடன்பிறப் பிரட்டைகள் (Fraternal twins) எனப்படும். இவை இரண்டும் ஒரே பாலாகவும் இருக்கலாம்; ஒன்று ஆணாகவும் ஒன்று பெண்ணாகவும் இருக்கலாம். ஒருபால் இருபால் இரட்டைகளின் விகிதம் சுமார் பாதிப் பாதியாக இருக்கும். உடன்பிறப் பிரட்டைகள் ஒரே பாலினவானாலும் அவற்றை வேறு பிரித்து அறிந்து கொள்ளுவது எளிது. ஒரே பெற்றோருக்குத் தனித்தனியாகப் பிறக்கும் பிள்ளைகளிடத்தில் எவ்வளவு ஒற்றுமை காணுமோ அவ்வளவேதான் இந்த உடன்பிறப் பிரட்டைப் பிள்ளைகளிடமும் காணும். இரட்டைப் பிள்ளைகள் உண்டாவதுபோல மூன்று நான்கு, ஐந்து பிள்ளைகளும் உண்டாவதுண்டு. ஆறு பிள்ளைகளும் பிறந்திருக்கின்றன. ஆறுக்கு மேற்பட்டுப் பிறந்திருப்பதாகத் தெரியவில்லை. மூன்று, நான்கு, ஐந்து குழந்தைகள் ஒரே அண்டத்திலிருந்தும் உண்டாகியிருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து அண்டங்களிலிருந்தும் உண்டாகலாம்.
 
==புள்ளிவிவரங்கள்==
23,377

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2830174" இருந்து மீள்விக்கப்பட்டது