"தி வயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
 
=== பருவம் இரண்டு ===
இரண்டாம் பருவத்தில் போதைப் பொருள் பிரச்சனையுடன் உழைக்கும் வர்க்கத்தின் சிக்கல்களும் சித்தரிக்கப்படுகின்றன. பால்ட்டிமோர் நகர துறைமுகத் தொழிலாளர்கள் சங்கத் தலைவன் ஃபிராங்க் சபோத்கா தனது சக தொழிலாளர்கள் நலனைப் பாதுகாப்பதற்காகத் துறைமுகம் வழியாகப் போதைப் பொருட்கள் கடப்படுவதற்குகடத்தப்படுவதற்கு துணை போகிறான். பால்ட்டிமோர் நகருக்கு ஒட்டு மொத்த அளவில் போதைப் பொருட்களை வழங்கும் தி கிரீக்கும் அவனது ஆட்களும் இப்பருவத்தில் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். அவர்கள் சரக்குப் பெட்டியில் அடைத்து வைத்துக் கடத்திய பாலியல் தொழிலாளிகள் 13 பேர் மூச்சுத் திணறி இறந்து போகின்றனர். இதனைத் துப்பறியக் காவல்துறை மேலதிகாரிகள் டேனியல்சின் சிறப்புக் காவல் பிரிவை மீண்டும் உயிர்ப்பிக்கின்றனர். காவல்துறை உயரதிகாரி மேஜர் வால்ச்செக்கின் பகையை சம்பாதித்த சபோத்காவை எதிலாவது சிக்கவைத்து சிறையலடைப்பது இப்பிரிவின் உள்நோக்காக உள்ளது. அவர்களது விசாரணையால் ”தி கிரீக்” குழுவின் செயல்பாடுகள் வெளித்தெரிய வருகின்றன. இதைத் தெரிந்து கொள்ளும் “தி கிரீக்” உண்மை வெளிவராமல் இருக்க சபோத்காவைக் கொலை செய்து விட்டுப் பால்ட்டிமோர் நகரை விட்டு வெளியேறுகிறான். நகரின் மற்றொரு பகுதியில் பார்க்ஸ்டேல் குழுவின் சிக்கல்கள் தொடருகின்றன. ஏவான் சிறை சென்ற பின்னால், குழுவின் கட்டுப்பாட்டாளனாக மாறுகிறான் ஸ்ட்ரிங்கர் பெல். விற்பனை செய்யத் தரமான போதைப் பொருள் கிட்டாமல் வர்த்தகம் மந்தமடைவதால், மற்றொரு பெரும் போதைப் பொருள் விற்பனையாளனான புரொபோசிஷன் ஜோவுடன் கூட்டணி அமைக்கிறான். சபோத்காவின் மரணத்துடன் மீண்டும் சிறப்புக் காவல் பிரிவு கலைக்கப்படுகிறது.
 
=== பருவம் மூன்று ===
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2830346" இருந்து மீள்விக்கப்பட்டது