"யப்பான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,026 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
No edit summary
யப்பானியத் தீவுகள் [[பசிபிக் தீ வளையம்|பசிபிக் தீ வளையத்தில்]] உள்ள [[எரிமலை]] வலயத்தில் அமைந்துள்ளன. இத் தீவுகள் பெரும்பாலும், நடுச் [[சிலூரியக் காலம்]] முதல் [[பிளீசுட்டோசீன் காலம்]] வரையிலான பல நூறு மில்லியன் ஆண்டுகளாக இடம் பெற்ற பெரிய பெருங்கடல் நகர்வுகளின் விளைவாக உருவானவை. இந்நகர்வு, தெற்கே [[பிலிப்பைன் கடல் தட்டு]] [[அமூரியக் கண்டத்தட்டு]], [[ஒக்கினாவாக் கண்டத்தட்டு]] ஆகியவற்றுக்குக் கீழ் நகர்ந்ததனாலும், வடக்கே [[பசிபிக் தட்டு]] [[ஒக்கோட்சுக்கு தட்டு]]க்குக் கீழ் நகர்ந்ததினாலும் ஏற்பட்டது. முன்னர் யப்பான் யூரேசியக் கண்டத்தின் கிழக்குக் கரையுடன் ஒட்டியிருந்தது. முற்கூறிய தட்டுக்களின் கீழ் நகர்வு, 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், இன்றைய யப்பான் நிலப் பகுதிகளைக் கிழக்குப் புறமாக இழுத்து இடையே [[யப்பான் கடல்|யப்பான் கடலை]] உருவாக்கியது.<ref>{{cite web|url=http://shinku.nichibun.ac.jp/jpub/pdf/jr/IJ1501.pdf|last=Barnes|first=Gina L.|title=Origins of the Japanese Islands|publisher=[[University of Durham]]|year=2003|accessdate=11 August 2009}}</ref>
 
யப்பானில் 108 செயற்படும் எரிமலைகள் உள்ளன. பெரும்பாலும் [[சுனாமி]]யை உருவாக்கும் பேரழிவைத் தருகின்ற நிலநடுக்கங்கள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல தடவைகள் ஏற்படுகின்றன.<ref>{{cite web |url=http://volcano.und.edu/vwdocs/volc_images/north_asia/japan_tec.html |archiveurl=http://web.archive.org/web/20070204064754/http://volcano.und.edu/vwdocs/volc_images/north_asia/japan_tec.html |archivedate=4 February 2007 |title=Tectonics and Volcanoes of Japan |publisher=Oregon State University |accessdate=27 March 2007}}</ref> 1923 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தோக்கியோ நிலநடுக்கத்தினால் 140,000 பேர் இறந்தனர்.<ref>{{cite web|last=James|first=C.D.|title=The 1923 Tokyo Earthquake and Fire|url=http://nisee.berkeley.edu/kanto/tokyo1923.pdf|publisher=University of California Berkeley|accessdate=16 January 2011|year=2002}}</ref> [[1995 பெரும் ஆன்சின் நில நடுக்கம்|1995 பெரும் ஆன்சின் நில நடுக்கமும்]], 2011 மார்ச்சு 11 ஆம் தேதி ஏற்பட்ட 9.0 அளவிலான [[2011 தோகோக்கு நிலநடுக்கம்|2011 தோகோக்கு நிலநடுக்கமும்]]<ref name="USGS9.0">{{cite web|url=http://earthquake.usgs.gov/earthquakes/eqinthenews/2011/usc0001xgp/neic_c0001xgp_wmt.php |title=USGS analysis as of 2011-03-12 |publisher=Earthquake.usgs.gov |date=23 June 2011 |accessdate=9 November 2011}}</ref> அண்மைக் காலத்தில் இடம்பெற்றவை. 2011 ஆம் ஆண்டின் நிலநடுக்கத்தில் போது பெரிய சுனாமியும் உருவானது.<ref name="nytimes-tsunami">{{cite news|last=Fackler|first=Martin; Drew, Kevin|title=Devastation as Tsunami Crashes Into Japan|url=http://www.nytimes.com/2011/03/12/world/asia/12japan.html?ref=world|accessdate=11 March 2011|newspaper=The New York Times|date=11 March 2011}}</ref> 2012 மே 24 ஆம் தேதியும் 6.1 அளவிலான நிலநடுக்கம் வடகிழக்கு யப்பானின் கரையோரத்தைத் தாக்கியது. எனினும், இதோடு சுனாமி எதுவும் ஏற்படவில்லை.
 
யப்பான் பல பெரும் புயல்களையும் சந்தித்துள்ளது. 1993 – ஆம் ஆண்டில் ஜப்பானில் வீசிய யான்சி புயலால் (Typhoon Yancy) 48 பேர் உயிரிழந்தார்கள். 175 முதல் 215 கிலோமீட்டர் வரை வீசிய காற்றால் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். ஜப்பானிற்கு அப்புயலால் ஏற்பட்ட மொத்த இழப்பு சுமார் 163 கோடி அமரிக்க டாலர்கள் ஆகும்.<ref>{{Cite web|url=https://www.neotamil.com/uncategorized/massive-jebi-typhoon-struck-in-japan/|title=ஜப்பானும் புயலும்|last=|first=|date=|website=NeoTamil.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
== உள்கட்டமைப்பு ==
16

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2830569" இருந்து மீள்விக்கப்பட்டது