குளம்பிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கல்களில் குளம்பு உள்ள விலங்கினங்கள்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
குளம்பிகள் உருவாக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

14:19, 5 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

(குளம்புள்ள விலங்குகள், அங்கு லேட்டா , Hoofed animals, Ungulata) : அங்குலேட்டா என்னும் பாலூட்டி விலங்குகளிலே குதிரைச் சாதியைச் சேர்ந்த இனங்களாகிய குதிரை, கழுதை, வரிக்குதிரை ஆகியவையும், டாப்பிர் என்னும் நீர் யானையும், காண்டாமிருகமும் ஆகிய ஒற்றைக் குளம்புள்ள பாலூட்டிகளும் ஹிப்போப்பாட்டமஸ் என்னும் நீர்க் குதிரையும், பன்றியும், பெக்காரி என்னும் பன்றி போன்ற அமெரிக்க விலங்கும், ஒட்டகமும், லாமாவும், குறும்பன்றியும், மானும், ஒட்டகச் சிவிங்கியும், ஆடும், மாடும் ஆகிய இரட்டைக் குளம்புள்ள பாலூட்டிகளும் அடங்கும். முன்பு யானை, ஹைராக்ஸ் என்னும் பிராணிகளையும் அங்குலேட்டா என்றே சேர்த்திருந்தனர். இவற்றிலே விரல் நுனி முழுவதையும் மூடிக்கொண்டிருக்கும் மெய்யான குளம்பு இருப்பதில்லை. விரலின் மேற்புறத்தில் காணும் அகன்ற நகம்போன்ற உறுப்பே இருக்கிறது.

அங்குலேட்டா

அங்குலேட்டா என்னும் பெருங்கூட்டத்திலே பழைய புவியியற்காலங்களிலே வாழ்ந்த பலவகை உயிர்களும் சேரும். இப்போதுள்ளவையும் இல்லாதவையுமான இந்த உயிர்வகைகளெல்லாம் நெருங்கிய உறவுடைய பிராணிகளல்ல, பல்வேறு வரிசைகளாக பாகுபடுத்துவதற்கு உரியவை. ஏறக்குறைய ஒரே வகையான வாழ்க்கைப் பழக்கம் (Similarity of habit) உள்ள இவ்விலங்குகள் எல்லாம் ஒன்றையொன்று பெரிதும் ஒத்திருக்கும் வகையில் உறுப்பமைப்பிலும் மாறுபாடடைந்து வந்திருக்கின்றன

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளம்பிகள்&oldid=2831593" இலிருந்து மீள்விக்கப்பட்டது