உளநிலைப் பகுப்பாய்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|bg}} →
சி பாலின உந்துதல்
வரிசை 10:
'''உளநிலைப் பகுப்பாய்வு''' என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதிகளிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் [[ஆஸ்திரியா]] [[நரம்பியலாளர்]] [[சிக்மண்ட் பிராய்ட்]] உருவாக்கிய உளவியல் மற்றும் உளவியற் சிகிச்சை முறையாகும். உளநிலைப் பகுப்பாய்வு பல பகுதிகளிலும் வளர்ச்சியுற்று, விமர்சனத்திற்கு உள்ளாகி, விரிவடைந்து காணப்படுகின்றது. பிராய்ட் சில மாணவர்கள் இதில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
 
== அடிப்படை ==
பின்வரும் அடிப்படைக் கோட்பாடுகளை கொண்டு உளநிலைப் பகுப்பாய்வு காணப்படுகின்றது:
# மனித நடத்தை, அனுபவம் மற்றும் புலனறிவு என்பன பகுத்தறிவுக்கு மாறான தூண்டுதலால் பாரியளவில் முடிவு செய்யப்படுகிறது.
வரி 17 ⟶ 18:
# உண்மை நிலையின் உணர்வுநிலைப் பார்வை மற்றும் உணர்வற்ற பொருள் என்பவற்றுக்கிடையேயான முரண்பாடு மன தொந்தரவுகளான நரம்புக் கோளாறு, நரம்புக் கோளாற்றுத் தொடர்ச்சி, திகில், மன அழுத்தம் போன்றவற்றை உருவாக்கவல்லன.
# உணர்வற்ற பொருளின் தாக்கத்திலிருந்து விடுபடுதல் பொருள் நிலையை உணர்வுநிலைக்கு கொண்டு வருதலால் அடையக்கூடியதாய் இருக்கின்றது.<ref>Erich Fromm (1992:13–14) The Revision of Psychoanalysis</ref>
 
== உளப்பகுப்பு ==
உளப்பகுப்பியல் (Psycho-analysis) என்பது பொதுவாக உளக்கோளாறு [[மருத்துவம்|மருத்துவத்தையோ]] அல்லது பிறழ்வான உளவியலையோ குறிப்பதாகக் கருதுவர். ஆனால் அறிவியல் முறைப்படி பார்த்தால் இந்தச் சொற்றொடர் [[சிக்மண்ட் பிராய்ட்|பிராய்டு]] என்பவர் வகுத்த உளவியல் பகுதியும், அதன் கருத்து அடிநிலைகளும், உளக் கோளாறுகளைக் குணப்படுத்துவதற்கான முறையும், அதன் கருத்து அடிநிலைகளும் என்னும் இரண்டு பொருளையுமே குறிக்கும்.
 
பிராய்டு வகுத்த உளவியல் பகுதியின் அடிப்படையான கொள்கைகள் அவர் நனவிலி உளம்பற்றி வகுத்துள்ள கொள்கையுடன் தொடர்புடையனவாகும். பிராய்டு வகுத்த கொள்கையை உளவியல் நியதிக் கொள்கை (Psychic determinism) என்று பலகால் கூறுவதுண்டு. ஒரு குறிப்பிட்ட வேளையில் ஒருவர் செய்யும் செயலுக்குக் காரணம் முன்னால் உளத்தில் அதிலும் முக்கியமாக நனவிலி உளத்தில் நிகழ்ந்தனவே என்று அவர் கூறுகறார். எந்த உளநிகழ்ச்சியும் முற்றிலும் மறைந்து போவதில்லை என்பதும், அது நனவிலி உளம் என்னும் உளப்பெரும் பகுதியில் சேர்ந்துவிடுகிறது என்பதும் அவர் கருத்து ஆக்கம்.
 
=== பாலின உந்துதல் ===
மனிதர் செய்யும் செயல்களுக்கெல்லாம் வேண்டிய ஊக்கநிலையும் ஆற்றலும் பால் இயல்பூக்கத்தினின்றே உண்டாகின்றன என்று பிராய்டு கூறுகிறார். குழவிகளிடமும் [[பால் (உயிரியல்)|பால் உணர்ச்சி]] காணப்படுகிறது என்று ஈறி, இவர் உலகத்தைத் திடுக்கிடச் செய்தார். குழவிகளிடமும் குழந்தைகளிடமும் காணப்படும் பால் உந்தலால் (Sex urge) உண்டாகும் எழுச்சிகள், அவற்றால் ஏற்படும் முரண்பாடுகள் முதலியவற்றை அடிநிலையாக வைத்து, இவர் உளவியல் ஒன்றை நிறுவியுள்ளார். இது போலவே இவர் ஈடிப்பஸ் கோட்டம், எலக்டிராகோட்டம் என்பவற்றை வகுத்துள்ளார். இந்தக் கோட்டங்கள் ஆண் குழந்தைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதில் தங்கள் தாயரிடம் பால் பற்றும், தந்தையரிடம் பால் அழுக்காறும் உடையவர் என்றும், பெண் குழந்தைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதில் தங்கள் தந்தையரிடம் பால் பற்றும், தாயரிடம் பால் அழுக்காறும் உடையவர் என்றும் முறையே பொருள்படும். ஆகவே பிராய்டு வகுத்த உளப்பாகு பாட்டியலானது மனிதனுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் அடிப்படைக் காரணங்கள் இந்தக் கோட்டங்களே (Complexes) என்று கூறுவதாகும். ஈடிப்பஸ் கோட்ட முண்டாகும் வயதில் குழந்தைக்கு ஏற்படும் உளச்சிக்கல்களையும் அதன் ஆளுமை வளர்ச்சி அடையும் ஆறுகளையும் இந்த இயலானது மிக்க திறமையுடன் விளக்குகின்றது. இந்த இயலார் கூறுவனவற்றில் பெரும்பாலான கருத்துக்கள் பின்னர்ச் செய்த ஆராய்ச்சிகளாலும் அனுபவங்களாலும் வலியுறுகின்றன. நம்முடைய நாகரிகம், வாழ்க்கையில் ஏற்படும் இன்பதுன்பங்கள், பெருந்தகைமையின் அழகு, பிறழ்வான நடத்தையில் ஏற்படும் சிக்கல்கள் ஆகியவை அனைத்துக்கும் காரணம் பால் உந்தலின் பலவிதத் தோற்றங்களும், பலவகைச் சூழ்நிலைகளால் குழந்தைக்கு ஏற்படும் எதிர்ப்புக்களுமே காரணம் என்று இந்த இயலார் கூறுவர்.
 
=== ===
 
உளப்பகுப்பியலார் கூறும் மற்றொரு கருத்து யாதெனில், பலவித இரட்டைமுரண்கள் வாழ்க்கையை உரு
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/உளநிலைப்_பகுப்பாய்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது