மெசொப்பொத்தேமியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 22:
* மெசொப்பொத்தேமியா, [[சுமேரியா|சுமேரியர்]], [[அக்காதியப் பேரரசு|அக்காதியர்]],[[பண்டைய அசிரியா|அசிரியர்]] மற்றும் [[பபிலோனிய நாகரிகம்|பபிலோனியர்]] போன்றோரின் நாகரிகங்களையும் உள்ளடக்கிய பல பண்டைய நாகரிகங்கள் வளர்ந்தோங்கிய ஒரு இடமாகும்.
 
* இப்பிரதேசத்துக்குள் எப்பொழுது நுழைந்தார்கள் என்பதில் அறிஞர் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், சுமேரியர்களே இங்கு முதன் முதலில் குடியேறியவர்களென நம்பப்படுகிறது. இந்த வளமான பகுதியில், கி.மு 10,000 க்கும், கி.மு 5000 க்கும் இடைப்பட்ட காலத்தில், பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவர்கள் [[குடியேற்றம்|குடியேறி]] வாழ்ந்துள்ளார்கள். இம்மக்களால் [[அசுன்னா பண்பாடு]], [[உபைதுகள் காலம்|உபைதுகள் பண்பாடு]], [[ஹலாப் பண்பாடு]]], [[உரூக்செம்தேத் நசிர் காலம்|உரூக்செம்தேத் பண்பாடு]], [[அசுன்னாஉரூக்|உரூக் பண்பாடு]], [[சமார்ரா பண்பாடு|சமார்ரா பண்பாடுகள்]] வளர்ச்சியுற்றது. பொதுவாகச் சிக்கலாகச் சமூக அமைப்புகள் கிமு 6000 ஆண்டுகள் அளவிலேயே வளர்ச்சி பெற்றதாகக் கொள்ள வேண்டும். அக்காலத்திலேயே [[ஜெரிக்கோ]] நகரம் நீர்பாசனத் தொழில் நுட்பங்களையும் கொண்ட மக்கள் நெருக்கடி மிக்க நகரமாக இருந்திருக்கிறது.அவர்களின் [[சுமேரிய மொழி|சுமேரியருடைய மொழி]], அறியப்பட்ட வேறு மொழிகளுடன் தொடர்பில்லாததாகக் கருதப்படுவதால், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைக் கண்டறிவது கடினமானதாக உள்ளது. அவர்களுடைய பழங்கதைகளில் சூழவுள்ள இடங்கள்பற்றிய குறிப்புகள் காணப்பட்டபோதும், அவர்கள் தோற்றம்பற்றி அறிந்து கொள்வதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சுமேரிய மொழி கி.மு 3200–2900 காலப்பகுதியை அண்டிப் பயன்பாட்டில் இருந்தது அறியப்பட்டுள்ளது.
 
* கி. மு நாலாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதியிலிருந்து கி.மு மூன்றாவது ஆயிரவாண்டுகளூடான காலப்பகுதியில் பல்வேறு நகர இராச்சியங்கள் காலத்துக்குக் காலம் அதிகரித்த பலமுள்ளவையாக விளங்கின. [[எரிது]], [[உரூக்]], [[ஊர் (மெசொப்பொத்தேமியா)|ஊர்]], [[லகாசு]], [[கிர்சு]] (''Girsu'') போன்றவை முக்கிய நகரங்களாக விளங்கின. சிறப்பாக நாலாவது ஆயிரவாண்டில் "[[உரூக்]]" இப்பகுதியின் முக்கிய நகர மையமாக விளங்கியது. இக்காலப் பகுதியில்தான் "உருக்" நகரிலும், வேறுசில நகரங்களிலும் எழுதும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், சக்கரமும் கண்டுபிடிக்கப்பட்டது. உலோக உற்பத்தி கல்வேலை என்பவற்றிலும் அதிகரித்த முயற்சிகள் காணப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/மெசொப்பொத்தேமியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது