அற்புதத் திருவந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

8,646 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  17 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து...............................41
 
 
நேர்ந்தரவம் கொள்ளச் சிறுகிற்றோ நீயதனை
 
ஈர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ - பேர்ந்து
 
வளங்குழவித் தாய் வளரமாட்டாதோ என்னோ
 
இளங்குழவித் திங்க ளிது.......................................42
 
 
திங்க ளிதுசூடிச் சில்பலிக்கென் றூர்திரியேல்
 
எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய
 
வானோர் விலக்காரேல் யாம் விலக்க வல்லமே
 
தானே யறிவான் தனக்கு........................................43
 
 
தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும்
 
எனக்கே அருளாவா றென்கொல் - மனக்கினிய
 
சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப்
 
பேராளன் வானோர் பிரான்......................................44
 
 
பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்
 
பிரானவன்றன் பேரருளே வேண்டிப் - பிரானவனை
 
எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையிலும்
 
இங்குற்றான் காண்பார்க் கெளிது................................45
 
 
எளிய திதுவன்றே ஏழைகாள் யாதும்
 
அளியீர் அறிவி லீர்ஆவா -ஒளிகொள்மிடற்று
 
எந்தையராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த
 
சிந்தையராய் வாழும் திறம்.....................................46
 
 
திறத்தான் மடநெஞ்சே சென்றடைவ தல்லால்
 
பெறத்தானும் ஆதியோ பேதாய் - நிறத்த
 
இருவடிக்கண் ஏழைக் கொருபாக மீந்தான்
 
திருவடிக்கண் சேரும் திரு.....................................47
 
 
திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும்
 
பெருமான் பிறைக் கொழுந்தை நோக்கும் - ஒருநாள்
 
இதுமதியென் றொன்றாக இன்றளவும் தேராது
 
அதுமதியொன் றில்லா அரா.....................................48
 
 
அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள்
 
விராவு கதிர்விரிய வோடி விராவுவதால்
 
பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே
 
தன்னோடே யொப்பான் சடை...................................49
 
 
சடைமேலக் கொன்றை தருகனிகள் போந்து
 
புடைமேவித் தாழ்ந்தனவே போலும் -முடிமேல்
 
வலப்பாலக் கோல மதிவைத்தான் தன்பங்கின்
 
குலப்பாவை நீலக் குழல்.......................................50
 
 
குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத்
 
தெழிலாக வைத்தேக வேண்டா -கழலார்ப்பப்
 
பேரிரவில் ஈமப் பெருங்காட்டில் பேயோடும்
 
ஆரழல்வாய் நீயாடும் அங்கு....................................51
 
 
அங்கண் முழுமதியம் செக்கரகல் வானத்து
 
எங்குமினி தெழுந்தால் ஒவ்வாதே - செங்கண்
 
திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த
 
சிரமாலை தோன்றுவதோர் சீர்..................................52
 
 
சீரார்ந்த கொன்றை மலர் தழைப்பச் சேணுலவி
 
நீரார்ந்த பேரியாறு நீத்தமாய்ப் - போரார்ந்த
 
நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான்
 
காண்பார்க்குச் செவ்வேயோர் கார்...............................53
 
 
காருருவக் கண்டத்தெம் கண்ணுதலே எங்கொளித்தாய்
 
ஓருருவாய் நின்னோடு உழிதருவான் -நீருருவ
 
மேகத்தாற் செய்தனைய மேனியான் நின்னுடைய
 
பாகத்தான் காணாமே பண்டு....................................54
 
 
பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு
 
கண்டங் கறுத்ததுவும் அன்றியே - உண்டு
 
பணியுறுவார் செஞ்சடைமேல் பான்மதியி னுள்ளே
 
மணிமறுவாய்த் தோன்றும் வடு...................................55
 
 
வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயின்
 
சுடுவெண் பொடிநிறத்தாய் சொல்லாய் - படுவெண்
 
புலாத்தலையி னுள்ளூண் புறம்பேசக் கேட்டோ
 
நிலாத்தலையிற் சூடுவாய் நீ....................................56
 
 
நீயுலக மெல்லாம் இரப்பபினும் நின்னுடைய
 
தீய அரவொழியச் செல்கண்டாய்- தூய
 
மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி
 
விடவரவம் மேலாட மிக்கு.....................................57
 
 
மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும்
 
ஒக்க உடனிருந்தால் ஒவ்வாதே - செக்கர் போல்
 
ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன்தன் பொன்னுருவில்
 
பாகத்தாள் பூங்குழலும் பண்பு...................................58
 
 
பண்புணர மாட்டேன் நான் நீயே பணித்துக்காண்
 
கண்புணரும் நெற்றிக் கறைகண்டா- பெண்புணரும்
 
அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவது
 
எவ்வுருவோ நின்னுருவ மேல்...................................59
 
 
மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல்
 
போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே -மாலாய
 
கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோது
 
அம்மான் திருமேனி அன்று....................................60
 
 
அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
 
இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றுந்தான்
 
எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னுரைப்பேன்
 
எவ்வுருவோ நின்னுருவம் ஏது..................................61
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
19

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/28394" இருந்து மீள்விக்கப்பட்டது