பட எழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: [[Image:Papyrus Ani curs hiero.jpg|thumb|பட எழுத்து முறையில் இருந்து உருவான பண்டை எகி...
 
வரிசை 5:
 
==பட எழுத்து முறைகள்==
பட எழுத்து முறைகளே உலகின் முதல் உண்மை எழுத்து முறைகள் ஆகும். [[அண்மைக் கிழக்கு]], [[இந்தியா]], [[சீனா]], [[நடு அமெரிக்கா]] போன்ற தொடக்ககால நாகரிகங்கள் பலவற்றில் ஏதாவதொரு வடிவத்தில் பட எழுத்து முறைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. [[இந்தியா]]விலும் [[பாகிஸ்தானிலும்]] இருந்த [[சிந்துவெளி எழுத்து]]க்கள் பட எழுத்துக்கள் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. முழுமையாகப் பட எழுத்துக்களையே பயன்படுத்தும் எழுத்துமுறை நடைமுறைச் சாத்தியம் அற்றது. அவ்வாறான எழுத்து முறைகள் எதுவும் அறியப்படவில்லை. மாறாக எல்லாப் பட எழுத்து முறைகளிலுமே பட எழுத்துக்கள், அவை குறிக்கும் பொருளின் உச்சரிப்பு ஒலி ஒப்புமையின் அடிப்படையில் வேறு பொருள் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒரு தொகுதி பட எழுத்துக்கள் அவற்றின் ஒலிப் பெறுமானத்துக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. ''பட அசையெழுத்து'' ''(logosyllabary)'' என்னும் சொல் இத்தகைய சொற்கள் பகுதியாக ஒலியன் இயல்பு கொண்டிருப்பதைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது.
 
[[பகுப்பு: மொழியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பட_எழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது