நொய்யல் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
 
இந்த பெரியாறு மட்டும் நொய்யல் என அழைக்கப்படுவதில்லை. இத்துடன் தூத்துமலை ஓடை, கொடுவாய்புடி ஓடை பெரியாறு ஓடை ஆகியவை ஒன்று சேர்ந்து சின்னாறு என அழைக்கப்படுகிறது. இந்த சின்னாறு சாடி வயல் வழியாக நாம் ஏற்கனவே கூறிய பெரியாறுடன் சோலை படுகையில் ஒன்று சேர்கிறது.
பெரியாறு சின்னாறு சேர்ந்த உடன் இவற்றுடன் மேற்கு தொடர்ச்சி மலையில் 20 ஓடைகளை ஒன்று சேர்த்துவரும் தொள்ளாயிரம் மூர்த்தி (Vaidhei falls) கண்டி என்ற ஆறும் தொம்பிலிபாளையத்தில் ஒன்று சேர்கிறது. இந்த தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி ஆற்றில்தான் வைதேகி அருவி உள்ளது. தொம்பிலிபாளையத்தில் ஏறக்குறைய எல்லா ஆறுகளும் ஒன்று சேர்ந்த பின்னர்தான் அங்கு நொய்யல் என பெயர் பெறுகிறது. பின்னர் பேரூர், கோவை நகர், சூலூர், திருப்பூர், கொடுமணல், காங்கயம் வழியாக கரூர் மாவட்டம் சென்று நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது. நொய்யலின் நீளம் 180 கிலோ மீட்டர். இந்த ஆற்றின் சராசரி அகலம் 30 அடி. நொய்யலில் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பு அணைகள் 32.
நொய்யல் ஆற்றில் ஆண்டு முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதில்லை. ஆனால் ஏறத்தாழ ஆலந்துறை வரை ஆண்டுக்கு 10 மாதங்கள் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீரையும் மழை காலத்தில் கிடைக்கும் பெரும் வெள்ளத்தையும் நாம் முறைாக பயன்படுத்தினால் கோவை மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சமே வராது.
நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும்போது அதை தடுப்பணையில் தடுத்து அங்கிருந்து சிறிய வாய்கால்கள் மூலம் குளங்களுக்கு நீரை கொண்டுசெல்லும் முறை நொய்யலில் பயன்படுத்தப்படுகிறது. நொய்யலில் பெரும் வெள்ளம் செல்லும்போது பலரும் இந்த நீரை அப்படியே குளங்களுக்கு திருப்பினால் என்ன என கேள்வி கேட்கின்றனர். இது மிகவும் அபாயகரமானது. காரணம் நொய்யல் ஆற்றில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அதன் வேகம் மாறுபட்டுக்கொண்டே இருக்கும். இந்த நீரை குளங்களுக்கு திருப்பினால் ஒரு சில மணி நேரங்களில் குளம் நிரம்பிவிடும். பின்னர் இந்த நீரை தடுக்க இயலாமல் குளமே காணாமல் போய்விடும். எனவே தான் நொய்யல் ஆற்று நீரை தடுத்து வாய்க்கால்கள் மூலம் குளங்கள் நிரப்பப்படுகிறது. கிளை வாய்க்கால்கள் மூலம் குளங்களை நிரப்பும் முறை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் காலத்திலும் பின்னர் மதுரையில் பாண்டிய மன்னர்கள் காலத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/நொய்யல்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது