பிரான்சுவா மன்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பிரான்சுவா மன்சா''' (23 சனவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''பிரான்சுவா மன்சா''' (23 சனவரி 1598 - 23 செப்டெம்பர் 1666) என்பவர் ஒரு பிரெஞ்சுக் கட்டிடக்கலைஞர். இவரே பிரான்சின் பரோக் கட்டிடக்கலையில் செந்நெறியியத்தை அறிமுகம் செய்தவராகக் கருதப்படுகின்றார். உயர் தரமான மெருகு, நயம், நேர்த்தி என்பவை பொருந்திய ஆக்கங்களை உருவாக்கிய இவரே 17 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பிரெஞ்சுக் கட்டிடக்கலைஞர் எனப் ''பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்'' கூறுகின்றது.
 
இவரைப் பொதுவாக மன்சா எனவே அழைத்தனர். கட்டிடங்களில் இரண்டு வெவ்வேறு சரிவுகளைக் கொண்ட, நாற்புறம் சரிந்த கூரைகளை இவர் பயன்படுத்தினார். கூடிய சரிவு கொண்ட கூரைப் பகுதியில் சாளரங்களை அமைத்து, உயரமான கூரைப் பகுதிக்குக் கீழ், மக்கள் பயன்படுத்துவதற்கு உகந்த இடவசதிகளை உருவாக்கினார். இவ்வாறான கூரைகள் பின்னர் இவரது பெயரில், ''மன்சார்ட் கூரை'' (mansard roof) எனப் பெயர்பெற்றது.
 
[[பகுப்பு:கட்டிடக்கலைஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சுவா_மன்சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது