லைப்சிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|de}} →
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 2:
'''லைப்சிக்''' ([http://upload.wikimedia.org/wikipedia/commons/7/73/Leipzig.ogg ''Leipzig'']) அல்லது '''லீப்சிக்''' (ஆங்கில ஒலிப்பு) [[செருமனி]]யின் கூட்டாட்சி மாநிலமான [[சக்சனி]]யில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் ஆகும். 17 ஆம் நூற்றாண்டில் லீப்சிக், [[இசை]], [[வானியல்]], [[ஒளியியல்]] ஆகிய கல்வி மற்றும் பண்பாட்டுத் துறைகளில், ஒரு முக்கிய மையமாகத் திகழ்ந்தது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்குப்]] பின்னர் இது [[பொதுவுடமை]]ச் [[செருமன் சனநாயகக் குடியரசு|செருமன் சனநாயகக் குடியரசின்]] முக்கிய நகர்ப்புற மையங்களில் ஒன்றானது.
 
லீப்சிக்கின் மையப்பகுதியில் அமைந்துள்ள நிக்கோலாய் தேவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் ஊடாக இந்நகரம், பொதுவுடமையின் வீழ்ச்சியிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது. 2000 ஆண்டில் இடம்பெற்ற [[செருமனிகளின் ஒன்றிணைப்பு]]க்குப் பின்னர், இந்நகரம் பொருளாதார அடிப்படையிலும், சமூகவியல் அடிப்படையிலும் பெரும் மாற்றங்களுக்கு உள்ளானது. இதன் ஒரு பகுதியாக, புதிய [[போக்குவரத்து உட்கட்டமைப்பு]] வளர்ச்சிகளும், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமைய மறுசீரமைப்பும் இடம்பெற்றுள்ளன. 2006 ஆம் ஆண்டில் லீப்சிக்கில் முக்கியமான உலகக் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்றுள்ளன.
 
== புவியியல் ==
செருமானியில் வட ஐரோப்பிய சமவெளியின் பகுதியான வட செருமன் சமவெளியின் தென்கிழக்கு பகுதியில், லைப்சிக் விரிகுடாவில் உள்ள முகத்துவாரத்தில் லைப்சிக் நகரம் அமைந்துள்ளது. இந்த தளம் சதுப்புநில் பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் வடக்கே சில சுண்ணாம்புக் கரடுகளை கொண்ட பகுதிகளும் காணப்படுகின்றன. நகர எல்லைக்குள் சில வன பூங்காக்கள் காணப்பட்டாலும் லைப்சிக்கை சுற்றியுள்ள பகுதி ஒப்பீட்டளவில் காடற்றது. 20 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் பல திறந்தவெளி சுரங்கங்கள் இருந்தன. அவற்றில் பல ஏரிகளாக மாற்றமடைந்துள்ளன.<ref>Haase, Dagmar; Rosenberg, Matthias; Mikutta, Robert (1 December 2002). "Untersuchung zum Landschaftswandel im Südraum Leipzig". ''Standort'' (in German). '''26'''(4): 159–165. doi:10.1007/s00548-002-0103-3. ISSN 0174-3635.</ref>
 
1992 ஆம் ஆண்டு முதல் லைப்சிக் நிர்வாக ரீதியாக பத்து மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மொத்தம் 63 துணைப்பிரிவுகள் உள்ளன.
 
== காலநிலை ==
கோப்பனின் காலநிலை வகைப்பாட்டுக்கமைய செருமனியின் கிழக்குப் பகுதிகளில் அமைந்துள்ள பல இடங்களைப் போன்றே லைப்சிக் நகரமும் கடல்சார் காலநிலையைக் கொண்டுள்ளது. குளிர்காலம் லேசானது குளிர்காலத்தின் சராசரியாக வெப்பநிலை 1 ° C (34 ° F) ஆகும். கோடை பொதுவாக வெப்பமாக இருக்கும். கோடையின் சராசரி வெப்பநிலை 19 ° C (66 ° F) ஆகும். குளிர்காலத்திற்கும், கோடைகாலத்திற்கும் இடையிலான சூரிய ஒளியின் அளவு வேறுபடுகின்றது. ஒப்பீட்டளவில் திசம்பர் மாதத்தில் கிடைக்கும் சூரிய ஒளியை விட சூலை மாதத்தில் கிடைக்கும் சூரிய ஒளியின் அளவு அதிகமாகும். திசம்பர் சராசரி மாதத்தில் சராசரியாக 51 மணி நேரம் சூரிய ஒளியும் (நாளொன்றுக்கு 1.7 மணி நேரம்), சூலை மாதத்தில் 229 மணிநேரம் சூரிய ஒளியும் கிடைக்கின்றது.<ref>{{Cite web|url=https://www.dwd.de/EN/ourservices/klimakartendeutschland/klimakartendeutschland.html?nn=519080|title=Wetter und Klima - Deutscher Wetterdienst - Climate monitoring - Germany - Climatological maps of Germany|website=www.dwd.de|access-date=2019-11-10}}</ref>
 
== சான்றுகள் ==
{{Reflist}}
[[பகுப்பு:செருமானிய நகரங்கள்]]
[[பகுப்பு:உலகக்கோப்பை கால்பந்து நடைபெற்ற நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/லைப்சிக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது