ஈலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
 
 
'''ஈலாம்''' (Elam) இன்றைய தென் மேற்கு [[ஈரான்|ஈரானில்]] செழித்திருந்த பண்டைக்கால நாகரிகம் ஒன்றைக் குறிக்கும். இன்றைய ஈரானின் தூர மேற்கு, தென்மேற்கு ஈரான் ஆகியவற்றை மையப்படுத்தி அமைந்திருந்த இது, [[குசெசுத்தான்]], [[ஈலம் மாகாணம்]] ஆகியவற்றின் தாழ்நிலப் பகுதிகளிலிருந்து [[கெர்மான் மாகாணம்|கெர்மான் மாகாணத்தில்]] உள்ள சிரோஃப்ட் (Jiroft), எரிந்த நகரமான [[சபோல்]] (Zabol) என்னும் இடங்கள் வரை பரந்திருந்ததுடன், தென் [[ஈராக்]]கின் சிறிய பகுதியொன்றையும் உள்ளடக்கி இருந்தது. [[பண்டைய அண்மைக் கிழக்குப்கிழக்கு]]ப் பகுதியின் முதன்மையான் அரசியல் சக்திகளில் ஒன்றாக ஈல அரசுகள் விளங்கின.<ref>Elam: surveys of political history and archaeology, Elizabeth Carter and Matthew W. Stolper, University of California Press, 1984, p. 3</ref>
 
பண்டைய [[மெசொப்பொத்தேமியா]]வுக்குச் சற்றுக் கிழக்கே அமைந்திருந்த இந்தப் பகுதி அக்கால நகராக்கத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்தது. கிமு 3000 ஆண்டளவில் தொடங்கிய எழுத்துப் பதிவுகளும் மெசொப்பொத்தேமிய வரலாற்றுக்கு இணையாகவே அமைந்தன. [[நடு வெண்கலக் காலம்|நடு வெண்கலக் கால]] ஈலம் [[அன்சான்|அன்சானை]] (Anshan) மையமாகக் கொண்டு [[ஈரானியச் சமவெளி]]யிலும், பின்னர் கிமு இரண்டாவது ஆயிரவாண்டில் இருந்து குசெசுத்தான் தாழ்நிலப் பகுதியில் இருந்த [[சூசா (ஈரான்)|சூசா]]வை மையமாகக் கொண்டும் அமைந்திருந்தது.<ref>Elam: surveys of political history and archaeology, Elizabeth Carter and Matthew W. Stolper, University of California Press, 1984, p. 4</ref> இதன் பண்பாடு, [[குட்டியப் பேரரசு|குட்டியப் பேரரசில்]], சிறப்பாக [[ஆக்கிமெனிட் வம்சம்|ஆக்கிமெனிட் வம்சக்]] காலத்தில், முக்கிய பங்காற்றியது. அக்காலத்தில் [[ஈல மொழி]] பேரரசின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/ஈலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது