உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: MassMessage delivery
வரிசை 119:
 
இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் [[விக்கிப்பீடியா:ஆசிய மாதம்/பங்கேற்பாளர்கள்|பங்களிப்பினை]] தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 23:12, 3 நவம்பர் 2019 (UTC)
 
== வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்! ==
 
{{Shortcut|[[WP:TIGER2]]}}
[[File:Emoji_u1f42f-2.0.svg|100px|இடது]]
 
வணக்கம். [[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0|வேங்கைத் திட்டம் 2.0]] ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.
 
இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் {{ping|Sridhar G|Balu1967|Fathima rinosa|Info-farmer|கி.மூர்த்தி}} ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் {{ping|Balajijagadesh|Parvathisri|Dineshkumar Ponnusamy}} ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் [[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
 
இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.
 
சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.
 
இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.
 
போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.
 
இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.
 
வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.
 
நன்றி. --[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)
<!-- Message sent by User:Ravidreams@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Ravidreams/lists/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_2.0&oldid=2845324 -->
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:SivakumarPP" இலிருந்து மீள்விக்கப்பட்டது