கிழக்குத் தொடர்ச்சி மலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
'''மதேஸ்வரன் மலை'''
 
தெற்கு கர்நாடகாவின் [[சாமராசநகர் மாவட்டம்|சாமராஜாநகர் மாவட்டத்தில்]] [[கொல்லேகால்]] தாலுகாவில் [[மலை மாதேஸ்வர கோயில்| மாதேஸ்வரன் மலை]] அமைந்துள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள இம்மலை [[மைசூர்|மைசூரில்]] இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவிலும், [[பெங்களூர்|பெங்களூரில்]] இருந்து சுமார் 210 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. கடல் மட்டத்திற்கு 3000 அடி மேலே அமைந்துள்ள இம்மலை ஒரு புன்னியபுண்ணிய தலமாக விளங்குகிறது.
 
'''சவ்வாது மலை'''
 
வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்தில் [[சவ்வாது மலை|சவ்வாது மலைத்தொடர்]] 262 ச.கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. [[தென்பெண்ணை ஆறு]] மற்றும் [[பாலாறு]] ஆறுகளுக்கிடையில் உள்ள இம்மலையின் சராசரி உயரம் 1060 மீட்டரில் இருந்து 1160 வரை ஆகும். கிழக்குத்தொடர்ச்சி மலையில் ஒன்றான ஜவ்வாது மலை சுமார் 80 கி.மீ. நீளம் 32 கி.மீ. அகலத்துடன் வடகிழக்கு-தென்மேற்காக தமிழ்நாட்டின் வடபகுதியில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் வட்டத்தில் ஆரம்பித்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் வரை பரவியுள்ளது. இம்மலை 150 ச.கி.மீ. பரப்பளவில் கிழக்கே போளூர், மேற்கே அமிர்தி, வடக்கே ஆலங்காயம் ஒன்றியங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2315 மீ முதல் 3000 மீ. வரை உயரம் கொண்டுள்ளது. 20.7°c முதல் 36.6°c வரை சீதோஷ்ணநிலை நிலவும் பகுதியாக உள்ளது. இம்மலையின் சராசரி மழையளவு 1000.85 மி.மீ.ஆகும். இம்மழையின் பெரும்பகுதி தென்மேற்கு (480 மி.மீ) மற்றும் வடகிழக்கு (429 மி.மீ.) பருவமழையின் மூலமமாக கிடைக்கிறது. செய்யாறு, ஆரணியாறு, கமண்டலாநதி, மிருகண்ட நதி போன்ற நதிகள் இம்மலையிலிருந்து உற்பத்தியாகின்றன. இம்மலையின் மேல் [[பீமன் நீர்வீழ்ச்சியும்]], மலையின் வடபகுதியில் [[அமிர்தி நீர்வீழ்ச்சி]]யும் மேற்குப் பகுதியில் [[ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி]]யும் சிறு சுற்றுலா மையங்களாக விளங்கிவருகின்றன. அமிர்தியில் உள்ள வனவிலங்கு பூங்கா சிறுவர்களுக்கு ஏற்ற சுற்றுலா மையம் ஆகும். ஜவ்வாது மலையின் ஒரு பகுதியான [[ஏலகிரி மலை]] வேலுர்வேலூர் மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது.
 
'''கல்வராயன் மலை'''.
 
சவ்வாது மலையின் தெற்கு முனையிலிருந்து 40 கிலோமீட்டருக்கு அப்பால் கல்வராயன் மலைத்தொடர் ஆரம்பமாகிறது. கள்வர் இனத்தவரின் பூர்விக வாழ்விடம் என்பதால் இம்மலை இப்பெயர் பெற்றது. இம்மலையின் தென்மேற்கு பகுதி சேலம் மாவட்டத்தின் ஆத்தூர் வட்டத்திலும் மேற்குப் பகுதி விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திலும் வடக்கு திசையில் ஒரு சிறு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டத்த்தில்மாவட்டத்தில் செங்கம் வட்டத்திலும் அமைந்துள்ளது. தென்மேற்கில் சேலம் மாவட்டத்தை உள்ளடக்கி மேற்கு தொடர்ச்சி மலையை தொட்டுக் கொண்டுள்ளவாறு கல்வராயன் மலை அமைந்துள்ளது. வடக்கே சாத்தனூர் அணைக்கட்டும், தெற்கே ஆத்தூர் கணவாயும், கிழக்கே மணிமுத்தாறு அணையும், மேற்கே சித்தேரி மலையும் இம்மலையின் எல்லைகளாக உள்ளன. கல்வராயன் மலை.இந்த மலைத்தொடர் அதனைச் சுற்றியுள்ள கிழக்குப் பகுதிகளுக்கு வடமேற்கு பருவகாற்றின் மூலமாக அதிக மழைபொழிவைமழைப்பொழிவைக் கொண்டு வருகிறது. [[கோமுக்கி ஆறு]] இம்மலையில் இருந்து உற்பத்தியாகி காவிரி ஆற்றுக்கு இணையாகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
 
'''வெளிகொண்டா மலை'''
வரிசை 42:
ஆந்திர பிரதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் பாலாற்றுக்கு வடக்கே உள்ள [[வெளிகொண்டா மலை]] கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது.
.'''நல்லமல்லா மலை'''
 
கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான [[நல்லமல்லா மலை]] ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள [[கர்நூல்]], [[மகபூப்நகர்]], [[குண்டூர்]],[[பிரகாசம்]] மற்றும் [[கடப்பா]] மாவட்டங்கள் வரை நீண்டுள்ளது. [[கிருஷ்ணா]] மற்றும் [[பென்னாறுபெண்ணாறு]] ஆறுகளுக்கிடையே [[கோரமண்டல் கடற்கரை]]க்கு இணையாக 430 கிலேமீட்டர் தொலைவில் கிட்டத்தட்ட வடக்கு தெற்கு சீரமைப்புடன் இம்மலை காணப்படுகிறது. இம்மலையின் வடக்கு எல்லையில் தட்டையான [[பல்நாடு]] வடிநிலமும் தெற்கில் திருப்பதி மலையும் எல்லைகளாக உள்ளன. நல்லமல்லா மலையின் சராசரி உயரம் கடல்மட்டத்திலிருந்து சுமார் 520 மீட்டர்கள் ஆகும். இந்த உயரம் [[பைரானி கொண்டா]]வில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1100 மீட்டர்களாகவும் [[குண்டலா பிரம்மேஸ்வரா]]வில் சுமார் 1048 மீட்டர்களாகவும் உயர்ந்துள்ளது.
 
'''திருமலை'''
"https://ta.wikipedia.org/wiki/கிழக்குத்_தொடர்ச்சி_மலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது