தவறிய அழைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Missed call" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

08:43, 16 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

தவறிய அழைப்பு என்பது ஒரு தொலைபேசி அழைப்பாகும். தொலைபேசியில் இருந்து அழைக்கும் நபர் வேண்டும் என்றே அழைக்கப்படும் நபர் அழைப்பை ஏற்கும் முன்னரே நிறுத்திவடிவது. இதன் மூலம் முன்னமே ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தியினை இருவரும் பகிர்ந்துக்கொள்கின்றனர். இது ஒரு பிட் செய்தியிடலின் ஒரு வடிவமாகக் கொள்ளலாம்.

A blue phone handset icon lying horizontally in the center of the image with a reddish-orange arrow, the head at the left, bouncing diagonally off the top
தவறிய அழைப்புக்கான படவுரு

வளர்ந்து வரும் சந்தை நாடுகளில் தவறிய அழைப்புகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். அலைப்பேசியில் குறைந்த அளவு வெளிச்செல்லும் அழைப்புகளைக் கொண்ட பயனர்கள் இவ்வாறு அதிகம் பயன்படுத்துகின்றனர். அழைக்கப்படும் நபர் அழைப்பை ஏற்கும் முன்னரே அழைப்பு நிறத்தப்படுவதால் அழைக்கும் நபருக்கு எந்த செலவும் ஏற்படுவது இல்லை. இதனால் அழைக்கும் நபரின் அலைபேசியின் முன் செலுத்தப்பட்ட தொகை காக்கப்படுகிறது. சில நாடுகளில் ஒவ்வொரு தகவல்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் தவறிய அழைப்புகள் கொடுக்குமாறு செய்யப்பட்டுள்ளது. தவறிய அழைப்புகளை ஆப்ரிக்காவில் சில நாடுகளில் பீப்பிங் என்றும் [1] [2] நைஜீரியாவில் பிலாசிங் என்றும், [3] பாக்கிஸ்தானில் பிலாசுகால் என்றும், [4] பிலிப்பைன்ஸ் நாட்டில் மிஸ்கால் என்றும் அழைக்கின்றனர்.

தவறிய அழைப்புகள் இந்தியாவில் குறிப்பாக முக்கியத்துவம் பெறுகிறது. தகவல்தொடர்பு முறையாக அவற்றின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதன் மூலம், அவை சந்தைப்படுத்தல் தகவல்தொடர்புகளின் ஒரு வடிவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதில் பயனர்கள் குறிப்பிட்ட எண்களுக்கு "தவறிய அழைப்பு" கொடுத்தால் விளம்பரம் மற்றும் பிற உள்ளடக்கங்களைக் கொண்ட அழைப்பு அல்லது குறுஞ்செய்தியை திரும்பப் பெறலாம். திறன்பேசிகளுக்கு மாறாக இந்தியாவில் அம்ச தொலைபேசிகள் இன்னும் பொதுவானவை என்ற நிலைமையைப் பயன்படுத்திக்கொள்ள, மற்றும் பிற வகையான சேவைகளுக்கும் தவறிய அழைப்புகள் பயன்படுத்துகின்றன.

குறிப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவறிய_அழைப்பு&oldid=2850510" இலிருந்து மீள்விக்கப்பட்டது