"அசோகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  6 மாதங்களுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அசோகரின் சொந்த கல்வெட்டுகள் அவரது இளமைக்கால வாழ்க்கையை பற்றி விளக்கவில்லை. அதைப்பற்றிய செய்திகளானவை அவரது இறப்பிற்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட உறுதிப்படுத்தப்படாத புனைவுகள் மூலமே நமக்குக் கிடைக்கின்றன.{{sfn|Lahiri|2015|p=27}} உதாரணமாக ''அசோகவதனா'' என்னும் நூலில் அசோகர் தனது முற்பிறவியில் ஜெயா என்ற பெயர் உடையவனாக பிறந்ததாகவும் பாடலிபுத்திரத்தில் இருந்து சக்கரவர்த்தி அரசனாக ஆட்சி செய்வாய் என்று கௌதம புத்தர் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறியதாகவும் கூறப்பட்டுள்ளது.{{sfn|Singh|2008|p=332}} இந்த புனைவுகள் வெளிப்படையாக கற்பனைகள் என்று கருதப்படுகின்ற போதிலும் அசோகரின் காலத்தைப் பற்றிய நம்பத்தகுந்த வரலாற்று செய்திகளை உள்ளடக்கியுள்ளன.{{sfn|Lahiri|2015|p=27}}
 
அசோகர் பிறந்த சரியான தேதி என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஏனெனில் அந்நேரத்தில் எழுதப்பட்ட இந்திய நூல்கள் அதைப் பற்றிய செய்தியை பதிவிடவில்லை. இவர் கி. மு. 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்பது நமக்குத் தெரிகிறது. ஏனெனில் கி. மு. 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்வேறு சமகால ஆட்சியாளர்களின் காலங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் ஆன்டியோசுஸ் இரண்டாம் தியோஸ், தாலமி இரண்டாம் பிலடெல்பஸ், ஆன்டிகோனஸ் இரண்டாம் கோனடாஸ், சைரீனின் மகஸ், மற்றும் அலெக்சாண்டர் (எபிரஸின் இரண்டாம் அலெக்சாண்டர் அல்லது கோரிந்தின் அலெக்சாண்டர்).{{sfn|Lahiri|2015|p=25}} வரலாற்று ஆதாரங்கள் அசோகர் கி. மு. 4 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது கி. மு. 3 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் (அண். கி. மு. 304) பிறந்ததாக நமக்கு காட்டுகின்றன,{{sfn|Lahiri|2015|p=24}} இவர் கி. மு. 269-268232 இல் ஆட்சிக்கு வந்தார்.{{sfn|Lahiri|2015|p=25}}
 
===பெயர்கள்===
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2851592" இருந்து மீள்விக்கப்பட்டது