தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளியிணைப்புக்கள்: clean up, replaced: பிரதேசச் → பிரதேச using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Updated link
வரிசை 59:
|footnotes =
}}
'''சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவு''' அல்லது '''தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவு''' (Thenmaradchi Divisional Secretariat) [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டின்]] [[தென்மராட்சி]]ப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 60 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது. [[அல்லாரை]], [[கொடிகாமம்]], [[சாவகச்சேரி]], [[வரணி]], [[தாவளை]], [[இயற்றாளை]], [[குடமியான்]], [[நாவற்காடு]], [[இடைக்குறிச்சி]],[[மந்துவில்]], [[எழுதுமட்டுவாள்]], [[கச்சாய்]], [[கைதடி]], [[சந்திரபுரம்]], [[கல்வயல்]], [[கரம்பகம்]], [[கரம்பைக்குறிச்சி]], [[கெற்பெலி]], [[கோயிலாக்கண்டி|கோவிலாக்கண்டி]], [[மீசாலை]], [[மட்டுவில்]], [[நுணாவில்]], [[மறவன்புலவு]], [[மிருசுவில்]], [[நாவற்குழி]], [[பாலாவி]], [[ராமவில்]], [[சங்கத்தானை]], [[சரசாலை]], [[தனங்கிளப்பு]], [[உசன்]], [[வெள்ளாம்போக்கட்டி]], [[விடத்தல்பளை]] ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. மேற்கு, தெற்கு எல்லைகளில் நீரேரிகளும், கிழக்கில் [[கிளிநொச்சி]] மாவட்டமும், நீரேரியும், வடக்கில் [[நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவு]]ம், கிழக்கில் [[கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவு|கோப்பாய்]], [[கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவு|கரவெட்டி]] ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளன.
 
இப்பிரிவு 221 [[சதுர கிலோமீட்டர்]] பரப்பளவு கொண்டது<ref>[http://www.statistics.gov.lk/Abstract_2006/abstract2006/table%202007/CHAP%201/AB1-2.pdf புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை]</ref>.