மேலவளவு படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎விடுதலை: நீதிமன்ற தலையீடு , அரசியல் கட்சிகளின் கருத்துகள்
வரிசை 21:
 
== விடுதலை ==
2008இல் , அண்ணா பிறந்தநாளில் மூன்று பேர் நன்னடத்தைக் காரணமாக [[திமுக]] ஆட்சிகாலத்தில் முன்விடுதலை செய்யப்பட்டனர்.<ref>{{cite web|url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=542434|title=சாதி வன்மத்தால் நடந்த கொலையில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன் ?: மேலவளவு வழக்கில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி|work=www.dinakaran.com}}</ref>மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேர் [[அதிமுக]] ஆட்சிக்காலத்தில் 2019இல் விடுதலை செய்யப்பட்டனர்.<ref>{{cite web|url=https://minnambalam.com/k/2019/11/18/31/melavalavu-massacre-case-13-lifetime-prisoners-release-high-court-qustion|title=மேலவளவு படுகொலை வழக்கு-விடுதலை: உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!|work=மின்னம்பலம்}}</ref><ref>https://frontline.thehindu.com/dispatches/article29963867.ece</ref>
 
=== நீதிமன்ற தலையீடு ===
குற்றவாளிகளின் விடுதலை செய்ய பிரப்பிக்கப்பட்ட அரசாணை நகலை வழங்கக்கோரி மூத்த வழக்கறிஞர் ஒருவர் [[சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை|உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்]] மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் 13 பேர் விடுதலை தொடர்பான அரசாணையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பான அதிகாரிகளை நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டனர். <ref>https://www.thehindu.com/news/national/tamil-nadu/court-seeks-tamil-nadu-governments-response-on-release-of-13-convicts-in-melavalavu-massacre-case/article30025405.ece</ref>இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த வெங்கடேஷ் அமர்வு முன்பு 20 நவம்பர் , 2019 அன்று விசாரணைக்கு வந்தது. சிறைத்துறை டி.ஐ.ஜி, எஸ்.பி.மற்றும் அதிகாரிகள் ஆஜராகினர். சிறைத்துறை அதிகாரிகள், 13 பேர் விடு விக்கப்பட்ட அரசாணையை தாக்கல் செய்தனர். அப்போது நீதிபதிகள் , கொலை வழக்கில் கைதானவர்களின் தண்டனையை [[இந்திய உச்ச நீதிமன்றம்|உச்ச நீதிமன்றம்]] உறுதிப்படுத்தி யுள்ள நிலையில் தமிழக அரசு ஒரு அரசாணை மூலம் விடுவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது எனக் கூறினர். கொலை வழக்கில் தண்டிக்கப் பட்டுள்ள நிலையிலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.<ref>https://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/nov/21/melavalavu-case-hc-poser-to-govt-on-convicts-release-2064752.html</ref>
 
=== அரசியல் கட்சிகளின் கருத்துகள் ===
[[விடுதலைச் சிறுத்தைகள் கட்சி|விடுதலைச் சிறுத்தைகள்]] , மற்றும் [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி]] இந்த விடுதலையை எதிர்த்து கருத்து தெரிவித்தன .<ref>http://tncpim.org/மேலவளவு-படுகொலையில்-விடு/</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மேலவளவு_படுகொலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது