கோலா தீபகற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
 
நோவ்கோரோட் குடியரசு 1471 இல் மாஸ்கோவின் கிராண்ட் டச்சியிடம் தீபகற்பத்தின் கட்டுப்பாட்டை இழந்தது. ஆனால், உருசிய குடியேற்றம் நிறுத்தப்படவில்லை. பல புதிய குடியேற்றங்கள் 16 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டன. சமி மற்றும் போமோர் மக்கள் அடிமைத்தனத்திற்குள் தள்ளப்பட்டனர். 16 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், இத்தீபகற்பம் [[உருசியாவின் சாராட்சி]] மற்றும் டென்மார்க்-நோர்வே இராச்சியம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு சர்ச்சைக்குரிய பேசுபொருளாக மாறியது, இதன் விளைவாக உருசியாவின் நிலைப்பாடு வலுப்பெற்றது. 19 ஆம் நூற்றாண்டின் முடிவில், பழங்குடி சமி மக்கள் உருசியர்களாலும், புதிதாக வந்துள்ள இஷ்மா கோமி மற்றும் யாரன் மக்கள் (ஒருவகையான கலைமான் தொற்று நோயிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வெண்ளைக் கடலுக்குத் தென் கிழக்கில் உள்ள தங்களின் தாய் நிலப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள்) என்று அழைக்கப்படுபவர்களாலும் வடக்கு நோக்கி செல்ல கட்டாயப்படுத்தப்பட்டனர், இப்பகுதியின் அசலான நிர்வாக மற்றும் பொருளாதார மையம் கோலா, கோலா ஆற்றின் கரையோரத்தில் கோலா விரிகுடாவில் அமைந்துள்ளது. இருப்பினும், 1916 ஆம் ஆண்டில், ரோமானோவ்-நா-முர்மானே (இப்போது [[மூர்மன்சுக் மாகாணம்|மூர்மன்சுக்]] ) விரைவாக தீபகற்பத்தின் மிகப்பெரிய நகரமாகவும் மற்றும் துறைமுக நகரமாகவும் மாறியது.
 
சோவியத் காலகட்டத்தில் மக்கள் தொகை விரைவாக அதிகரித்தது. இருப்பினும் பெரும்பாலானவை கடற்கரை மற்றும் இருப்புப் பாதைகளில் நகரமயமாக்கப்பட்ட பிரதேசங்களுடன் மட்டுமே இந்த மக்கள் தொகை அதிகரிப்பு வரையறைக்குட்பட்டதாக இருந்தது. சமி மக்கள் லோவோசெரோ மற்றும் பிற மையப்படுத்தப்பட்ட குடியேற்றங்களுக்கு கட்டாயமாக இடமாற்றம் செய்வது உட்பட கட்டாய கூட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டனர். பெரும்பாலும் அதன் உத்திநோக்கு நிலை மற்றும் 1920 களில் பரந்த அபதைற்று வைப்புகளைக் கண்டுபிடித்தது ஆகியவற்றால் ஒட்டுமொத்தமாக தீபகற்பம் பெரிதும் தொழில்மயமாக்கப்பட்டு இராணுவமயமாக்கப்பட்டது. இதன் விளைவாக, தீபகற்பமானது இராணுவ அணுக்கழிவுகளால் மாசுபாடு மற்றும் நிக்கல் உருகுதல் உள்ளிட்ட பெரிய சுற்றுச்சூழல் சேதங்களை சந்தித்தது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கோலா_தீபகற்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது