உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 85:
 
வணக்கம், விக்கிபீடியாவில் எழுதத்தொடங்கிய காலம் முதல் என் எழுத்திற்கு ஊக்கம் தரும் சக மற்றும் மூத்த விக்கிபீடியர்களுக்கு என் நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். கட்டுரை நீக்கம் தொடர்பான என் ஆதங்கமே இப்பதிவு. புதுக்கோட்டையில் கணினி தமிழ்ச்சங்கம் நடத்திய இரு நாள் இணையத் தமிழ்ப்பயிற்சி முகாமின்போது, இரண்டாம் நாளில் (13 அக்டோபர் 2019) விக்கிபீடியாவில் பதிவுகளைப் பதிதல் தொடர்பான என் எண்ணங்களை, திரு என்னாரெஸ் பெரியார் உடன் இணைந்து பகிர்ந்துகொண்டேன்.திரு நீச்சல்காரன் உடன் என் கருத்துகளைப் பரிமாறும் வாய்ப்பும் கிடைத்தது. அப்போது நேரடியாக ஒரு கட்டுரையினைப் பதிவு செய்வது தொடர்பான வழிமுறைகளை பார்வையாளர்களுக்கு உதாரணங்களோடு விளக்கி நா. அருள்முருகன் தொடர்பான ஒரு கட்டுரையினை தொடங்கினேன். பின் தஞ்சாவூர் வந்தபின் தரவுகளை இணையத்தில் தேடி ஒரு நாளைக்கு மேல் உழைத்து அக்கட்டுரையினை மேம்படுத்தினேன். தொடர்ந்து செய்திகளை இணைத்து in use என்ற குறியீட்டினைத் தந்து கட்டுரையினை மேம்படுத்திக்கொண்டே வந்தேன். இதற்கிடையில் வேங்கைத்திட்டபோட்டி அறிவிப்பும் ஆசிய மாதப் போட்டி அறிவிப்பும் வரவே அவற்றில் கவனத்தைத் திருப்பினேன். அப்போது நா. அருள்முருகன் கட்டுரை நீக்கப்பட்டதாக செய்தி வந்தது. என் கவனம் முழுக்க முழுக்க போட்டியில் இருந்தபடியால் நா. அருள்முருகன் கட்டுரையில் மேம்பாடு செய்வதிலோ, அதில் குறைகளிருப்பின் சரிசெய்வதிலோ என் கவனம் செல்லவில்லை. நா. அருள்முருகன் கட்டுரை நீக்கப்பட்டது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. சுமார் 800 ஆவது கட்டுரையை நெருங்கிவரும் நிலையில், இதுபோன்ற நீக்கல்கள் விக்கிபீடியாவிற்கு பங்களிப்பு செய்வதான ஆர்வத்தினையேக் குலைத்துவிடுகிறது. ஒரு கட்டுரை in use என்றுகுறிப்பிட்டு தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் நிலையில் நீக்கப்பட்டது எனக்கு வேதனையைத் தந்தது. இதற்கு முன்னர் பல வரலாற்று அறிஞர்கள், தமிழறிஞர்கள், கவிஞர்கள் போன்றோரைப் பற்றி பதிவுகளை எழுதியதோடு, அவர்களைப் புகைப்படம் எடுத்தும், உரிய சான்றினைத் தந்தும் அவ்வப்போது பதிவுகளை மேம்படுத்தி வருகிறேன். அதனையொட்டியே நா. அருள்முருகன் கட்டுரையினையும் ஆரம்பித்து எழுதி வந்தேன். என் பதிவில் தவறோ, விடுபாடோ இருக்க வாய்ப்புள்ளது. சக விக்கிபீடியர்களோ, மூத்த விக்கிபீடியர்களோ சுட்டிக்காட்டினால் அதனைத் திருத்திக்கொள்வேன். ஆரம்பம் முதல் அவர்கள் தரும் கருத்துகளும் ஊக்கங்களுமே என் பதிவு நிலையை மேம்படுத்திக்கொள்ள துணையாக இருந்து வருகின்றன. தமிழில் இல்லாதவற்றைத் தமிழில் கொணர வேண்டும் என்ற எண்ணத்தில் ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து பலவற்றை மொழிபெயர்த்தும்கூட பதிவுகளை எழுதி வந்துள்ளேன். விரைவில் நா. அருள்முருகன் தொடர்பான பக்கத்தை மறுபடியும் தொடங்க உள்ளேன். மேற்கோளில் தவறு, இவர் இந்த தலைப்பிற்குள் வரமாட்டார், இது தொடர்பாக கூடுதல் விவரம் தேவை, இந்த மேற்கோள் நீக்கப்படலாம், இது ஏற்கப்படமுடியாது என்பன போன்ற கருத்துகளைத் தெரிவித்தால் நுணுக்கமாக அவற்றைக் கண்டு தேடி, பிழைகளைத் திருத்தி என்னை மேம்படுத்திக்கொள்வேன். நான் ஆரம்பித்த பல கட்டுரைகளை புதிய கருத்துகள் கிடைக்கும்போது சேர்த்தோ, புகைப்படங்களை இணைத்தோ பல நிலைகளில் மேம்படுத்தி வருகிறேன். நான் மேற்கொண்டு வரும் களப்பணியில் எடுக்கப்படும் புகைப்படங்களில் 80 விழுக்காட்டிற்கு மேலானவற்றை விக்கிபீடியா பொதுவகத்தில் பதிந்துள்ளேன். ஆரம்பம் முதலே இவ்வாறே நான் செய்துவருகிறேன். புதியவர்களை விக்கிபீடியாவில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வரவேற்பான சூழல் உள்ள நிலையில் ஆர்வமாக எழுதுபவர்களை ஊக்கம் கொடுத்து, குறைகளைச் சுட்டிக்காட்டி அரவணைத்துச் செல்வதே நலம் பயக்கும். உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் விக்கிபீடியாவில் என் பயணமும், பங்களிப்பும் தொடரும். மறுபடியும் நன்றி. --[[பயனர்:பா.ஜம்புலிங்கம்|பா.ஜம்புலிங்கம்]] ([[பயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம்|பேச்சு]]) 06:23, 16 நவம்பர் 2019 (UTC)
 
:ஆதங்கம் வேண்டாம். கட்டுரையை மீட்டுள்ளேன். முதலில் இருந்து மீண்டும் எழுத வேண்டிய தேவை இல்லை. உடனடியாக இக்கட்டுரையில் கவனம் செலுத்தி, தங்களால் இயன்ற அளவு மேம்படுத்துங்கள். குறிப்பிடத்தக்கமை நிறுவ எத்தகைய தகவல், சான்று தேவை என்றும் பேச்சுப் பக்கத்தில் கேட்டுள்ளேன். தொடர்ந்து ஊக்கத்துடன் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 10:19, 25 நவம்பர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:பா.ஜம்புலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது