விருதுநகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 81:
 
== வரலாறு ==
[[File:விருதுநகர்த் தெப்பக்குளம்.JPG|thumb|200px|right|விருதுநகரில் உள்ள மாரியம்மன் கோவிலின் தெப்பக்குளம்]]
16 ஆம் நூற்றாண்டில் விருதுநகர், மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பிற்கால பாண்டியர்களின் ஆட்சிப் பகுதியாகவே பலகாலம் இருந்துள்ளது. இவர்களின் வீழ்ச்சிக்குப் பின் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] பிரதிநிதிகளான [[மதுரை நாயக்கர்கள்|நாயக்கர்களின் நிர்வாகத்தின்]] கீழ் இருந்தது.<ref>{{Cite book |last=V.|first=Vriddhagirisan|page=115|authorlink= |title=Nayaks of Tanjore |year=1995 |origyear=1942 |publisher=Asian Educational Services |location=New Delhi |isbn=81-206-0996-4|ref=harv}}</ref> விஜய நகரப் பேரரசு வீழ்ச்சியடைந்தபோது, நாயக்கர்கள் சுதந்திரமாக ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். அதனால் மதுரை நாயக்க மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியானது. 1736 இல் இவர்களின் அதிகாரமும் முடிவுக்கு வந்தது. 18 ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் [[சந்தா சாகிப்]] (1740 – 1754), [[ஆற்காடு நவாப்]] மற்றும் [[மருதநாயகம்|முகம்மது யூசுப்கான்]] (1725 – 1764), ஆகியோர் பலமுறை தாக்குதல் நடத்தி ஆட்சியை கைப்பற்றினார்கள்.<ref>{{cite book|last=Harman|first=William. P|title=The sacred marriage of a Hindu goddess|year=1992|publisher=Motilal Banarsidass |isbn=978-81-208-0810-2|pages=30–36|url=https://books.google.com/books?id=F_siW9T3ev4C&pg=PA36|ref=harv}}</ref> 1801இல் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின்]] வசம் இப்பிரதேசம் வந்தபின் [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] ஒரு பகுதியானது. அவர்களின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தபின், மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.<ref>{{Citation |last=Markovits|first=Claude |authorlink= |title=A History of Modern India, 1480–1950|year=2004 |publisher=Wimbledon Publishing Company|page=253 |location=London |isbn=1-84331-152-6|url=https://books.google.com/books?id=uzOmy2y0Zh4C&pg=PA253&lpg=PA253|ref=harv}}</ref>
 
வரி 86 ⟶ 87:
 
இந்நகரத்தின் பெயர் 1875 இல் ''விருதுப்பட்டி'' என மாற்றப்பட்டது, 1923 ஏப்ரல் 6 ஆம் தேதி நகர சபை இதற்கு ''விருதுநகர்'' என்று பெயர் மாற்றியது. பிரித்தானிய ஆட்சியின் போது இது ஒரு முக்கியமான வர்த்தக மையமாக இருந்தது, மேலும் [[குலசேகரபட்டினம்]], [[தூத்துக்குடி]], [[வைப்பார் ஊராட்சி|வைப்பார்]] மற்றும் [[தேவிபட்டினம்]] துறைமுகங்கள் வழியாக விருதுநகரில் இருந்து பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
 
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coord|9|35|N|77|57|E|}} ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 102&nbsp;[[மீட்டர்]] (335&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. விருதுநகர் நகராட்சி 6.39 கிமீ 2 (2.47 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இது மாநில தலைநகரான [[சென்னை]]யிலிருந்து 519 கி.மீ (322 மைல்) தென்மேற்கிலும், மதுரைக்கு 58 கிமீ (36 மைல்) தெற்கிலும் அமைந்துள்ளது. இந்நகரம் கெளசிக ஆற்றின் கிழக்கிலும், மதுரை-திருநெல்வேலி ரயில் பாதையின் மேற்கிலும் அமைந்துள்ளது.
 
== மக்கள் வகைப்பாடு ==
வரி 108 ⟶ 112:
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, விருதுநகரில் [[இந்து]]க்கள்
85.02%, [[முஸ்லிம்]]கள் 7.73%, [[கிறிஸ்தவர்]]கள் 7.09%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.02% மற்றும் 0.14% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர்.
 
== தொழில் ==
[[Image:Making of Bomb Shells.JPG|thumb|பட்டாசு தயாரித்தல்|right|250px]]
 
இம்மாவட்டத்தில் 37 சதவீத நிலத்தில் [[விவசாயம்]] செய்யப்படுகிறது. இங்கு கரிசல் மண்ணே அதிகம் காணப்படுவதால் பருத்தி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், தினை போன்ற தானியங்கள் விளைகின்றன. கிணற்று பாசனம் இருக்கும் இடங்களில் நெல், கரும்பு விவசாயம் செய்யப்படுகிறது.
 
இம்மாவட்டத்தில் சிமென்ட் தொழிற்சாலைகள், டெக்ஸ்டைல் மில்கள் மற்றும் சிறிய அளவிலான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு தீப்பெட்டி உற்பத்தி, பட்டாசு தாயாரித்தல், அச்சுத் தொழில், ஆகியவற்றில் இந்திய அளவில் முன்னணியில் உள்ளது. இங்குள்ள சிவகாசி நகரம் [[பட்டாசு]] தொழிலுக்கு புகழ்பெற்ற ஊராகும். இது ''குட்டி ஜப்பான்'' என்றும் அழைக்கப்படுகிறது. [[இந்தியா]]வின் தீப்பெட்டி உற்பத்தியில் 80% தீப்பெட்டிகள் இந்த ஊரில் தான் தயார் செய்யப்படுகின்றன. மேலும் இந்தியாவில் தயாராகும் பட்டாசுகளில் 90% சிவகாசியில் தான் தயாராகின்றன. மேலும் இந்தியாவின் அச்சுத்துறையில் 60% இங்கு செய்யப்படுகின்றன. [[சிவகாசி]] நகரம் தேசிய அளவில் பட்டாசு உற்பத்திக்கான ஒரு முக்கிய நகரமாக திகழ்கிறது.
 
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==
வரி 129 ⟶ 140:
 
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியைச் (இதேகா) சேர்ந்த [[மாணிக்கம் தாகூர்]] வென்றார்.
 
== போக்குவரத்து ==
=== சாலைப் போக்குவரத்து ===
=== தொடருந்துப் போக்குவரத்து ===
=== வானூர்தி போக்குவரத்து ===
 
== பள்ளிகள் ==
வரி 155 ⟶ 171:
 
=== பராசக்தி மாரியம்மன் கோவில் ===
இங்கு '''அருள்மிகு பராசக்தி மாரியம்மன் கோவில்''' உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் அக்னி சட்டி திருவிழா நடைபெறும். அப்போது பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து அம்மனை வழிபடுவர். இந்த விழாவானது 21 நாட்கள் நடைபெறும். பங்குனி மாதத் தொடக்கத்தில் பொங்கல் சாட்டப் படும் பிறகு ஊரில் உள்ள அனைவரும் விரதம் இருந்து அம்மனை வழிபடுவர். தினமும் அதிகாலை பெண்கள் கோவில் கொடி மரத்திற்குக் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றுவர்.
 
== சிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/விருதுநகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது