விருதுநகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 143:
== போக்குவரத்து ==
=== சாலைப் போக்குவரத்து ===
இந்நகரின் வழியே தேசிய நெடுஞ்சாலை 7 ஆனது செல்கிறது. இந்நகரமானது [[சிவகாசி]], [[மதுரை]], [[இராஜபாளையம்]], [[அருப்புக்கோட்டை]] மற்றும் [[சாத்தூர்]] ஆகிய நகரங்களை இணைக்கிறது. விருதுநகரின் மேற்கே ஒரு புறவழிச் சாலை உள்ளது. இது நகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கிறது.
 
விருதுநகரில் எம். எஸ். பி நாடார் நகராட்சி பேருந்து நிலையம் (பழைய பேருந்து நிலையம்) மற்றும் கர்மவீரர் காமராஜர் பேருந்து நிலையம் (புதிய பேருந்து நிலையம்) என இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. இதில் பழைய பேருந்து நிலையத்திலிருந்தே பெரும்பாலான நகரங்களுக்கு, அரசு பேருந்துகளும் மற்றும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. ஆனால் புதிய பேருந்து நிலையம், இந்நகரின் வெளிபுறத்தில் அமைந்துள்ளதால் பெரும்பாலான பேருந்துகள் செல்வதில்லை. பழைய பேருந்து நிலையத்திலிருந்து [[தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்|தமிழ்நாடு அரசு போக்குவரத்து]] மூலம் பல்வேறு நகரங்களுக்கு தினசரி பேருந்து சேவைகளை இயக்குகிறது. [[மதுரை]]யிலிருந்து, [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] வரை செல்லும் அனைத்து பேருந்துகளும், இந்நகரின் வழியே செல்கிறது. ஆனால் சில பேருந்துகள் மட்டுமே, இந்நகரத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கிறது. பெரும்பாலான பேருந்துகள் புறவழிச் சாலை வழியாகவே செல்கிறது.
 
=== தொடருந்துப் போக்குவரத்து ===
[[விருதுநகர் சந்திப்பு தொடருந்து நிலையம்|விருதுநகர் ரயில் நிலையம்]] ஆனது [[மதுரை]] முதல் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] வரையிலான முக்கிய இரயில் பாதையில் அமைந்துள்ளது. [[தென்னக இரயில்வே]] ஆனது தினசரி [[சென்னை]]யிலிருந்து, விருதுநகர் வழியாக [[தூத்துக்குடி]], [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]], [[திருநெல்வேலி]], [[தென்காசி]], [[குருவாயூர்]], [[மும்பை]], [[திருவனந்தபுரம்]], [[மைசூர்]], [[ஹவுரா]], [[பாலக்காடு]], [[கோழிக்கோடு]], [[கண்ணூர்]], [[மங்களூர்]] போன்ற இடங்களுக்கு விரைவு ரயில்களை இயக்குகிறது.
 
இங்கிருந்து [[மதுரை]], [[சிவகாசி]], [[திருவில்லிப்புத்தூர்]], [[இராஜபாளையம்]] [[தென்காசி]], [[அருப்புக்கோட்டை]], [[கொல்லம்]], [[திருநெல்வேலி]], [[கும்பகோணம்]], [[மயிலாடுதுறை]], [[ஈரோடு]], [[நாகர்கோயில்]] மற்றும் [[கோயம்புத்தூர்]] போன்ற நகரங்களுக்கு பயணிகள் ரயில்கள் உள்ளன.
 
=== வானூர்தி போக்குவரத்து ===
இந்நகருக்கு வடகிழக்கில் 45 கி.மீ (28 மைல்) தொலைவில் அமைந்துள்ள [[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்|மதுரை விமான நிலையம்]] அருகிலுள்ள விமான நிலையமாகும்.
 
== பள்ளிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/விருதுநகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது