துரியோதனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
துரியோதனனது உடல் மின்னலாலானது என்று சொல்லப்படுகிறது. தனது சகோதரர்களால், குறிப்பாக [[துச்சாதனன்|துச்சாதனனால்]] பெரிதும் மதிக்கப்பட்டான். அவன் தனது [[குரு]]க்கள் [[கிருபர்]], மற்றும் [[துரோணர்|துரோணரிடம்]] போர்ப்பயிற்சி பெற்றான். கதாயுத்தத்தில் நிபுணத்துவம் பெற [[பலராமர்|பலராமரிடம்]] சீடனாக இருந்து நற்பெயர் பெற்று, அவனுக்குப் பிரியமான சீடனாக இருந்தான். கதாயுதத்துடன் கூடிய துரியோதனன் பீமனுக்கு நிகராக இருந்தான். [[கர்ணன்]], துரியோதனனின் உற்ற நண்பன்.
 
இளமைக் காலத்தில் பீமன் தனது வலிமையால் கெளரவச் சகோதரர்களுக்கு நிறைய காயங்களையும், வலிகளையும் உண்டாக்கி அனுபவிக்கச் செய்தான். பீமன் பெருந்தீனிக்காரனாக இருந்ததால், சகுனியின் வழிகாட்டுதலின்படி துரியோதனன் பீமனுக்கு உணவில் விடம் கொடுத்து கொல்ல முயற்சி செய்தான். ஆனால் பீமன் இந்த முயற்சியிலிருந்து தப்பிப்பிழைத்ததோடு, அவனது வலிமையும் முன்னை விட இன்னும் அதிகமானது. சகுனியின் ஆலோசனையின்படி பாண்டவர்களை விருந்துக்கழைத்து அவர்களை அரக்கு மாளிகையில் தங்க வைத்து அதற்குத் தீயிட்டுக் கொல்லவும் முயற்சித்தான். விதுரர் பாண்டவர்களுக்கு விடுத்த எச்சரிக்கையின் பேரில் பாண்டவர்கள் இந்த சதித்திட்டத்தில் இருந்தும் தப்பினர்.
 
== கர்ணனுடனான உறவு ==
"https://ta.wikipedia.org/wiki/துரியோதனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது