'''ஹிப் ஹொப்ஹாப்''' (இலங்கை வழக்கு (ஹிப் ஹொப்) ஓர் [[இசை]] வகையும் கலாசார அசைவியக்கமுமாகும். இது 1970களிலிருந்து [[ஆபிரிக்க அமெரிக்கர்]]களாலும் இலத்தீன் அமெரிக்கர்களாலும் [[நியூ யோர்க் நகரம்|நியூயோர்க் நகரத்தில்]] உருவாக்கப்பட்டதாகும். 1970களில் நியோர்க்கின் புறொன்க்ஸ் பகுதியில் தோன்றிய ஹிப் ஹொப் இசை பின்னர் ஒரு வாழ்க்கைமுறையாக மாறியது. இன்று ஹிப் ஹொப் கலாசாரம் தேசிய, இன, மத அடையாளங்களைத் தாண்டி உலகெங்கும் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. ஹிப் ஹொப் பண்பாட்டில் உள்ளிட வகுப்புகள் [[ராப் இசை]], [[தடை ஆட்டம்]], [[சுவரோவியம்]] (Graffiti), Beat-boxing, Turntablism (DJ கலை) ஆகும்.