"மரகதப்புறா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category சீனப் பறவைகள்)
 
'''மரகதப் புறா''' (''emerald dove'', ''Chalcophaps indica''), வெப்ப மண்டலத் [[ஆசியா|தெற்காசியாவில்]] [[பாகிஸ்தான்|பாகிஸ்தானிலிருந்து]] [[இலங்கை]] வரையிலும், கிழக்கே [[இந்தோனேஷியா|இந்தோனேசியா]], வடக்கு, கிழக்கு [[ஆஸ்திரேலியா]] வரையிலும் பரவலாகக் காணப்படும் மனைவாழ் [[புறா]]வாகும். இப்புறா, பச்சைப் புறா எனவும், பச்சை இறகுப் புறா எனவும் அழைக்கப்பெறுகிறது. இப்புறாவின் பல இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் மூன்று ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. அவையாவன, லாங்கிராஸ்டிரிஸ் (''longirostris'' ) [[மேற்கு ஆஸ்திரேலியா]]வின் கிம்பர்லியிலிருந்து [[கேப் யார்க் தீபகற்பம்]] வரையிலும், கிரைசோகுலோரா (''chrysochlora'' ) [[கேப் யார்க் தீபகற்பம்|கேப் யார்க் தீபகற்பத்திலிருந்து]] தெற்கு [[நியூ சவுத் வேல்ஸ்]] வரையிலும் மற்றும் [[நோர்போக் தீவு|நார்ஃபோக் தீவிலிருந்து]] [[லார்டு ஓவ் தீவு|லார்டு ஹோவ் தீவு]] வரையிலும், நடலிசு (கிறிஸ்துமஸ் தீவு மரகதப்புறா) [[கிறிஸ்துமஸ் தீவு|கிறிஸ்துமஸ் தீவிலும்]] காணப்படுகின்றன.
 
இவ்வினம் மழைக்காடுகளிலும் அதை ஒத்த அடர்ந்த ஈரமான [[காடு]]கள், தோட்டங்கள், [[பூங்கா]]க்கள், [[சதுப்பு நிலம்|சதுப்பு நிலக்காடுகள்]], கடலோரக் குற்றுயரத் தாவரக் காடுகளிலும் காணப்படுகின்றன. இப்பறவை ஐந்தடி வரை உயரம் உள்ள [[மரம்|மரங்களில்]] சில சுள்ளிகளை வைத்துக் கூடுக்கூடு கட்டி, இரண்டு பழுப்பு வெள்ளை நிற [[முட்டை]]களை இடுகிறது. இனச்சேர்க்கை ஆஸ்திரேலியாவில் வசந்த காலத்திலும், தென் கிழக்கு ஆஸ்திரேலியாவில் இளவேனில் காலத்திலும், வடக்கு ஆஸ்திரேலியாவில் வறட்சிக் காலத்தின் பிற்பகுதியிலும் நடைபெறுகிறது.
 
பறத்தல் பொதுவான புறவுகளை ஒத்த விதத்தில் வேகமாகவும் நேராகவும், முறையான [[இறகு|இறக்கைத்]] துடிப்புகளுடன், அவ்வப்போது விரைந்த கூறிய துடிப்புகளுடன் காணப்படும். பொதுவாக இப்பறவை விரும்பிய காட்டுப்பகுதிகளுக்கிடையே, தாழ்வாகப் பறக்கிறது. எனினும், தொந்தரவு செய்யப்பட நேரங்களில், [[பறத்தல்|பறப்பதை]] விட நடப்பதையே விரும்புகிறது. பறக்கும்போது, அடிச்சிறகுகள் பழுப்பு மஞ்சள் நிறமாகவும், பறக்கும் இறக்கைகள் பழுப்புச் சிவப்பு நிறமாகவும் தெரிகிறது.
213

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2866249" இருந்து மீள்விக்கப்பட்டது