புரோமின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎ஓரிடத்தான்கள்: மேம்படுத்தல் using AWB
வரிசை 65:
தனிமவரிசை அட்டவணையின் போக்கிற்கு தக்கவகையில் புரோமினுடைய எலக்ட்ரான் ஏற்புத்தன்மை குளோரினுக்கும் அயோடினுக்கும் இடைப்பட்ட மதிப்பை கொண்டுள்ளது. (F: 3.98, Cl: 3.16, Br: 2.96, I: 2.66) குளோரினைவிட குறைவான வினைத்திறனும் அயோடினை விட அதிக வினைத்திறனையும் புரோமின் பெற்றுள்ளது. இதேபோலவே ஆக்சிசனேற்றும் பண்பிலும் குளோரினைவிட வலிமை குறைந்தும் அயோடினைவிட வலிமை மிகுந்தும் காணப்படுகிறது. ஒடுக்கும் பண்பில் அயோடைடை விட வலிமை குறைந்தும் குளோரினைவிட வலிமை மிகுந்த நிலையையும் புரோமின் பெற்றுள்ளது<ref name=Greenwood800/>. குளோரின், புரோமின், அயோடின் ஆகியவற்றின் இத்தகைய ஒற்றுமைகள் ஒரு புதிய வகைப்பாட்டுக்கு அடிப்படையாய் அமைந்தன. யோகான் உல்ப்காங்கு டோபரினர் இவற்றை மும்மைகள் என்று வகைப்படுத்தினர். தனிமங்களுக்கான தனிமவரிசை விதியை உருவாக்கினார்<ref name=purdue>{{cite web | title = Johann Wolfgang Dobereiner| publisher = Purdue University| date = | url = http://chemed.chem.purdue.edu/genchem/history/dobereiner.html| archive-url = https://web.archive.org/web/20141114215946/http://chemed.chem.purdue.edu/genchem/history/dobereiner.html| dead-url = yes| archive-date = 2014-11-14| accessdate = 2008-03-08}}</ref><ref>{{cite web | title = A Historic Overview: Mendeleev and the Periodic Table | publisher = NASA| date = | url = http://genesismission.jpl.nasa.gov/educate/scimodule/UnderElem/UnderElem_pdf/HistOverST.pdf | accessdate = 2008-03-08}}</ref>. புரோமினின் அணு ஆரம் குளோரின் மற்றும் அயோடின் ஆகியவற்றின் அணு ஆரங்களுக்கு இடைப்பட்ட மதிப்பைக் கொண்டுள்ளது. இதனால் எலக்ட்ரான் நாட்டம், அயனியாகும் ஆற்றல், பிரிகை என்தால்ப்பி, போன்ற பல்வேறு அணு பண்புகளிலும் இவ்விரண்டு தனிமங்களுக்கு இடைப்பட்ட தன்மையையே புரோமின் வெளிப்படுத்துகிறது. புரோமினின் ஆவியாகும் பண்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. வேகமான ஊடுறுவலும் அடைக்குந்தன்மையும் விரும்பத்தகாத நெடியையும் கொண்டிருக்கிறது<ref name=Greenwood793>Greenwood and Earnshaw, p. 793–4</ref>.
== ஓரிடத்தான்கள் ==
79Br மற்றும் 81Br என்ற இரண்டு ஐசோடோப்புகளை புரோமின் பெற்றுள்ளது. இவை மட்டுமே புரோமினின் இயற்கை ஐசோடோப்புகள் ஆகும். 79Br ஐசோடோப்பு 51 சதவீதம் இயற்கை புரோமினையும் 81Br எஞ்சியிருக்கும் 49 சதவீதமும் சேர்ந்து இயற்கை புரோமின் ஆகின்றது. இரண்டு ஐசோடோப்புகளின் அணுக்கரு சுழற்சியும் 3/2− என்பதால் இவற்றை அணுக்கரு காந்த ஒத்ததிர்வு சோதனையில் பயன்படுத்த இயலும் என்றாலும் 81Br ஐசோடோப்பு மிகுதியும் விரும்பப்படுகிறது. இயற்கையில் உள்ள இவ்விரண்டு ஐசோடோப்புகள் ஒப்பீட்டளவில் 1: 1 விகிதத்தில் இருந்தால் நிறமாலையியல் சோதனையைப் பயன்படுத்தி புரோமின் கொண்ட சேர்மங்களை அடையாளம் காண உதவுகிறது. புரோமினின் மற்ற ஐசோடோப்புகள் யாவும் கதிரியக்கத் தன்மை கொண்டவையாகும். இயற்கையில் இவை மிகக்குறைந்த அரை வாழ்வுக் காலத்தைக் கொண்டுள்ளன. இவற்றுள் 80Br (t1/2 = 17.7 நிமிடம்), 80mBr (t1/2 = 4.421 மணி), and 82Br (t1/2 = 35.28 மணி) அரை ஆயுள் கொண்ட ஐசோடோப்புகள் முக்கியமானவையாகும். இயற்கை புரோமினை நியூட்ரானை செயலூக்கம் செய்து இவை தயாரிக்கப்படுகின்றன. அரை ஆயுட்காலம் அதிகம் கொண்ட 77Br (t1/2 = 57.04 மணி) நிலைப்புத்தன்மை கொண்டதாக உள்ளது. 79Br ஐசோடோப்பைக்காட்டிலும் இலேசான ஐசோடோப்புகள் எலக்ட்ரான் ஈர்த்து செலீனியம் ஐசோடோப்பாக மாறுகின்றன. 81Br ஐசோடோப்பைக் காட்டிலும் கன ஐசோடோப்புகள் பீட்டா சிதைவுக்கு உள்ளாகி கிரிப்டான் தனிமமாகின்றன. 80Br ஐசோடோப்பு மட்டும் இவ்விரண்டில் ஒன்றாக மாறும் வாய்ப்பைப் பெற்றுள்ளது<ref name=Greenwood800>Greenwood and Earnshaw, pp. 800–4</ref>.
 
== வேதியியலும் சேர்மங்களும்==
"https://ta.wikipedia.org/wiki/புரோமின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது