லைப்சிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 2:
'''லைப்சிக்''' ([http://upload.wikimedia.org/wikipedia/commons/7/73/Leipzig.ogg ''Leipzig'']) அல்லது '''லீப்சிக்''' (ஆங்கில ஒலிப்பு) [[செருமனி]]யின் கூட்டாட்சி மாநிலமான [[சக்சனி]]யில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் ஆகும். 17 ஆம் நூற்றாண்டில் லீப்சிக், [[இசை]], [[வானியல்]], [[ஒளியியல்]] ஆகிய கல்வி மற்றும் பண்பாட்டுத் துறைகளில், ஒரு முக்கிய மையமாகத் திகழ்ந்தது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்குப்]] பின்னர் இது [[பொதுவுடமை]]ச் [[செருமன் சனநாயகக் குடியரசு|செருமன் சனநாயகக் குடியரசின்]] முக்கிய நகர்ப்புற மையங்களில் ஒன்றானது.
 
லீப்சிக்கின் மையப்பகுதியில் அமைந்துள்ள நிக்கோலாய் தேவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் ஊடாக இந்நகரம், பொதுவுடமையின் வீழ்ச்சியிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது. 2000 ஆண்டில் இடம்பெற்ற [[செருமனிகளின் ஒன்றிணைப்பு]]க்குப் பின்னர், இந்நகரம் பொருளாதார அடிப்படையிலும், சமூகவியல் அடிப்படையிலும் பெரும் மாற்றங்களுக்கு உள்ளானது. இதன் ஒரு பகுதியாக, புதிய [[போக்குவரத்து உட்கட்டமைப்பு]] வளர்ச்சிகளும், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமைய மறுசீரமைப்பும் இடம்பெற்றுள்ளன. 2006 ஆம் ஆண்டில் லீப்சிக்கில் முக்கியமான உலகக் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்றுள்ளன.
 
== புவியியல் ==
செருமானியில் வட ஐரோப்பிய சமவெளியின் பகுதியான வட செருமன் சமவெளியின் தென்கிழக்கு பகுதியில், லைப்சிக் விரிகுடாவில் உள்ள முகத்துவாரத்தில் லைப்சிக் நகரம் அமைந்துள்ளது. இந்த தளம் சதுப்புநில் பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் வடக்கே சில சுண்ணாம்புக் கரடுகளை கொண்ட பகுதிகளும் காணப்படுகின்றன. நகர எல்லைக்குள் சில வன பூங்காக்கள் காணப்பட்டாலும் லைப்சிக்கை சுற்றியுள்ள பகுதி ஒப்பீட்டளவில் காடற்றது. 20 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் பல திறந்தவெளி சுரங்கங்கள் இருந்தன. அவற்றில் பல ஏரிகளாக மாற்றமடைந்துள்ளன.<ref>Haase, Dagmar; Rosenberg, Matthias; Mikutta, Robert (1 December 2002). "Untersuchung zum Landschaftswandel im Südraum Leipzig". ''Standort'' (in German). '''26'''(4): 159–165. doi:10.1007/s00548-002-0103-3. ISSN 0174-3635.</ref>
 
1992 ஆம் ஆண்டு முதல் லைப்சிக் நிர்வாக ரீதியாக பத்து மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மொத்தம் 63 துணைப்பிரிவுகள் உள்ளன.
 
== காலநிலை ==
கோப்பனின் காலநிலை வகைப்பாட்டுக்கமைய செருமனியின் கிழக்குப் பகுதிகளில் அமைந்துள்ள பல இடங்களைப் போன்றே லைப்சிக் நகரமும் கடல்சார் காலநிலையைக் கொண்டுள்ளது. குளிர்காலம் லேசானது குளிர்காலத்தின் சராசரியாக வெப்பநிலை 1 &nbsp;° C (34 &nbsp;° F) ஆகும். கோடை பொதுவாக வெப்பமாக இருக்கும். கோடையின் சராசரி வெப்பநிலை 19 &nbsp;° C (66 &nbsp;° F) ஆகும். குளிர்காலத்திற்கும், கோடைகாலத்திற்கும் இடையிலான சூரிய ஒளியின் அளவு வேறுபடுகின்றது. ஒப்பீட்டளவில் திசம்பர் மாதத்தில் கிடைக்கும் சூரிய ஒளியை விட சூலை மாதத்தில் கிடைக்கும் சூரிய ஒளியின் அளவு அதிகமாகும். திசம்பர் சராசரி மாதத்தில் சராசரியாக 51 மணி நேரம் சூரிய ஒளியும் (நாளொன்றுக்கு 1.7 மணி நேரம்), சூலை மாதத்தில் 229 மணிநேரம் சூரிய ஒளியும் கிடைக்கின்றது.<ref>{{Cite web|url=https://www.dwd.de/EN/ourservices/klimakartendeutschland/klimakartendeutschland.html?nn=519080|title=Wetter und Klima - Deutscher Wetterdienst - Climate monitoring - Germany - Climatological maps of Germany|website=www.dwd.de|access-date=2019-11-10}}</ref>
 
== புள்ளிவிபரங்கள் ==
லைப்சிக் நகரத்தில் சுமார் 570,000 மக்கள் வசிக்கின்றனர். 1930 ஆம் ஆண்டில் மக்கட்தொகை 700,000 ஐ எட்டியது. வரலாற்றில் பதிவாகிய அதிகப்பட்ச சனத்தொகை இதுவாகும். இது 1950-89 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக 530,000 வரை குறைந்தது. 1990 ஆம் ஆண்டுகளில் சனத்தொகை வேகமாக குறைந்து 1998 ஆம் ஆண்டில் மக்கட்தொகை 437,000 ஆக காணப்பட்டது. சனத்தொகையின் குறைவுக்கு காரணம் பெரும்பாலும் வெளிப்புற இடம்பெயர்வு மற்றும் புறநகர்மயமாக்கல் என்பனவாகும். 1999 ஆம் ஆண்டில் சுற்றியுள்ள நகரங்களை இணைப்பதன் மூலம் நகரப் பகுதியை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கிய பின்னர் 2000 ஆம் ஆண்டில் சனத்தொகை மீண்டும் உயரத் தொடங்கியது. 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி செருமனியில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாக லைப்சிக் காணப்படுகின்றது. 500,000 இற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர்.<ref>{{Cite web|url=https://www.leipzig.de/news/news/einwohner-entwicklung-uebertrifft-selbst-optimistischste-prognosen/|title=Leipzig wächst: Einwohner-Entwicklung übertrifft selbst optimistischste Prognosen|website=www.leipzig.de|language=de|access-date=2019-11-11}}</ref> கடந்த 10-15 ஆண்டுகளின் சனத்தொகை வளர்ச்சிக்கு காரணம் பெரும்பாலும் உள்நோக்கிய இடம்பெயர்வு ஆகும். 2014 ஆம் ஆண்டில் உள்நோக்கிய இடம்பெயர்வு 12,917 ஆக அதிகரித்தது.<ref>{{Cite web|url=http://www.statistik.sachsen.de/download/010_GB-Bev/02_03_23_tab.pdf|title=Überschuss der Zu- bzw. Fortzüge im Freistaat Sachsen 1990 bis 2018 nach Kreisfreien Städten und Landkreisen|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
2003 ஆம் ஆண்டில் வேலையின்மை விகிதம் 18.2% ஆக இருந்தது. 2014 ஆம் ஆண்டில் 9.8% ஆகவும் இருந்தது. 2017 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் 7.6% ஆகவும் குறைந்தது.<ref>{{Cite web|url=https://statistik.leipzig.de/|title=Leipzig-Informationssystem|last=Leipzig|first=Stadt|website=statistik.leipzig.de|language=de|access-date=2019-11-11}}</ref>
 
== பொருளாதாரம் ==
நகரத்தின் வடக்கே பெரிய ஆலைகளில் பி.எம்.டபிள்யூ, போர்ஷே ஆகியவற்றால் கனரக வாகன உற்பத்திகள் நடைப்பெறுகின்றன. இந்த நகரம் மத்திய ஐரோப்பாவின் முன்னணி எரிசக்தி பரிமாற்றத்தை கொண்டுள்ளது. செருமனியின் பெரிய இயற்கை வளி விநியோக தலைமையிடம் ஒன்று இங்கு அமைந்துள்ளது. லைப்சிக் பெருநகர் பகுதியில் பெற்றோ இரசாயன மையமொன்றை உருவாக்கியுள்ளது. இப்பகுதியில் ஸ்ப்ரெட்ஷர்ட் போன்ற மென்பொருள் நிறுவனங்களும், பல்வேறு பிராந்தியங்களில் அமைந்துள்ள உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் காணப்படுகின்றன . லைப்சிக் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான யூரோ முதலீட்டை பெறுகின்றது. இந்நகர் உலக முன்னணி மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தினாலும், வளர்ந்து வரும் உயிரி தொழில்நுட்பத் துறையினாலும் பயனடைகிறது.<ref>{{Cite web|url=http://www.berlinthingstodo.com/articles/living-berlin-maybe-leipzig/|title=Discover Leipzig|last=|first=|date=|website=www.berlinthingstodo.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=2019-11-11}}</ref>
 
லைப்சிக் நகரின் டவ்ன் டவுன் என்ற பகுதியில் காணப்படும் ஏராளமான மதுபான கடைகள், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன செருமனிய மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் ஆதரிக்கப்படுகின்றன. 2017 ஆம் ஆண்டில் செருமனியின் 3 மில்லியனுக்கும் அதிகமான தங்குமிடங்களைக் கொண்ட அதிகம் பார்வையிடப்பட்ட நகரங்களில் லைப்சிக் நகரமும் ஒன்றாகும்.<ref>{{Cite web|url=https://www.lvz.de/Leipzig/Lokales/Tourismusboom-in-Leipzig-erstmals-drei-Millionen-Uebernachtungen|title=Tourismusboom in Leipzig – erstmals drei Millionen Übernachtungen|website=LVZ - Leipziger Volkszeitung|language=de|access-date=2019-11-11}}</ref>
 
2010 ஆம் ஆண்டில் ''தி நியூயார்க் டைம்ஸ்'' பத்திரிகையின் அதிக பார்வையிடப்பட்ட முதல் பத்து நகரங்களில் இடம் பெற்றது.<ref>{{Cite web|url=https://www.nytimes.com/2010/01/10/travel/10places.html?pagewanted=1&th&emc=th|title=The 31 Places to Go in 2010|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> ஆத்திரேலிய கணிப்பொன்றின் படி உலகின் நூதன 289 நகரங்களில் உலகளவில் 39 வது இடத்தைப் பிடித்தது.<ref>{{Cite web|url=https://www.innovation-cities.com/innovation-cities-global-index-2010-city-rankings/10154/|title=Innovation Cities™ Global Index 2010|date=2010-09-01|website=Innovation Cities™ Index|language=en-US|access-date=2019-11-11}}</ref> லைப்சிக் நகரம் 2013 ஆம் ஆண்டு நிலவரப்படி செருமானிய நகரங்களில் மிக உயர்ந்த சனத்தொகை வளர்ச்சி விகிதத்தை கொண்டிருந்தது.<ref>{{Cite web|url=https://web.archive.org/web/20141222171333/http://www.mdr.de/mdr-info/geburten-in-leipzig100.html|title=Leipzig boomt entgegen dem Deutschlandtrend {{!}} MDR.DE|date=2014-12-22|website=web.archive.org|access-date=2019-11-11}}</ref>
வரிசை 26:
== சான்றுகள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:செருமானிய நகரங்கள்]]
[[பகுப்பு:உலகக்கோப்பை கால்பந்து நடைபெற்ற நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/லைப்சிக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது