புளுட்டோனியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎புறவேற்றுமை வடிவங்கள்: மேம்படுத்தல் using AWB
வரிசை 33:
[[File:Plutonium density-eng.svg|thumb|upright=1.2|புளுட்டோனியத்தின் ஆறு புறவேற்றுமை வடிவங்கள் வரைபடம்|alt=A graph showing change]]
புளுட்டோனியம் சுற்றுப்புறஅழுத்தம் மற்றும் வெப்பநிலையில்கூட பல்வேறு வகையான புறவேற்றுமை வடிவங்களில் காணப்படுகிறது. பரவலாக இவை படிகக்கட்டமைப்பு மற்றும் அடர்த்தியில் வேறுபடுகின்றன. α மற்றும் δ புறவேற்றுமைகளுக்கிடையில் 25 சதவீதத்திற்கும் அதிகமான வேறுபாடுகள் காணப்படுகின்றன.
புளுட்டோனியம் பொதுவாக ஆறு புறவேற்றுமை வடிவங்களைக் கொண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட அழுத்த வரம்பிற்குள் ஓர் உயர் வெப்பநிலையில் ஏழாவது (சீட்டா, ζ) புறவேற்றுமை வடிவத்தை உருவாக்குகிறது. இந்த புறவேற்றுமை வடிவங்கள் அனைத்தும் வெவ்வேறு கட்டமைப்பு மாற்றங்கள் அல்லது ஒரு தனிமத்தின் வெவ்வேறு வகைகளாக மிகவும் ஒத்த உள் ஆற்றல்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால் கணிசமாக மாறுபடும் அடர்த்தி மற்றும் படிக கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. இவை வெப்பநிலை, அழுத்தம் அல்லது வேதியியலில் ஏற்படும் மாற்றங்களுக்கு புளுட்டோனியத்தை மிகவும் உணர்திறன் மிக்க தனிமமாக்குகின்றன. மேலும் ஒரு புறவேற்றுமை வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு நிலை மாற்ற வியத்தகு அளவு மாற்றங்களை புளுட்டோனியம் அனுமதிக்கிறது. வெவ்வேறு புறவேற்றுமை வடிவங்களின் அடர்த்தி 16.00 கிராம் / செ.மீ 3 முதல் 19.86 கிராம் / செ 3 வரை மாறுபடுகிறது.
 
இந்த பல புறவேற்றுமை வடிவங்களின் இருப்பு புளுட்டோனியத்தை எந்திரமயமாக்குவது மிகவும் கடினமாகிறது. ஏனெனில் இது புறவேற்றுமை நிலையை மிக எளிதாக மாற்றுகிறது. எடுத்துக்காட்டாக, அறை வெப்பநிலையில் பயன்படுத்தப்படாத புளுட்டோனியம் α வடிவத்தில் உள்ளது. இது வார்ப்பிரும்பை ஒத்த எந்திர பண்புகளைக் கொண்டுள்ளது. ஆனால் சற்றே உயர் வெப்பநிலையில் நெகிழி மற்றும் இணக்கமான β (பீட்டா) வடிவத்திற்கு மாறுகிறது. சிக்கலான கட்ட வரைபடத்திற்கான காரணங்கள் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. ஆல்பா வடிவம் குறைந்த-சமச்சீர் ஒற்றைச்சாய்வு கட்டமைப்பைக் கொண்டுள்ளது, எனவே அது உடையக்கூடிய தன்மை, வலிமை, அமுக்கக்கூடிய தன்மை மற்றும் மோசமான வெப்ப கடத்துத்திறன் ஆகியனவற்றை வெளிப்படுத்துகிறது.
δ (டெல்டா) வடிவத்தில் உள்ள புளுட்டோனியம் பொதுவாக 310 ° செல்சியசு முதல் 452 ° செல்சியசு வரையிலான வெப்ப வரம்பில் காணப்படுகிறது. ஆனால் ஒரு சிறிய சதவீத காலியம், அலுமினியம் அல்லது சீரியத்துடன் கலக்கும்போது அறை வெப்பநிலையில் அது நிலைப்புத்தன்மையைப் பெறுகிறது. அதன் வேலைத்திறன் மேம்படுகிறது மற்றும் பற்றவைப்பில் பயன்படுகிறது. δ வடிவ புளுட்டோனியம் குறிப்பாக உலோகத்தன்மை மிக்கதாக இருப்பினும் அலுமினியம் அளவுக்கு வலைமையான கம்பியாக இதை இழுக்கலாம். அணுக்கரு பிளவு வகை ஆயுதங்களில், புளூட்டோனியம் உள்ளகத்தை அமுக்கப் பயன்படும் வெடிக்கும் அதிர்ச்சி அலைகள் வழக்கமான δ கட்ட புளுட்டோனியத்தை அடர்த்தியான α வடிவத்திற்கு மாறுவதற்கு வழிவகுக்கிறது. மிக உயர்ந்த வெப்பநிலை திண்ம புறவேற்றுமை வடிவ புளுட்டோனியத்தை மற்ற தனிமங்களுடன் ஒப்பிடும்போது இது ஒழுங்கற்ற உயர் அணு சுய விரவலை வெளிப்படுத்துகிறது.
 
காலியம், அலுமினியம், அமெரிசியம், இசுக்காண்டியம் மற்றும் சீரியம் போன்ற தனிமங்கள் அறை வெப்பநிலையில் புளுட்டோனியத்தின் δ நிலையை நிலைப்புத்தன்மை உடையதாக மாற்ற முடியும். சிலிக்கான், இண்டியம், துத்தநாகம் மற்றும் சிர்கோனியம் ஆகியவை விரைவாக குளிர்விக்கும்போது சிற்றுறுதி நிலை δ நிலை புளுட்டோனியம் உருவாக அனுமதிக்கின்றன. அதிக அளவு ஆபினியம், ஒல்மியம்ம் மற்றும் தாலியம் ஆகியவை அறை வெப்பநிலையில் சிறிதளவு δ நிலையை தக்கவைக்க அனுமதிக்கின்றன. அதிக வெப்பநிலையில் α நிலை புளுட்டோனியத்தை நிலைத்திருக்க வைக்கும் ஒரே தனிமம் நெப்டியூனியம் மட்டுமேயாகும். தைட்டானியம், ஆபினியம் மற்றும் சிர்க்கோனியம் போன்ற தனிமங்கள் விரைவாக குளிர்ச்சியடையும் போது அறை வெப்பநிலையில் β கட்டத்தை உறுதிப்படுத்துகின்றன <ref name = "HeckerPlutonium">
"https://ta.wikipedia.org/wiki/புளுட்டோனியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது