குரோம்பேட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 1:
{{Infobox settlement
| name = குரோம்பேட்டை</br />Chromepet
| other_name =
| settlement_type = புற நகர்
வரிசை 53:
}}
 
'''குரோம்பேட்டை''' ''(Chromepet'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள [[சென்னை]] மாநகரத்தின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப்பகுதியாகும். தேசிய நெடுஞ்சாலை எண் 45-இல் பல்லாவரத்திற்கும், தாம்பரத்திற்கும் இடையில் இக்குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்]] 4 கீ. மீ. தொலைவில் உள்ளது. சென்னை மத்திய தொடருந்து நிலையம் 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற [[சென்னை தொழில்நுட்ப நிறுவனம்]] எனும் பொறியியல் கல்லூரி இங்குதான் அமைந்துள்ளது. இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. [[ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்]], தமிழ் எழுத்தாளர் [[சுஜாதா]] ஆகியோர் இக்கல்லூரியில்தான் படித்தனர் என்பது இந்நிறுவனத்தின் சிறப்பாகும். சென்னை புறநகர் இரயில்வே வலையமைப்பில் இடம்பெற்றுள்ள குரோமேபேட்டை இரயில் நிலையம் இந்த பகுதிக்கான தொடருந்து போக்குவரத்து சேவையை அளிக்கிறது. ஓர் அமைதியான குடியிருப்புப் பகுதியான குரோம்பேட்டை இந்திய தேசியத் தேர்தலில் சிறீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாக உள்ளது.
 
குரோம்பேட்டை என்பது ஒரு தமிழ் பெயர் அல்ல. முன்னதாக இந்த நகரம் குரோம் தொல் தொழிற்சலையின் இல்லமாக இருந்தது <ref>{{Cite web|url=https://www.zaubacorp.com/company/THE-CHROME-LEATHER-COMPANY-LIMITED/U19113TN1943PLC000421|title=Chrome Leathers|archive-url=https://web.archive.org/web/20170323052942/https://www.zaubacorp.com/company/THE-CHROME-LEATHER-COMPANY-LIMITED/U19113TN1943PLC000421|archive-date=23 March 2017|url-status=live|df=dmy-all}}</ref>. எனவே - குரோம் என்பது தொழிற்சாலையையும் பேட்டை என்பது புற நகரையும் குறிப்பதால் குரோம்பேட்டை என்ற பெயர் வந்தது. தொழிற்சாலை முற்றிலுமாக இடிக்கப்பட்டு அதன் இடத்தில் பாலாஜி மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு அடுத்துள்ள சாலையின் வழியாக நடக்கும்போது தோல் தொழிற்சாலையின் தடயங்களை அதன் பெயர் பலகையுடன் ஒருவர் இன்னும் காணமுடியும். கி.பி 1 முதல் 2 ஆம் நூற்றாண்டு வரை ஆரம்பகால சோழர்களுடன் கூட்டணி வைத்திருந்த தொண்டைமன்கள் ஆட்சி செய்த தொண்டைமண்டலத்தின் ஒரு பகுதியாக குரோம்பேட்டை பகுதி இருந்தது. பின்னர் அந்த பகுதி சாதவாகணர்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டது. பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில் கி.பி 3 முதல் 7 ஆம் நூற்றாண்டு வரை சென்னை, செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதி தொண்டை நாட்டுக்கு சொந்தமானதாக இருந்தன. வரலாற்று காலம் சரியாக பல்லவ மன்னர்களிடமிருந்து தொடங்குகிறது. பல்லாவரத்திற்கு அருகில் கி.பி 600-630 <ref>{{cite web|url=http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_tambaramhistory.htm|title=Dr.Gift Siromoney's Home Page|website=www.cmi.ac.in|accessdate=3 May 2018|url-status=live|archiveurl=https://web.archive.org/web/20160315082931/http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_tambaramhistory.htm|archivedate=15 March 2016|df=dmy-all}}</ref> காலத்தில் மகேந்திரவர்மனால் குடையப்பட்ட பல்லவபுரம் குகைக்கோவில்களில் இருக்கும் கல்வெட்டுகள் இதற்கு சான்றாக உள்ளன. மகேந்திரவர்மனுக்குப் பின் வந்த நரசிம்மவர்மன் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த புலிகேசிக்கு எதிராகப் போரிட்டு, குரோம்பேட்டையிலிருந்து 11 கிமீ (6.8 மைல்) தென்மேற்கே உள்ள மணிமங்கலத்தில் அவரைத் தோற்கடித்தார்.
வரிசை 59:
== சோழர் காலம் ==
 
கி.பி 9 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரையிலான பிற்கால சோழர் காலத்தில் இப்பொழுது குரோம்பேட்டை என்று அழைக்கப்படும் இந்த பகுதி சுரத்தூர் நாட்டுக்கு சொந்தமானது, இது பல்லாவரம் அருகே நவீன திரிசுலம் கிராமமான திருச்சுரத்தின் காரணமாக இப்பெயரிடப்பட்டது. சுரத்தூர் நாடு தெற்கே தம்பரத்தில் இருந்து வடக்கே ஆதம்பாக்கம் மற்றும் ஆலந்தூர் வரை நீட்டிக்கப்பட்டது, மேலும் அதில் பம்மல், பல்லாவரம் மற்றும் திருநீர்மலை உள்ளிட்டவையும் அடங்கும் <ref>{{cite web|url=http://www.cmi.ac.in/gift/Epigraphy/epig_tambarammore.htm|title=Dr.Gift Siromoney's Home Page|website=www.cmi.ac.in|accessdate=3 May 2018|url-status=live|archiveurl=https://web.archive.org/web/20150923204939/http://www.cmi.ac.in/gift/Epigraphy/epig_tambarammore.htm|archivedate=23 September 2015|df=dmy-all}}</ref>.
 
== பாண்டியர், தெலுங்கு சோழர், விசயநகரப் பேரரசு ==
பின்னர் 12 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பாண்டியர், தெலுங்கு சோழர் மற்றும் விசயநகர் வம்சங்கள் இப்பகுதியை ஆட்சி புரிந்தன.
 
== ஆங்கிலேயர் ஆட்சியில் ==
வரிசை 86:
*தேசிய சித்த கல்வி நிறுவனம்
*மின்வாரிய அலுவலகம்
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குரோம்பேட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது