திருவள்ளூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎அரசியல்: http://tnenvis.nic.in/files/THIRUVALLUR%20%20.pdf
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 115:
 
== அரசுத்திட்டங்கள்==
தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை தனது துறை வழியாக நிறைவேற்றுகிறது. அவற்றில் முக்கியமானதாகக் கருதப்படுவது யாதெனில், தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் ஆகும். அத்திட்டத்தின் படி, இம்மாவட்ட கிராமங்களில் வாழும் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு [[ஊராட்சி]]களில் உள்ள குக்கிராமங்களின் எண்ணிக்கை அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக – தாய் 2011 – 12 முதல் 2015 – 16 வரை 526 ஊராட்சிகளை சேர்ந்த 3861 குக்கிராமங்களில் ரூ. 3680.00 கோடி ஒதுக்கீட்டில் பணிகள் செய்து முடிக்கப்பட்டது. இரண்டாம் தாய் திட்டம் வழியாக, [[தமிழக அரசு|தமிழக அரசின்]] அரசாணை எண் 129 ஊரக வளர்ச்சி மற்றும் [[பஞ்சாயத்து ராஜ் சட்டம்|பஞ்சாயத்து ராஜ்]] துறை (SGS-1) நாள் 25.10.2016-ன் படி, தாய் – II 2016-17-ன் திட்டத்தின் கீழ் திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள அனைத்து [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] சிறுபாசன ஏரிகளை மேம்படுத்துதல், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை எற்படுத்துதல் மற்றும் சாலை வசதிகள் எற்படுத்துதல் ஆகிய பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. <ref>https://tiruvallur.nic.in/scheme/tamil-nadu-village-habitation-improvement-scheme-thai/</ref> தாய் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியங்களின் பராமரிப்பில் உள்ள சிறுபாசன ஏரிகள் விரிவான முறையில் புனரமைப்பு செய்யப்படும். இந்த ஏரிகளில் உள்ள முட்புதர்கள் அகற்றப்பட்டு, இயந்திரங்களின் மூலம் ஏரிகள் தூர்வாரப்பட்டு, மதகு மற்றும் கலங்கல்கள் புதிதாக கட்டப்பட்டு, கரைகள் பலப் படுத்தப்படும். இதன் மூலம் குக்கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாட்டினை களையவும், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடவும், சிறுபாசன ஏரிகளின் முழு கொள்ளளவினை மீட்கவும், குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கான நீரினை சேமித்து முறைபடுத்தவும் வழிவகை ஏற்படும். இம்முயற்சியால் கீழ் ரூ.1344.930 [[இலட்சம்]] மதிப்பீட்டில் 60 சிறுபாசன ஏரிகள் மேம்படுத்தும் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதில், ரூ.1108.900 இலட்சம் மதிப்பீட்டில், 45 சிறுபாசன ஏரிகள் மேம்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது முடிவடைந்த வடகிழக்கு பருவமழையின் போது, 2017க்கு முன்னதாக மேம்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்ட சிறுபாசன [[ஏரி]]களில், தண்ணீர் நிரம்பியதோடு, [[நிலத்தடி நீர்]] மட்டமும் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. சாலை வசதிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 48 சிறப்பு சாலை பணிகள் ரூ.1345.00 இலட்சம் மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு அதில் 40 சாலை பணிகள் முடிக்கப்பட்டு ரு.1123.42 இலட்சம் மதிப்பீட்டில் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.<ref>http://tnenvis.nic.in/files/THIRUVALLUR%20%20.pdf</ref>
 
== மேற்கோள்கள் ==
வரிசை 124:
 
{{திருவள்ளூர் மாவட்டம்}}
 
 
{{திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிகள்}}
 
 
{{தமிழ்நாடு}}
"https://ta.wikipedia.org/wiki/திருவள்ளூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது