சமகால ஓவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 1:
[[File:Dona i Ocell.JPG|thumb|upright|[[யோன் மிரோ]], ''[[டோனா இ ஓசெல்]]'', 1982, 22 × 3 மீ (72 × 9.8 அடி), பார்க் யோன் மிரோ, பார்சிலோனா, இசுப்பெயின்]]
'''சமகால ஓவியம்''' (Contemporary art) என்பது, இருபதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியிலும், இருபத்தோராம் நூற்றாண்டிலும் உருவாக்கப்பட்ட தற்கால ஓவியத்தைக் குறிக்கிறது. சமகால ஓவியர்கள், உலக மட்டத்துச் செல்வாக்குக்கு உட்பட்டதும், பண்பாட்டுப் பல்வகைமை கொண்டதும், தொழிநுட்ப அடிப்படையில் முன்னேறியதுமான ஒரு உலகில் வேலை செய்கின்றனர். இவர்களுடைய ஓவியங்கள், பொருட்கள், வழிமுறைகள், கருத்துருக்கள், எண்ணப் பொருள்கள் போன்றவற்றின் இயங்குநிலையில் உள்ள சேர்க்கையாக உள்ளது. இவற்றிடையேயான எல்லைகள் தொடர்ந்தும் மாறிக்கொண்டிருக்கும் நிலை காணப்படுகின்றது. பல்வகைப்பட்டனவும், வேறுபட்ட கோட்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கியனவுமான சமகால ஓவியங்களை முழுமையாக நோக்கும்போது அவற்றில் சீர்மைத்தன்மை, ஒழுங்குபடுத்தும் கொள்கை, கருத்தியல் என்பன குறைவாகக் காணப்படுகின்றன. சமகால ஓவியம், தனிப்பட்ட மற்றும் பண்பாட்டு அடையளம், குடும்பம், சமுதாயம், தேசம் போன்ற பெரிய சூழல்சார்ந்த விடயங்களைக் கவனத்தில் எடுக்கும் பண்பாட்டு கருத்தாடல்களின் ஒரு பகுதியாக இருக்கின்றது.
 
ஆங்கிலம், தமிழ் மற்றும் வேறு பல மொழிகளில் "சமகாலம்" என்பதையும், "நவீனம்" என்பதையும் ஒத்த பொருள் கொண்டனவாகவே பொதுவாகப் புரிந்துகொள்கின்றனர். இதனால் சிறப்புத் துறையறிவு இல்லாதவர்கள் ''நவீன ஓவியம்'', ''சமகால ஓவியம்'' என்னும் இரண்டையும் ஒன்றுடன் ஒன்று குழப்பிக்கொள்ளும் நிலை ஏற்படலாம்.<ref>[http://steinhardt.nyu.edu/art/education/definitions NYU Steinhardt, Department of Art and Arts Professions, New York]</ref>
வரிசை 12:
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
[[பகுப்பு:சமகால ஓவியம்]]
"https://ta.wikipedia.org/wiki/சமகால_ஓவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது