உடனொளிர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
 
வரிசை 2:
[[File:Fluorescent minerals hg.jpg|thumb|240px|புறஊதாக் கதிர்களால் உடனொளிரும் கனிமங்கள்]]
 
'''உடனொளிர்தல்''' (Fluorescence) என்பது [[இருள்|இருளில்]] அல்லது [[மின்காந்த அலை]]யதிர்வில் பல்வண்ண ஒளிகாலுகிற, காணாக்குற்றலை ஏற்றுக் காணும் நீளலையாக்கி வெளியிடும் பண்புடைய செயல் ஆகும். <ref>[https://www.tamillexicon.com/define/fluorescent கட்டற்ற இணையத் தமிழ் அகரமுதலிப் பக்கம்]</ref> சில பொருள்களின் மீது ஒளியானது (முக்கியமாகப் புற வூதா ஒளி) விழுகின்றபோது அப்பொருள்கள் தாமே ஒளியை வெளியில் விடத் தொடங்குகின்றன. அப்படி வெளியிடப்படும் ஒளி சாதாரணமாக அந்த ஒளிக்குக் காரணமாகிய தூண்டும் ஒளியின் நிறமல்லாத வேறு [[நிறம்]] கொண்டிருக்கும். இந்த நிகழ்ச்சிக்கு உடனொளிர்தல் அல்லது பின்னொளிர்தல் என்று பெயர். தூண்டும் ஒளி நின்றவுடனே அந்தப் பொருள் வெளிப்படுத்தும் ஒளியும் நின்றுபோகுமானால் அது உடனொளிர்தலாகும். தூண்டும் ஒளி நீக்கப்பட்ட பிறகும் சிறிது காலத் திற்கோ அல்லது நீண்ட காலத்திற்கோ ஒளி வெளியாகுமானால் அது பின்னொளிர்(Phosphorescence)தல் ஆகும். 1833-ல் சர் டேவிட் புரூஸ்ட்டர் உடனொளிர்தலை முதன் முதலாக விளக்கமாக விவரித்தார்.
 
எடுத்துக்காட்டாக, குயினைன் சல்பேற் கரைசல் (Quinine sulphate solution ), சிங் சல்பைட் (ZnS ), சிங் காட்மியம் சல்பைட் (ZnCdS ), பேரியம் ஈய சல்பேற்று (BaPb SO4 ) போன்ற வேதிப்பொருட்கள் தம்மில் விழும் ஒரு குறிப்பிட்ட அலைநீளமுள்ள ஒளியினை ஏற்று, வேறொரு அலைநீளமுள்ள ஒளிக்கதிர்களை வெளிவிடும் நிகழ்வு, உடனொளிர்தல் ஆகும்.கதிரியலில் இப்படிப்பட்ட பொருட்கள் வலுவூட்டும் திரைகளில் (Intensifying Screen) பயன்படுகின்றன. இதனால் நோயாளி பெறும் [[கதிர் ஏற்பளவு]] கணிசமாகக் குறைகிறது. பொலோனாக் கல்' (Bologna Stone)' என்பது [[பேரியம் சல்பைடு|பேரியத்தின் சல்பைடு]] தாதுவாகும். அதிலே பின்னொளிர் தல் உண்டாவதை 1602ஆம் ஆண்டில் முதலில் கண்டுபிடித்தார்கள். [[பாஸ்பரஸ்|பாஸ்வரத்தைக்]] காற்றில் வைத்தால் அது ஆக்சிகரணமடைவதால் ஒளிவிடுகிறது. ஆனால் பின்னொளிர்தலில் அம்மாதிரியான ரசாயன வினையொன்றும் நிகழ்வதில்லை.
 
== உயிரி ஒளி ==
வரிசை 16:
== உயிரிலி ஒளி ==
[[File:Compact Fluorescent-bw.jpg|140px|உடனொளிரும் விளக்கு|thumb|right]]
[[யுரேனியம்]] கூட்டுக்களில் பல நன்கு உடனொளிர்வனவாக இருக்கின்றன. ஆனால் இயற்கைத் தாதுப்பொருள் களும், இரத்தினக் கற்களுமே அழகான உட னொளிர்தலுள்ளவை. ஒரு பொருள் நன்றாக உடனொளிர்தலுள்ளதாக இருக்க வேண்டுமானால் அதில் சிறிய அளவில் அசுத்தம் படர்ந்திருக்கவேண்டுமென்று கண்டிருக்கிறார்கள். டாக்டர் [[சி. வி. இராமன்]] தமது பெங்களூர் ஆராய்ச்சி நிலையத்தில் சேர்த்துவைத்துள்ள உடனொளிரும் இரத்தினங்களும் மற்றத் தாதுப் பொருள்களும் மிகப் புகழ் வாய்ந்தவை. உடனொளிர்தலில் உள்ள வேறுபாடுகளைக் கொண்டு உணவுப்பொருள்கள், மருந்துகள், இரசாயனப்பொருட்கள் முதலியவற்றிலுள்ள கலப்படத்தைக் கண்டு பிடித்து விடலாம். ஆடையில் பருத்தி நூலுக்கும் பட்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறியலாம். ஓர் ஓவியம் முதலில் தீட்டியதேதானா அல்லது போலிப்பிரதியா என்பதையும் கண்டுபிடிக்கலாம். இருட்டிலே எளிதில் காண்பதற்காகப் பல பொருள்களில் ஒளிரும் வர்ணத்தைப் பூசுவதுண்டு. உடனொளிரும் [[குழாய் விளக்கு]]க்கள் (Fluorescent tube lights) இக்காலத்தில் பெருகி வருகின்றன. அவைகளில் உள்ள [[பாதரசம்|பாதரச]] ஆவியின் மூலமாக [[மின்சாரம்]] பாய்வதால் அங்குப் [[புறஊதாக் கதிர்கள்]] உண்டாகின்றன. அக்கதிர்கள் குழாய்களின் உட்புறத்தில் தடவப்பட்டுள்ள சில குறிப்பிட்ட ஒளிரிகளில் பட்டு அவற்றை ஒளிவிடச் செய்கின்றன. [[எக்ஸ் கதிர்|எக்ஸ்கதிர்]] உடனொளிர் மானியில் உடனொளிர் திரைகளைப் பயன்படுத்தி, உடம்பின் உட்பாகத்தில் உள்ள உறுப்புக்களைக் கண்டு ஆராய்கிறார்கள்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உடனொளிர்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது