அமோனியம் கார்பனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 39:
| OtherCations = [[சோடியம் கார்பனேட்டு]]<br />[[பொட்டாசியம் கார்பனேட்டு]]
}}}}
'''அமோனியம் கார்பனேட்டு''' (Ammonium carbonate) என்பது (NH<sub>4</sub>)<sub>2</sub>CO<sub>3</sub> என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டினை உடைய உப்பு ஆகும். இது வெப்பமடையும் போது அம்மோனியா மற்றும் கார்பன் டை ஆக்சைடு வாயுக்களாக எளிதில் சிதைவடைவதால், இது ஒரு புளிப்பேற்றியாகவும் நுகரும் உப்பாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது ரொட்டி தயாரிப்போ'''ரின் அம்மோனியா''' என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இச்சேர்மமானது நவீன புளிப்பேற்றிகள் [[சோடியம் பைகார்பனேட்டு|ரொட்டி சோடா]] மற்றும் [[சமையல் சோடா|சமையல் சோடாவுக்கு]] முன்னோடியாக இருந்தது. இது முன்னர் '''ஆவியாகும் உப்பு என்றும்''' மற்றும் ஆர்ட்சார்ன் '''உப்பு''' என்றும் அழைக்கப்பட்டவைகளின் ஒரு பகுதிப்பொருளாகும்.
 
== உற்பத்தி ==
கார்பன் டை ஆக்சைடு மற்றும் அம்மோனியாவின் நீர்க்கரைசலை இணைப்பதன் மூலம் அம்மோனியம் கார்பனேட்டு தயாரிக்கப்படுகிறது. 1997 ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 80000 டன் உற்பத்தி செய்யப்பட்டது.
 
=== சிதைவு ===
அம்மோனியம் கார்பனேட்டு இரண்டு [[திட்ட வெப்ப அழுத்தம்|திட்ட வெப்ப அழுத்த நிலையில்]] இரண்டு வழிமுறைகள் வழியாக மெதுவாகச் சிதைகிறது. ஆகவே, தொடக்கத்தில் தூயதாக காணப்படும் அம்மோனியம் கார்பனேட்டின் எந்த மாதிரியும் விரைவில் பல்வேறு துணை விளைபொருள்கள் உள்ளிட்ட கலவையாக மாறும்.
 
அம்மோனியம் கார்பனேட் தன்னிச்சையாக [[அம்மோனியம் பைகார்பனேட்டு|அம்மோனியம் பைகார்பனேட்]] மற்றும் [[அமோனியா|அம்மோனியாவாக]] [[வேதிச் சிதைவு|சிதைகிறது]] :
 
: (NH<sub>4</sub>)<sub>2</sub>CO<sub>3</sub> → NH<sub>4</sub>HCO<sub>3</sub> + NH<sub>3</sub>
 
இது [[கார்பனீராக்சைடு|கார்பன் டை ஆக்சைடு]], [[நீர்]] மற்றும் இன்னுமொரு மூலக்கூறு [[அமோனியா|அம்மோனியா]] என மேலும் சிதைகிறது:
 
: NH<sub>4</sub>HCO <sub>3</sub> → H<sub>2</sub>O + co<sub>2</sub> + NH<sub>3</sub>
 
== பயன்கள் ==
 
=== புளிப்பேற்றி ===
குறிப்பாக வடக்கு ஐரோப்பா மற்றும் [[எசுக்காண்டினாவியா|எசுக்காண்டிநோவியாவிலிருந்து]] (எ.கா. ஸ்பெகுலூஸ், டன்ப்ரூட் அல்லது லெப்குச்சென் ) பெறப்பட்ட பாரம்பரிய சமையல் குறிப்புகளில் அம்மோனியம் கார்பனேட்டு ஒரு புளிப்பேற்றியாக பயன்படுத்தப்படலாம், இன்றைய நிலையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சமையல் சோடாவிற்கு இது முன்னோடியாக இருந்தது.
 
முதலில் மான் கொம்பிலிருந்து தயாரிக்கப்பட்டு ஆர்ட்சார்ன் என்று அழைக்கப்பட்டது. இன்று இது ரொட்டி தயாரிப்போரின் அம்மோனியா என்று அழைக்கப்படுகிறது. அம்மோனியம் கார்பனேட்டின் உட்பொருளானது அம்மோனியம் பைகார்பனேட் (NH<sub>4</sub> HCO<sub>3</sub>) மற்றும் அம்மோனியம் கார்பமேட் (NH<sub>2</sub>COONH<sub>4</sub>) ஆகியவற்றின் கலவையாகும். இது அம்மோனியம் சல்பேட்டு மற்றும் [[கால்சியம் கார்பனேட்]] கலவையிலிருந்து பதங்கமாதல் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு வெண்ணிறத் தூளாகவோ அல்லது கடினமான, வெண்ணிற அல்லது ஒளிஊடுருவக்கூடிய திடப்பொருளாகவோ காணப்படுகிறது<ref>{{Cite web|url=https://www.accessdata.fda.gov/scripts/cdrh/cfdocs/cfCFR/CFRSearch.cfm?fr=184.1137|title=CFR - Code of Federal Regulations Title 21|website=www.accessdata.fda.gov|access-date=2018-02-07}}</ref> இது வெப்பப்பத்தால் தூண்டப்படும் புளிப்பேற்றியாகச் செயல்பட்டு கார்பன் டை ஆக்சைடு (புளிப்பாக்குதல்), அம்மோனியா (சிதைப்பதற்கான காரணி) மற்றும் நீர் எனச் சிதைகிறது. இது சில நேரங்களில் சோடியம் பைகார்பனேட்டுடன் இணைந்து இருநிலை செயலுறு ரொட்டி சோடாவைப் போல் செயல்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அமோனியம்_கார்பனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது