ஸ்ரீபுரம் பொற்கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 1:
[[File:Sripuram Temple Multiple Views.gif|thumb|300px|ஸ்ரீபுரம் பொற்கோயில்]]
 
'''ஸ்ரீபுரம் பொற்கோயில்''' (Golden Temple Sripuram) [[இந்தியா|இந்தியாவின்]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[வேலூர்]] அருகே திருமலைக்கோடி (அல்லது மலைக்கோடி) எனப்படும் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில் ஆகும்.<ref>[http://dinamani.com/religion/article1211959.ece ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில் தினமணி 08 September 2009]</ref> இத் திருத்தலம், [[திருப்பதி]]யிலிருந்து 120 கி.மீ. தூரத்திலும், [[சென்னை]]யிலிருந்து 145 கி.மீ. தூரத்திலும், [[புதுச்சேரி]]யிலிருந்து 160 கி.மீ. தூரத்திலும் மற்றும் [[பெங்களூர்|பெங்களூரு]]விலிருந்து
200 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இக் கோயிலில் செல்வத்தின் அதிபதியாக இருக்கும் [[லட்சுமி (இந்துக் கடவுள்)|ஸ்ரீலட்சுமி நாராயணிக்கு]]
[[குடமுழுக்கு|குடமுழுக்கு]] வைபவம் கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24ம் தேதி விமரிசையாக நடைபெற்றது. இங்கு அனைத்து சமயத்தினரும் வருகை புரிந்து கோயிலைக் கண்டு களிக்கின்றனர். ஏனெனில், இக் கோயில் 1500 கிலோகிராம் சுத்த தங்கத்தை பயன்படுத்தி செய்த தங்கத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இது அமிர்தசரஸில் இருக்கும் [[பொற்கோயில்|பொற்கோயிலின்]] உட்புற விமானத்தின் (750 கிலோகிராம் தங்கம்) அளவை விட இரட்டிப்பாக உள்ளது.<ref>[http://theplanetd.com/the-golden-temple-of-amritsar-indias-shining-star/ Golden Temple of Amritsar]</ref>
== கோயிலின் அமைப்பு ==
இக்கோயில் முழுவதும் 1,500 கிலோ தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இக் கோயிலில் உள்ள [[லட்சுமி (இந்துக் கடவுள்)|ஸ்ரீலட்சுமி நாராயணி]] சன்னதி [[விமானம் (கோயில் கட்டடக்கலை)|விமானம்]] மற்றும் அர்த்த மண்டபம் முழுவதும் தூய தங்கத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இக்கோயில் 100 ஏக்கர் பரப்பளவுள்ள அழகிய பூஞ்சோலைகளின் நடுவில் ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் உள்ளது. இக் கோயில் வேலூரை மையமாகக் கொண்ட அறக்கட்டளையான நாராயணி பீடம் என்கிற அமைப்பால் கட்டப்பட்டுள்ளது. இதன் தலைவராக ஆன்மீகவாதியான ஸ்ரீ சக்தி அம்மா உள்ளார். இவர் "நாராயணி அம்மா" எனவும் அழைக்கப்படுகிறார். மேலும், இக் கோயில் நாட்டின் சிறந்த சுற்றுச்சூழல் வளாக விருதோடு "பசுமைக் கோயில்' விருதும் பெற்றுள்ளது.<ref>[http://dinamani.com/edition_vellore/article1199341.ece தினமணி 27 October 2010]</ref>
 
கோயிற்கலையில் நிபுணத்துவம் பெற்ற கைவினைஞர்களால், (1,500 கிலோ) தங்கத்தைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட இந்த கோயில், பல சிக்கலான பணிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு விவரமும் கைமுறையாக உருவாக்கப்பட்டது, இதில் தங்கக் கம்பிகளை தங்கத் தகடுகளாக மாற்றுவது, பின்னர் செப்புத் தகடுகளின் மீது தங்க படலங்களை ஏற்றுவது உட்பட பல நுண்ணிய வேலகள் அடங்கும். பொறிக்கப்பட்ட செப்புத் தகடுகளில் 9 அடுக்குகள் முதல் 10 அடுக்குகள் வரை தங்கப் படலம் பொருத்தப்பட்டுள்ளது. கோயிற்கலையில் உள்ள ஒவ்வொரு விவரத்திற்கும் [[[வேதம்|வேதத்திலிருந்து]] முக்கியத்துவம் எடுத்தாளப்பட்டுள்ளது.<ref name=val1>[http://citypatriots.com/asia/india/tamil-nadu/vellore/vellore-golden-temple Vellore Sripuram Golden temple]</ref> இக் கோயில் நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் நட்சத்திர வடிவ பாதையின் இருபுறமும் ஆன்மீக செய்திகள் எழுதப்பட்டுள்ள பதாகைகள் உள்ளன. அதனால் பக்தர்கள் அனைவரும் அந்த பாதையில் நடக்கும்போது செய்திகளைப் படிக்க ஏதுவாக உள்ளது.
 
==மருத்துவமனை==
வரிசை 30:
[[பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள அம்மன் கோயில்கள்]]
[[பகுப்பு:வேலூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்கள்]]
 
[[பகுப்பு:இந்தியாவிலுள்ள அம்மன் கோயில்கள்]]
[[பகுப்பு:இந்துக் கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீபுரம்_பொற்கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது