இரட்டையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி == ஆதாரங்கள் == *{{கலைக்களஞ்சியம்-வெளி|02|037}}
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 10:
 
== அறிதல் ==
ஒரே அண்டத்திலிருந்து உண்டாகும் இரட்டைகளை அறிவதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று கருவை மூடியிருக்கும் உறையைக்கொண்டு அறிவது. மற்றொன்று உரு முதலியவற்றின் ஒற்றுமையைக் கொண்டு அறிவது. இரண்டு குழவிகளும் ஒரே பனிக்குடத்துக்குள் இருக்குமானால் அவை ஒரே அண்டத்திலிருந்து உண்டானவை. வெவ்வேறு [[பனிக்குடம்|பனிக் குடத்து]]க்குள்ளிருக்குமானால் தனித்தனி அண்டங்களிலிருந்து உண்டானவை.எனினும் சில சமயத்தில் ஒரே அண்டத்திலிருந்து உண்டான குழந்தை ஒவ்வொன்றும் வெவ்வேறு பனிக்குடத்தில் இருப்பது முண்டு. ஒற்றுமை வழிப்படிபார்ப்போமானால், இதுவோ அதுவோ என்று மயங்கும் அளவுக்கு இரட்டைப் பிள்ளைகள் ஒத்திருக்குமானால் அவை ஒரே அண்டத்திலிருந்து உண்டானவை. இரத்தக்குழு, கண்ணின் நிறம், விரல் நுனியிலுள்ள ரேகைகள் முதலியவற்றாலும் ஒற்றுமை இரட்டைகளை அறிந்துகொள்ளலாம். ஒரு பேற்றில் ஒரு குழந்தை பெறுவதற்கு ஏற்றவாறு மானிடத் தாயின் உறுப்புக்கள் அமைந்திருக்கின்றன. ஒரு தடவையில் ஒன்றுக்கு மேல் குழந்தைகள் உண்டாகுமானால் அந்தக் குழந்தைகள் உயிரோடு இருப்பதற்கு இடர்ப்பாடுகள் அதிகம் உண்டு. இரண்டு குழந்தைகள் இருந்தால் கருப்பையில் நெருக்கம் உண்டாகும் ; காலம் நிரம்புவதற்கு முன்பே குழந்தைகள் பிறந்துவிடும். உயிரோடு பிறந்தாலும் அவற்றிற்கெல்லாம் செம்மையாகப் போதிய அளவு பால் முதலிய [[உணவு]] கொடுப்பதும், அவற்றைச் சரியாகப் பேணுவதும் மிகவும் கடினம். மூன்று, நான்கு, ஐந்து உண்டானால் தொந்தரவு அத்துணை அதிகம். அவை பிழைப்பதும் அருமை. இவை போன்ற காரணங்களால் இக்குழந்தைகள் தவறிவிடுகின்றன. மருத்துவக் கலை பெரிதும் முன்னேறியுள்ள இக்காலத்தில், இந்தமாதிரி [[குழந்தை]]களை வளர்ப்பது முன்னிலும் எளிதாக இருக்கின்றது. 1934-ல் கானடாவில் பிறந்த டயான் குழந்தைகள் ஐந்தும் நன்றாக வளர்க்கப்பட்டு வருகின்றன.
 
சில சமயங்களில் ஒரே அண்டத்திலிருந்து உண்டான இரட்டைகள் வெவ்வேறாகாமல் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு பிறக்கின்றன. இம்மாதிரி பிறந்தவை சீயதேசத்தில் பேர்பெற்றவை இருந்தன. ஆதலால் இத்தகைய ஒட்டுப் பிறவிகளைச் சீயத்து இரட்டைகள் (Siamese twins) என்பார்கள். இவற்றில் முதுகெலும்புகூட இரண்டுக்கும் ஒன்றாக இருக்கலாம்.
வரிசை 27:
== ஆதாரங்கள் ==
*{{கலைக்களஞ்சியம்-வெளி|02|037}}
 
 
 
[[பகுப்பு:மனித இனப்பெருக்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/இரட்டையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது