கெர்மான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: -{{inuse}}
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 56:
}}
 
'''கெர்மான்'''(''Kerman'') ({{lang-fa|{{audio|Fa-Kerman.ogg|كرمان|help=no}}}}; ரோமானியப்படுத்தப்பட்ட பெர்சியமொழியில் '''Kermān''', '''Kermun''', '''Kirman''' ஆகிய சொற்களால் அழைப்பர். '''கார்மேனியா''' (''Carmania'') என்றும் இந்நகரத்தினை அழைப்பதுண்டு.<ref>{{GEOnet3|-3070237}}</ref> [[ஈரான்]] நாட்டிலுள்ள நிருவாக மாகாணங்களில் ஒன்றான, [[கெர்மான் மாகாணம்|கெர்மான் மாகாணத்தின்]] தலைநகரமாக, இந்நகரம் திகழ்கிறது. <ref> {{GEOnet3 | -3070237}} </ref> 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, இந்த நகரத்தின் மக்கள் தொகையானது, 821,394 நபர்களைப் பெற்று இருந்தது. இந்நபர்களைக் கொண்டுள்ள குடும்பங்களின் அல்லது வீடுகளின் எண்ணிக்கை 2,21,389 வீடுகள் ஆகும். மக்கள் தொகை அடிப்படையில், இந்நகரம் ஈரானின் பத்தாவது மக்கள் தொகைப் பெருக்கம் உள்ள நகரமாக இருந்தது.<ref>{{IranCensus2006|08}}</ref>
 
ஈரானின் தென் கிழக்கு மூலையில் அமைந்துள்ள நகரங்களில் முக்கிய நகரமாகக் கருதப்படுகிறது. இந்த கெர்மான் நகரமானது, மிகப்பெரியதாகவும், மிகுந்த வளர்ச்சிகளையும் தன்னகத்தேப் பெற்றுள்ளது. நிலப் பரப்பளவு அடிப்படையிலும், இந்த ஈரானின் நகரமானது, மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக உள்ளது. கெர்மான் நகரம் தனித்துவமான நில அமைப்புகளையும், நீண்ட வரலாற்றுப் பதிவுகளையும், பெருமை மிகுந்த வலுவான [[கலாச்சாரம்|கலாச்சாரத்தையும்,]] [[பாரம்பரியம்|பாரம்பரியத்தையும்]], [[பண்பாடு|பண்பாடுகளையும்]] ஆகியவற்றால் புகழ் பெற்று விளங்குகிறது. இதன் நகர வரலாற்றில், இந்த நகரமானது, பல முறை ஈரானின், பல்வேறு பரம்பரை ஆட்சியின் போது, தலைநகராக இந்நகரம் இருந்து உள்ளது. இது ஈரானின் தலைநகரான [[தெகுரான்]] நகரத்தின் தென் கிழக்கில் அமைந்துள்ள இந்நகரம், தெகுரானிலிருந்து 800 [[கி.மீ]] (500 [[மைல்]]) தொலைவில் அமைந்துள்ளது. இதன் நிலப்பகுதியானது, பெரிய, தட்டையான சமவெளி நிலமாக இருக்கிறது. அதனால் நகரத்தின் கட்டிட அமைப்புகள் சிறப்பாகவும், நகர மேலாண்மைக்கு வசதியாகவும் இயற்கையாகவே சிறப்பு இயல்புகளைப் பெற்றுள்ளது.
 
== வரலாறு ==
[[படிமம்:Kerman_Masjid_Gate.jpg|வலது|thumb|300x300px| ஆகா முகமது கான் நகரத்திற்குள் நுழைந்த மஸ்ஜித் வாயில் ]]
[[படிமம்:Rayen_Castle_01.jpg|வலது|thumb|300x300px| உலகின் இரண்டாவது பெரிய செங்கல் கட்டிடமான ரைனின் கோட்டை ]]
கெர்மான் [[3-ஆம் நூற்றாண்டு|3 ஆம் நூற்றாண்டில்]], [[சாசானியப் பேரரசு|சாசானிய பேரரசின்]] நிறுவனர் அர்தாஷீர் I என்பவரால் '''வாகன்-அர்தாஷீர்''' என்ற பெயருடன், நிரந்தரமற்ற இடமாக நிறுவப்பட்டது. <ref> Xavier de Planhol and Bernard Hourcade, “KERMAN ii. Historical Geography,” Encyclopædia Iranica, XVI/3, pp. 251-265 </ref> 642ஆம் ஆண்டு நகவந்துப் போருக்குப் பிறகு, இந்நகரமானது, இசுலாமியர் ஆட்சியின் கீழ் இருந்தது. முதலில் [[சொராட்டிரிய நெறி|ஜோரோஸ்ட்ரியன்கள்]], தனித்திருந்தல் அனுமதியால் செழித்து வாழ்ந்தனர். 698 ஆம் ஆண்டுக்குள் காரிசிடேசு([[:en:Kharijites|Kharijites]]) எண்ணிக்கை பெருமளவு குறைந்து அழிந்தனர் எனலாம். இதனால் 725 ஆம் ஆண்டில், இந்நகரில் பெரும்பாலும் [[இசுலாமியர்|இசுலாமிய ர்களே]] இருந்தனர். ஏற்கனவே, [[8-ஆம் நூற்றாண்டு|எட்டாம் நூற்றாண்டில்]] இந்த நகரம், காஷ்மீர் கம்பளி சால்வைகள் உற்பத்தியிலும், பிற ஜவுளி உற்பத்தியிலும் புகழ் பெற்று இருந்தது. இப்பகுதி மீதான [[அப்பாசியக் கலீபகம்|அப்பாஸிட் கலிபாவின்]] அதிகாரம் பலவீனமாக இருந்தது. பத்தாம் நூற்றாண்டில் மக்கள் மீதான அதிகாரம் என்பது, பாயிட் வம்சத்திற்கு கிடைத்தது. அதன் பிறகு பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், [[கசினியின் மகுமூது|காஸ்னியின் மஹ்மூதிடம்]] கட்டுப்பாட்டில் வீழ்ந்தபோதும், நகரின் சில பகுதிகளில் பழையக் கட்டுபாடுகளே பேணப்பட்டன. கெர்மான் என்ற பெயரானது, பத்தாம் நூற்றாண்டின் ஒரு காலக் கட்டத்தில் தான், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டது. <ref>A.H.T. Levi, "[https://books.google.com/books?id=R44VRnNCzAYC&pg=RA1-PA413&dq=kerman Kerman]," in ''International Dictionary of Historic Places'', ed. Trudy Ring, Chicago: Fitzroy Dearborn, 1995-1996, vol. 4, p. 413.</ref>
 
== காலநிலை ==
கெர்மான் நகரத்தின் காலநிலையானது, பாலைவனக் காலநிலை கணக்கீடுகளின் படி, குளிர் குளிர் மிகுந்தும், கோடை காலத்தில் வெப்பம் மிகுந்தும், கோப்பன் காலநிலை முறைப்படி ('' BWk'') உள்ளது. ஆண்டு முழுவதும் மழை பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நகரின் பல மாவட்டங்கள், மலைகளால் சூழப்பட்டுள்ளன. இம்மலைகள், ஆண்டு முழுவதும் வானிலை முறைமைக்கு, பல்வேறு வகைகளைக் கொண்டு வந்து, இந்நகருக்கு உதவுகின்றன. இந்த நகரின் வடக்குப் பகுதியானது, வறண்ட பாலைவனப் பகுதியாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், நகரின் தெற்கு பகுதியின் மலைப்பகுதி நிலங்களானது, மிகவும் மிதமான காலநிலையைப் பெற்று, மக்களுக்கு உகந்த நிலையில் திகழ்கிறது. கடல்மட்டத்தில் இருந்து, இந்நகரின் சராசரி உயரம், {{convert|1755|m|ft|abbr=on}} ஆகும்.
 
[[பகுப்பு:Coordinates on Wikidata]]
[[பகுப்பு:ஈரானின் நகரங்கள்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:Coordinates on Wikidata]]
[[பகுப்பு:ஈரானின் நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கெர்மான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது