காண்டுவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 14:
 
== பொருளாதாரம் ==
காண்டுவா நகரமானது உள்ளூர் பயிர்களான பருத்தி, கோதுமை (கண்ட்வா 2), சோயா அவரை மற்றும் பலவகையான பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு பிரபலமானது. இங்கு பயிரிடப்படும் கோதுமை வகை காண்ட்வா 2 என்பது அதன் நறுமணம், நிறம் மற்றும் தரம் ஆகியவற்றிற்கு நாடு முழுவதும் பிரபலமானது. முந்தைய காண்டுவா மத்திய இந்தியாவின் கஞ்சா பயிரிடப்படும் ஒரே நகரமாக காணப்பட்டது.
 
இந்திரா சாகர் பரியோஜ்னா என்ற நீர்மின் திட்டம் கண்ட்வாவுக்கு அருகில் அமைந்துள்ளது. சாந்த் சிங்காஜி வெப்ப மின் திட்டம் (2 × 600 மெகாவாட்) காண்டுவாவில் உள்ள ஒரு சிறிய நகரமான முண்டியில் உள்ள டோங்கலியா கிராமத்தில் அமைந்துள்ளது.
 
== புகழ் ==
சூரஜ் குந்தா, பத்மா குளம், பீமா குளம் மற்றும் ராமேஸ்வர் குளம் ஆகிய நான்கு குளங்களும் நான்கு திசைகளில் உள்ளன. இவை வரலாற்றுடன் தொடர்புடையன.
 
பண்டைய துல்ஜா பவானி கோயில், தாதா தர்பார் மற்றும் நவீன நவ-சண்டி தேவி தாம் ஆகியவை இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.
 
புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான தாதா தர்பார் கண்ட்வா , நாகூன் தலாப் மற்றும் ஹனுமந்தியா தீவு என்பன இங்கு அமைந்திருக்கின்றன.
 
புகழ்பெற்ற நடிகர் / பாடகர் கிஷோர் குமார் காண்ட்வாவில் பிறந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/காண்டுவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது