"வாழ்தகு வேளாண்மை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
மேம்படுத்தல் using AWB
சி (மேம்படுத்தல் using AWB)
[[File:Bakweri cocoyam farmer from Cameroon.jpg| thumb| காமரூன் மலைச்சரிவில் தாரோ வயலில் பாக்வேரி உழவர் பணிபுரிதல் (2005).]]
 
'''வாழ்தகு வேளாண்மை''' ''(Subsistence agriculture)'' அல்லது '''பிழைப்புநிலை வேளாண்மை''' அல்லது '''தரிப்புநிலை வேளாண்மை''' என்பது உழவர்கள் தமக்கும் தம் குடும்பங்களுக்கும் மட்டும் போதுமான உணவுப் பயிரை மேற்கொள்ளும் வெளாண்மையாகும். இவ்வகை வேளாண்மையில் வாழ்க்கையைத் தரிக்கவைப்பதற்கு மட்டும் அதாவது களத்தேவைகளுக்கு மட்டுமே பயிரீடு நிகழ்கிறது. விற்பனைக்கு உபரி ஏதும் மிஞ்சாது. இம்முறையில் ஓராண்டில் குடும்பத்துக்கு வேண்டிய உணவுக்கும் உடைக்கும் மட்டுமே பயிரீடும் கால்நடை வளர்ப்பும் மேற்கொள்ளப்படும் . அடுத்த ஆண்டுக்கான தேவையளவுக்கே பயிர்நடவு மேற்கொள்ளப்படும். தோனி வாட்டர்சு<ref name="Waters">Tony Waters. ''The Persistence of Subsistence Agriculture: life beneath the level of the marketplace''. Lanham, MD: Lexington Books. 2007.</ref> எழுதுகிறார்: " வழ்தகுநிலை உழவர்கள் பயிரிட்டு, உண்டு, உடுத்து வீடுகட்டி வாழும் மக்களாவர்; இவர்கள் சந்தைகளுக்க்குச் சென்று அடிக்கடி கொள்வினை செய்வதில்லை."
 
==வறுமை ஒழிப்பு==
இந்த வாழ்தகு வேளாண்மையை வறுமையொழிப்பு ஆயுதமாகத் திட்டமிடப் பயன் கொள்ளலாம். குறிப்பாக, விலை உயர்வு அதிர்ச்சிகளைத் தாங்கவல்ல உணவுக்கான காப்புவலையாகவும் உணவுக் காப்புறுதி வழங்கவும் பயன்படுத்தலாம். உயர், நடுத்தர வருவாயுள்ள நாடுகளைப் போலல்லாமல், உள்நாட்டு விலையேற்றத்தினை மேலாண்மை செய்யவும் அதற்காக உதவி செய்யவும் போதுமான நிதிவளமும் நிறுவன ஏற்பாடுகளும் குறைந்த ஏழை நாடுகளில், இதைத் தவிர வேறு வழியில்லை. <ref name=":15">{{Cite journal|last=de Janvry|first=Alain|last2=Sadoulet|first2=Elisabeth|date=2011-06-01|title=Subsistence farming as a safety net for food-price shocks|journal=Development in Practice|volume=21|issue=4–5|pages=472–480|doi=10.1080/09614524.2011.561292|issn=0961-4524}}</ref> குறைந்த வருவாயுள்ள நாடுகளில் அமையும் 80% அளவிலான மக்கள்தொகையினர். ஊரகப் பகுதிகளிலேயே உள்ளனர். ஊரகப் பகுதியில் உள்ள வீடுகள் 90% அளவுக்கு நிலத்தை அணுக வாய்ப்புள்ளது. இருந்தாலும் பெரும்பாலான ஊரக மக்களுக்கு உணவு கிடைப்பதில்லை.<ref name=":15" /> எனவே, வாழ்தகு வேளாண்மையைப் பயன்படுத்தி, குறைந்த வருவாயுள்ள நாடுகளில் குறுகிய, இடைநிலை உணவு நெருக்கடிகளைத் தவிர்க்கலாம். அதன்வழியாக ஏழை மக்களுக்கான உணவுக் காப்புறுதியையும் வழங்கலாம்.<ref name=":15" />
 
==மேலும் காண்க==
[[பகுப்பு:வேளாண்தொழிலாளர்]]
[[பகுப்பு:வேளாண்பொருளியல்]]
[[பகுப்பு: எளிய வாழ்க்கை]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2868514" இருந்து மீள்விக்கப்பட்டது