கால்நடை வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
 
வேளாண்மைச் சமூகங்களின் தோற்றத்துடனேயே கால்நடை வளர்ப்புத் தொடங்கியது. விலங்குகளின், இனப்பெருக்கத்தையும் வாழ்க்கைச் சூழலை மனிதன் கட்டுப்படுத்தத் தொடங்கியபோது சில விலங்குகள் வீட்டுவிலங்குகள் ஆயின. காலப் போக்கில், கால்நடைகளின், கூட்டு நடவடிக்கை, வாழ்க்கை வட்டம், உடற்கூறு என்பவற்றில் அரிய மாற்றங்கள் உருவாகின. இன்றைய பண்ணை விலங்குகள் காடுகளில் வாழ்வதற்குப் பொருத்தமற்றவை ஆகும். [[ஆடு]]கள், [[செம்மறியாடு]]கள், [[பன்றி]]கள் என்பன கி.மு 8000 ஆண்டளவிலேயே [[ஆசியா]]வில் வளர்ப்பு விலங்குகளாக இருந்தன. குதிரை வளர்ப்பு கி.மு 4000 ஆண்டளவில் தொடங்கியதாகக் கருதப்படுகின்றது.
 
வீட்டினமாக்கம் ஓர் எளிய நிகழ்வன்று. இது பல இடங்களில் பல காலங்களில் திரும்பத் திரும்ப ஏற்பட்ட தொடர்நிகழ்வாகும். செஅறியாடுகளும் வெள்ளாடுகளும் நடுவண் கிழக்குப் பகுதியில் இருந்து மேய்ச்சல் நாடோடிகளைப் பின்தொடர்ந்தவையாகும். ஆனால், மாடுகளும் பன்றிகளும் மிகவும் நிலையாக இடம்பெயராமல் வாழத் தொடங்கிய சமூகங்களுடன் உடனிருந்தவையாகும்.<ref name=Historyworld>{{cite web|url=http://www.historyworld.net/wrldhis/PlainTextHistories.asp?historyid=ab57|title=History of the domestication of animals|publisher=Historyworld|access-date=3 June 2017}}</ref>
 
முதலில் வீட்டினமாக்கப்பட்ட விலங்கு [[நாய்]]தான். இளைய அரைக்காட்டு நாய் முதலில் துப்புரவு விலங்குகளாக ஏற்ருக்கொள்ளப்பட்டு, அதன் வேட்டையாடும் இயல்பை உணர்ந்ததும் மாந்த வேட்டையில் பங்கு பெற்றிருக்கவேண்டும். பிறகு, வேட்டையாடப்பட்ட விலங்குகளாகிய, செஅறியாடு, வெள்ளாடு, பன்றி, மாடு போன்றவை வேளாண்மை வரலாற்றின் மிக முந்திய காலத்தில் வீட்டினமாக்கப் பட்டிருக்கவேண்டும்.<ref name=Historyworld/>
"https://ta.wikipedia.org/wiki/கால்நடை_வளர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது