கால்நடை வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
வரிசை 17:
உலகின் பல பகுதிகளில் [[குதிரை]], [[நீர் எருமை]], [[இலாமா]] ஒட்டகம், [[முயல்]], [[கினியாப் பன்றி]] போன்ற பலவகைக் கால்நடைகள் நடைமுறைக்கு வந்தன. இன்னும் சில பகுதிகளில் [[பூச்சி வளர்ப்பு]]ம் மீன்கள், மெல்லுடலிகள், ஓட்டுடலிகளும் வளர்க்கும் [[நீரியல் பண்ணை]]களும் பரவலாகின.
 
கிடைக்கும் நிலங்களுக்கு ஏற்பத் தகவமைந்து, தற்கால வேளாண்விளைச்சல் அமைப்புகளும் கால்நடை வளர்ப்புப் பண்ணைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. உலகின் மிக வளர்ந்த நாடுகளில் செறிநிலை விலங்குப் பண்ணைகளை விட [[வாழ்தகுவேளாண்மைவாழ்தகு வேளாண்மை]] வடிவமே வெற்றி கண்டு வருகிறது. இங்கு உயரடர்த்திப் பண்ணைகளில் பன்றி இறைச்சிக் கால்நடைகளும் பிராயிலர் இல்லங்களில் அல்லதுஅடுக்குப் பண்ணைகளில் ஆயிரக் கணக்கான கோழிகளும் வளர்க்கப்படுகின்றன. வளங்குறைந்த மேட்டு நிலங்களில், தாமே பரவலான இடங்களில் மேய்ந்து வளரும்படி விலங்குகள் செறிவாக மேயவிடப்படுகின்றன.
 
பன்றிகள், கோழிகளைத் தவிர,பெரும்பாலான கால்நடைகள் தாவரவுண்ணிகளாக அமைகின்றன. முன்னவை அனைத்துண்ணிகளாகும். மாடு, ஆடு போன்ற அசைபோடும் விலங்குகள் புல்லுண்ணத் தகவமைந்துள்ளன; அவை வெளியே விட்டு மேயவிடப்படுகின்றன அல்லது கூலங்களைப் போன்ற வளமான புரத உணவு முழுமையாகவோ, பகுதியாகவோ ஊட்டப்படுகின்றன. பன்றிகளும் கோழியினப் பறவைகளும் தாம் மேயும் கூலங்களைச் செரிக்கவல்லனவாக இல்லை. எனவே, அவற்றுக்கும் பதப்படுத்திய கூலங்களும் பிற உயர்வள உணவுகளும் தேவைப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/கால்நடை_வளர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது