எகிப்தியக் கோவில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 21:
ஒவ்வொரு கோவிலும் ஒரு முதன்மைக் கடவுளைக் கொண்டிருந்ததுடன் பெரும்பாலான கோவில்கள் ஏனைய தெய்வங்களையும் உள்ளடக்கியிருந்தன.<ref>{{harvnb|Meeks|Favard-Meeks|1996|pp=126–128}}</ref> எவ்வாறாயினும் எல்லாத் தெய்வங்களுக்கும் கோவில்கள் காணப்படவில்லை. பெரும்பாலான பேய்களும் வீட்டுத் தெய்வங்களும் முதன்மையாக மாய மற்றும் தனிப்பட்ட சமய நடவடிக்கைகளில் தொடர்புபட்டிருந்ததோடு, கோவில் விழாக்களில் இவற்றின் பிரசன்னம் குறைவாகவே இருந்தது. மேலும் சில தெய்வங்கள் பிரபஞ்ச இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்திருந்தபோதும், அவற்றுக்கு கோவில்கள் கட்டப்படவில்லை. இதற்கான காரணமும் அறியப்படவில்லை.<ref>{{harvnb|Wilkinson|2000|p.=82}}</ref> தமக்கெனத் தனிப்பட்ட கோவில்களை கொண்டிருந்த தெய்வங்களில் பல குறிப்பாக எகிப்தின் சில பகுதிகளில் மதிப்பு பெற்றிருந்தன. எனினும், உள்ளூர் தொடர்புகளைக் கொண்டிருந்த பல தெய்வங்களும் நாடளாவிய ரீதியில் முக்கியம் பெற்றிருந்தன.<ref>Teeter, Emily, "Cults: Divine Cults", in {{harvnb|Redford|2001|loc=vol. I|p=340}}</ref> நாட்டின் எல்லாப் பாகங்களிலும் வழிபடப்பட்ட தெய்வங்கள் கூட தமது முதன்மைக் கோவில்கள் அமைந்துள்ள நகரங்களுடன் தொடர்பு பட்டிருந்தன. எகிப்திய படைப்புப் புனைகதைகளில், முதலாவது கோவிலானது ஒரு தெய்வத்தின் புகலிடமாக உருவானதாகக் குறிப்பிடப்படுகிறது. ஒரு குறித்த தெய்வம் (ஒவ்வொரு நகரிலும் இத் தெய்வத்தின் பெயர் மாறுபடுகிறது.) படைப்பு ஆரம்பமான மணல் திட்டு ஒன்றின்மீது நின்றிருந்ததாகவும், அவ்விடமே முதல் கோவிலாக மாறியதாகவும் அது குறிப்பிடுகிறது.<ref>{{harvnb|Reymond|1969|pp=323–327}}</ref> தெய்வத்தின் முதலாவது வீடு என்றவகையிலும், ஒரு நகரின் கற்பனை ரீதியிலான உருவாக்கப் புள்ளி என்ற வகையிலும், கோவிலானது குறித்தவொரு பகுதியின் மைய நிலையமாகக் கருதப்பட்டதோடு, அந்நகரின் காவல் தெய்வம் ஆட்சிபுரியும் இடமாகவும் போற்றப்பட்டது.<ref>{{harvnb|Assmann|2001|pp=19–25}}</ref>
 
பாரோக்கள் இறப்புக்குப் பின்னான வாழ்வில் தமது ஆவிகளை நீடித்திருக்கச் செய்யும் பொருட்டு காணிக்கைகள் செலுத்துமுகமாகவும் கோவில்களைக் கட்டினர். இவை பெரும்பாலும் அவர்களது கல்லறைகளின் அருகிலேயே அமைந்திருந்தன. இக் கோவில்கள் வழிவழியாக "கல்லறைக் கோவில்கள்" என அழைக்கப்பட்டு வந்ததோடு, திருக்கோவில்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தன. எனினும், அண்மைய காலங்களில், செரார்ட் கேனி போன்ற எகிப்தியவியலாளர்கள் இப்பிரிவினை தெளிவற்றுக் காணப்படுவதாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர். எகிப்தியர்கள் கல்லறைக் கோவில்களை வேறு பெயர் கொண்டு அழைத்திருக்கவில்லை.<ref name="Haeny 89">Haeny, Gerhard, "New Kingdom 'Mortuary Temples' and 'Mansions of Millions of Years'", in {{harvnb|Shafer|1997|pp=89–102}}</ref>{{refn|"mansion of millions of years" ("ஆயிரவாண்டுகால வசிப்பிடம்") எனும் சொற்றொடர் கல்லறைக் கோவில்களுக்கான எகிப்திய வார்த்தையாகக் கருத்திலெடுக்கப்படுகிறது. எனினும், பல இடங்களில் எகிப்தியர்கள் இச் சொற்றொடரின் மூலம் பொதுவாக "கல்லறை" எனக் கருதப்படாத புனித கட்டடங்களையும் குறிப்பிட்டுள்ளனர். எடுத்துக்காட்டாக, லக்சர் கோவில் மற்றும் கர்னாக்கிலுள்ள மூன்றாம் துத்மோசின் விழா மண்டபம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.<ref name="Haeny 89"/> பற்றீசியா இசுபென்சரின் கூற்றுப்படி, "குறித்த கோவிலானது அப் பகுதியின் முதன்மைத் தெய்வமொன்றுக்குக்காக கட்டப்பட்டிருந்தாலும், மன்னரை முதன்மையாகக் கொண்ட சடங்குகள் நிகழ்த்தப்படும் எந்தவொரு கோவிலும்" இச்சொல்லினால் குறிக்கப்பட்டது.<ref>{{harvnb|Spencer|1984|p=25}}</ref>|group="Note"}} இறந்தோருக்கான சடங்குகளும், தெய்வங்களுக்கான சடங்குகளும் பிரித்தறிய முடியாதவை; இறப்பைச் சூழ்ந்த குறியீட்டியல் அனைத்து எகிப்தியக் கோவில்களிலும் காணக்கிடைக்கிறது.<ref>Shafer, Byron E., "Temples, Priests, and Rituals: An Overview", in {{harvnb|Shafer|1997|pp=3–4}}</ref> கல்லறைக் கோவில்களில் குறிப்பிட்டளவு கடவுள் வழிபாடும் காணப்பட்டுள்ளது. எகிப்தியவியலாளரான இசுடீபன் குயிர்க்கின் கூற்றுப்படி, "எல்லாக் காலப்பகுதியிலும் அரச சடங்குகள் கடவுளுடன் தொடர்பு பட்டிருந்தன. அதேபோல்.... கடவுள் தொடர்பான சடங்குகளும் மன்னருடன் தொடர்பு பட்டிருந்தன".<ref>Quirke, Stephen, "Gods in the temple of the King: Anubis at Lahun", in {{harvnb|Quirke|1997|p.=46}}</ref> எவ்வாறாயினும், சில கோவில்கள் இறந்த மன்னர்களை நினைவு கூரவும், அவர்களது ஆவிகளுக்கு காணிக்கை செலுத்தவும் பயன்படுத்தப்பட்டமை தெளிவாகின்றது. இவற்றின் சரியான நோக்கம் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. இவை மன்னர்களையும் கடவுளர்களையும் ஒருங்கிணைத்து, மன்னனின் நிலையை சாதாரண மன்னர் நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்த்துவதற்குப் பயன்பட்டிருக்கலாம்.<ref>Haeny, Gerhard, "New Kingdom 'Mortuary Temples' and 'Mansions of Millions of Years'", in {{harvnb|Shafer|1997|pp=123–126}}</ref> எச் சந்தர்ப்பத்திலும், கல்லறைக் கோவில்களையும் திருக் கோவில்களையும் பிரித்தறிவதில் ஏற்படும் சிரமம், எகிப்திய நம்பிக்கையில் அரசுரிமையும், கடவுள்நிலையும் ஒன்றுடனொன்று பிணைக்கப்பட்டிருப்பதைத் தெளிவாகப் பிரதிபலித்து நிற்கின்றது.<ref>Shafer, Byron E., "Temples, Priests, and Rituals: An Overview", in {{harvnb|Shafer|1997|pp=2–3}}</ref>
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/எகிப்தியக்_கோவில்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது