திருநெல்வேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 100:
திருநெல்வேலியின் வரலாற்றை இங்கு வந்திருந்த கிறித்தவப் பாதிரியார் [[ராபர்ட் கால்டுவெல்]] (1814–91) ஆய்வு செய்துள்ளார்.{{sfn|Caldwell|1989}}{{sfn|Daughrity|2005}}{{sfn|Mission Studies|2007}} திருநெல்வேலி [[பாண்டியர்|பாண்டிய]] அரசர்களின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது; அவர்களின் முதன்மைத் தலைநகரமாக [[மதுரை]] இருந்தது.{{sfn| Stein|1989|p=79}} இங்கிருந்த பாண்டிய வம்சம் [[அனோ டொமினி]]க்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன; [[அசோகர்]] (கி.மு 304–232) காலக் கல்வெட்டுக்களிலும் ''[[மகாவம்சம்]]'', ''[[வராகமிகிரர்|வராகமிகிரரின் பிரகத் சம்கிதை]]'' மற்றும் [[மெகஸ்தெனஸ்|மெகஸ்தனிசின்]] (கிபி 350–290) நூலிலும் இப்பேரரசு குறிக்கப்பட்டுள்ளது. இந்த இராச்சியம் கி.பி 1064இல் [[இராசேந்திர சோழன்]] காலத்தில் [[சோழர்]] ஆட்சியின் கீழ் வந்தது.{{sfn|Caldwell|1989|p=23-30}} 13ஆவது நூற்றாண்டு வரை சோழரின் ஆட்சியிலிருந்த திருநெல்வேலி பின்னர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பிற்காலப் [[பாண்டியர்|பாண்டியரின்]] கீழ் வந்தது.{{sfn|Salma Ahmed|2011|p=26}}
 
13ஆவது, 14ஆவது நூற்றாண்டுகளில் நெல்லையப்பர் கோவில் [[பாண்டியர்]]களின் அரசக் கோவிலாக விளங்கியது. அரச ஆதரவினால் அக்காலத்தில் பல அணைகள் கட்டப்பட்டன. [[முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்|குலசேகரப் பாண்டியனின்]] (1268–1308) மரணத்திற்குப் பிறகு, 16ஆவது நூற்றாண்டில் விசயநகர மன்னர்களும் மறவ ஆட்சியாளர்களும் (பாளையக்காரர்கள்) ஆட்சி புரிந்தனர். மறவர்கள் மேற்கத்திய மலையடிவாரத்திலும் தெலுங்கு, கன்னடர்கள் கிழக்கத்திய கரிசல் மண் பிரதேசத்திலும் குடியேறினர். திருநெல்வேலி [[மதுரை நாயக்கர்கள்|மதுரை நாயக்கர்களின்]] இரண்டாம் தலைநகரமாக இருந்தது;{{sfn| Stein|1989|p=79}} [[விசுவநாத நாயக்கர்]] (1529–64) காலத்தில் 1560இல் திருநெல்வேலி மீளமைக்கப்பட்டது. நெல்லையப்பர் கோவிலில் உள்ள கற்றளிகளில் இவரது தாராளமான நன்கொடை பதியப்பட்டுள்ளது.{{sfn|Hunter|1908|pp=379–380}} 1736இல் நாயக்கராட்சி முடிவுக்கு வந்தது; 18ஆம் நூற்றாண்டின் மையக்காலத்தில் இப்பகுதியை [[சந்தா சாகிப்]] (1740–1754), [[ஆற்காடு நவாப்]] மற்றும் [[மருதநாயகம்]] (1725–1764) கைபற்றினர்கைப்பற்றினர்.{{sfn|Harman| 1992| pp= 30–36}}{{sfn|W.|2002|p=214-221}}
 
1743இல் நிசாம்-உல்-முல்க், [[தக்காணப் பீடபூமி]]யின் தளபதி, இப்பகுதியில் இருந்த மராத்தியர்களை விரட்டியடித்து, இப்பகுதி [[ஆற்காடு நவாப்]] ஆட்சியின் கீழ் வந்தது. இருப்பினும் அதிகாரம் நாயக்கர்களின் படைத்தளபதிகளாக இருந்த [[பாளையக்காரர்கள்|பாளையக்காரர்களிடம்]] இருந்தது. திருநெல்வேலி நாயக்கர் ஆட்சியிலும், நவாப் ஆட்சிக்காலத்திலும் முதன்மை வணிக நகரமாக விளங்கிய இந்நகரம் நெல்லைச் சீமை எனப்பட்டது; ''சீமை'' என்பதற்கு "வளர்ச்சியுற்ற வெளிநாட்டு நகரம்" எனப் பொருள் கொள்ளலாம்.{{sfn|''The Hindu''|19 May 2007}} [[பாளையக்காரர்கள்]] மலைகளில் கோட்டைகள் கட்டிக்கொண்டு, தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு வந்தனர். 1755இல் பிரித்தானிய அரசு மேஜர் எரானையும் மகபுசு கானையும் அனுப்பி அமைதி ஏற்படுத்தினர். திருநெல்வேலி நகரம் மகபூசு கானுக்கு வழங்கப்பட்டது. பாளையக்காரர்கள் மகபூசு கானுடன் சண்டையிட்டனர். மகபூசுகானுக்கு உதவியாக கிழக்கிந்தியக் கம்பனி முகமது யூசபை அனுப்பியது. கான் ஆட்சியைக் கைபற்றிய பின்னர் 1763இல் எதிர்பாளராக மாறினார். இதனால் 1764இல் கான் தூக்கிலிடப்பட்டார். 1758இல் பிரித்தானிய துருப்புகள் தளபதி புல்லர்டன் தலைமையில் [[கட்டபொம்மன்|கட்டபொம்மனை]] வென்றனர். 1797இல் பானர்மேன் தலைமையிலான பிரித்தானியருக்கும் கட்டபொம்மன் தலைமையிலான பாளையக்காரர்களுக்கும் முதலாம் பாளையக்காரப் போர் மூண்டது. எட்டையபுரம் மன்னர் போன்ற சில பாளையக்காரர்கள் பிரித்தானியர்களுக்கு ஆதரவாயிருந்தனர். கட்டபொம்மன் தோற்கடிக்கப்பட்டு தனது [[பாஞ்சாலங்குறிச்சி]]யில் தூக்கிலிடப்பட்டார். இரண்டாண்டுகள் கழித்து இரண்டாம் பாளையக்காரர் போர் நிகழ்ந்தது. மிகுந்த எதிர்ப்புக்கு பிறகு பிரித்தானியர் மீண்டும் வென்றனர். நவாபுடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி கர்னாடிக் பகுதி பிரித்தானியர் ஆட்சி கீழ் வந்தது.{{sfn|Hunter|1908|pp=375–379}}{{sfn|Caldwell|1989|p=93-96}}{{sfn|W.|2002|p=214-221}}
 
1801இல் நவாபிடமிருந்து திருநெல்வேலியைப் பெற்ற பிறகு பிரித்தானியர் இதனைத் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டத்தின் தலைநகரமாக்கினர். நிர்வாக, படைத்துறை தலைமையகங்கள் [[பாளையம்கோட்டை]]யில் அமைந்தன. இந்திய விடுதலைக்குப் பிறகு திருநெல்வேலி மாவட்டத் தலைநகரமாக விளங்கியது. 1986இல் தனியாக [[தூத்துக்குடி மாவட்டம்]] பிரிந்தது.{{sfn|Kanmony|2010|p=42}} தற்போதைய இந்திய அரசின் 100 நுண்சீர் நகரங்களில் ஒன்றாக திருநெல்வேலி அடையாளம் காணப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/திருநெல்வேலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது