உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 456:
 
:{{ping|Vickyprashanth}} முதலில் [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று|விக்கிப்பீடியாவின் விதிமுறைகளை]] தெரிந்துக் கொள்ளுங்கள். விக்கிப்பீடியா என்பது ஒரு தகவல் களஞ்சியமே தவிர தூய தமிழை வளர்ப்பதற்கான இடமில்லை. ஆனாலும் நான் கிரந்த எழுத்துக்கு ஆதரவானவனும் இல்லை, எங்களால் முடிந்த அளவு கிரந்த எழுத்துகளை தவிர்த்து தமிழில் தகவலை தருகிறோம். இந்த கிரந்த எழுத்துகளை எதிர்த்து நான் பல இடங்களில் உரையாடியுள்ளேன். விக்கிப்பீடியாவை பொருத்த வரை வாசகர்கள் புரிந்துக் கொள்ளும் அளவிற்கும், சாதாரண தமிழ் சொற்களே போதுமானது, அதை தவிர தூய தமிழ் சொற்கள் என்பது தேவையில்லாத ஒன்று. அதனால் தாங்கள் செய்யும் இத்தகைய பங்களிப்புகளை விட்டுவிட்டு, பயனுள்ள பங்களிப்புகளை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 15:03, 16 திசம்பர் 2019 (UTC)
 
:{{ping|Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்}} சாதாரண தமிழ் என்று தங்களால் ஏதும் வரையறுக்க முடியுமோ! விக்கி இணையத்தில் தமிழை வளர்ப்பதன்று, தமிழை எடுத்துச்செல்லவது தான் எம்போன்றோரின் பணி. மேலும், இவ்விணைத்தின் வழிமுறைகளை, யாமும் நன்கு அறிவோம். மக்களுக்கு புரியும் வடிவில் மட்டுமே பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது. இன்னும், காலம் சென்றால் மக்கள் இப்போது பேசும் தமிழை மறந்து, ஆங்கிலம் ஓங்கப்பெற்றால், தமிழ் ஆங்கிலம் கலந்து தங்கிலிசில் பதிவிடுவீரோ? நடைமுறையில் இருக்கும் தமிழ் தான் புரியும் என்றால், மக்கள் சிறுவயதிலிருந்து பொதுதமிழ் ஏன் கற்கிறார்கள். வெளிநாட்டு வாழ் தமிழ்குடியும் இதனையே விரும்புகின்றனருங்கூட. பல்வேறு மக்களின் கூற்றை அறிந்த பிறகு தான், இப்பணியையும் மேற்கொள்கிறேன். மேலும் நான் இடும் பதிவுகள் இரு தமிழ் பேராசிரியர்களின் அறிவுரைக்கு பின்னரே பதிவிட மேற்கொள்ளப்படுகிறது. என் பின்னே தொடர்ந்து, என் பதிவுகளை மீளச்செய்யும் பணியை விடுத்து, தங்கள் தனிப்பெரும்பணியை ஆற்ற தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் கவனத்திற்கு நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Gowtham_Sampath" இலிருந்து மீள்விக்கப்பட்டது