பேச்சு:நஃபந்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
# {{எதிர்ப்பு}} பல ஆயிரக்கட்டுரைகளில் கிட்டதட்ட ஒரே மாதிரியாக தகவல்களை வெறும் கட்டுரை அளவை அதிகப்படுத்துவதற்காக முதன்மை கட்டுரை வார்ப்புரு சேர்த்து தருவதில் உடன்பாடில்லை. முதன்மை கட்டுரை வார்ப்புரு என்பது உபதலைப்பின் தகவல்கள் அதிகம் ஆகும் பொழுது, கட்டுரையின் நீளத்தை குறைப்பதற்கு, நீண்ட உப தலைப்பை தனி தலைப்பில் கட்டுரை எழுதுவர். பின்னர் ஆரம்பத்தில் உபதலைப்பாக கட்டுரையில் இருந்ததால், வரலாற்று ரீதியில் முதன்மை கட்டுரை என்று வார்ப்புரு இட்டு ஓரிரு வரிகள் எழுதுவர். கட்டுரை அளவு சிறிதாக இருந்தாலும் பரவாயில்லை இப்படி செய்வதில் உடன்பாடில்லை. நன்றி -- [[User:Balajijagadesh|<font face="Lucida Handwriting" size="3.5" style="color:#000000;color:#00CED1">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 06:38, 18 திசம்பர் 2019 (UTC)
# {{எதிர்ப்பு}} நான் ஏற்கெனவே இக்கட்டுரைகள் குறித்து எனது கருத்தைத் தெரிவித்திருக்கிறேன். கட்டுரையின் அறிமுகப் பகுதியும், தகவல் பெட்டியும் தவிர மீதம் அனைத்தும் நீக்கப்பட வேண்டும். ஒரே தகவல்கள் அனைத்துக் கட்டுரைகளிலும் (நூற்றுக்கணக்கானவையாக இருக்கலாம்??) சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன. இது விக்கி நடைமுறையல்ல. இப்போதில்லாவிடினும் வருங்காலத்தில் இவை அனைத்தும் நீக்கப்படும்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 07:17, 18 திசம்பர் 2019 (UTC)
 
# {{எதிர்ப்பு}}நான் ஏற்கனவே இதுபோன்ற கட்டுரைகளை ஏற்காததன் காரணத்தை கருவியில் பின்னூட்டம் மூலம் தெரிவித்துள்ளேன். ஊராட்சிக் கட்டுரைகள் இதுபோல சேர்க்கப்பட்டன என்பது வாதமாக வைத்தால் அவற்றில் மாநிலம், மாவட்டம், நகரம் போன்ற சொற்கள் மட்டுமே திரும்பத் திரும்ப அனைத்து கட்டுரைகளிலும் வரும். அவை அரசிடமிருந்து செய்திகள் பெறப்பட்டு சமூகத்தால் ஏற்பளிக்கப்பட்டு பின்னரே தானியக்கமாக எழுதப்பட்டன. அவற்றில் தலைப்பு குறித்த செய்திகளே விரிவாக்கப்பட்டு உள்ளது.
 
ஆனால் தலைப்பிற்கு தொடர்பற்ற இரண்டு வரிகளில் குறிப்பிட வேண்டிய செய்திகள் ஈரான் பற்றிய சில கட்டுரைகளில் பைட்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டி சேர்க்கப்பட்டுள்ளன. தலைப்பை ஒட்டிய செய்திகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். உதாரணமாக பசுவைப்பற்றி எழுதவேண்டிய கட்டுரையில் தென்னை மரத்தைப் பற்றி எழுதிவிட்டு பசுவை இந்தத் தென்னை மரத்தில் தான் கட்டுவார்கள் என எழுதுவது எப்படி ஏற்றுக்கொள்ளவியலதோ, அது போலத்தான் ஈரானில் உள்ள நகரம், கிராமம், அல்லது மாகானங்கள் பற்றி எழுதும்பொழுது ஈரான் நாட்டைப்பற்றியும் அதற்கு ஏன் அப்பெயர் வந்தது என்பது பற்றியும் அதன் மாகாணங்களும் மாவட்டங்களும் எவ்வாறு பிரிக்கப்பட்டன, அவற்ரின் பெயர்கள் எவை என்பதையும் விரிவாக எழுதி, தலைப்பைப் பற்றிய சிலவரிச் செய்திகள் மட்டுமே இருக்கும் கட்டுரைகளும். இதேபோன்று தகவல் சட்டத்தை விரிவாக்குகிறேன் என இந்திய ஊர்கள் நகரங்கள் மற்றும் பிற கட்டுரைகளில் இந்தியா பற்றியும், தமிழ்நாடு பற்றியும், அந்த மாவட்டம் பற்றியும் விரிவான தகவல்களைத் தந்துவிட்டு தலைப்பு தொடர்பாக ஒரு சிறிய பத்தி மட்டுமே தகவல்கள் தந்தால் அதுவும் அனைத்து கட்டுரைகளிலும் ஒரே தகவல்கள், மேற்கோள்கள் கூட மாறாமல் கொடுத்தால் எப்படியிருக்கும்? கீழ்க்கண்ட கட்டுரைகளை தயவு செய்து ஒரு முறை கவனியுங்கள்.
# [[சூசெஃப்பு ஊரக வட்டம்]]
# [[சூசெஃப்பு]]
# [[சூசெஃப்பு மாவட்டம்]]
# [[நடுவ மாவட்டம், நஃபந்தான் மண்டலம்]]
# [[தெகெசுதன், ஈரான்]]
# [[கோலெசுதான், ஈரான்]]
# [[காட்சு, ஈரான்]]
# [[நசிம்சார்]]
# [[ஆன்டிசே]]
# [[மலர்டு]]
# [[குவர்சக்கு]]
# [[சாரியர், தெகுரான் மாகாணம்]]
# [[பாக்ச்சு]]
# [[நஃபந்தான் மண்டலம்]]
# [[நஃபந்தான்]]
# [[அப்தௌலகபாத்-இ ஒயக்கு]]
# [[இலாப்பெ சனக்கு]]
# [[கோற்றாம்சார்]]
# [[பான்டார்-இ மாக்சார்]]
ஒரே செய்திகள் ஆளுகை, புவியியல், மக்கள் தொகை போன்ற செய்திகளைத் திரும்பத் திரும்ப அனைத்து கட்டுரைகளிலும் வெட்டி ஒட்டியது போல் உள்ளன. போட்டிக்காகவெனினும் மற்ற போட்டியாளர்கள் தங்கள் நேரத்தைக் கொடுத்து கட்டுரைகளை நூற்றுக்கணக்கில் உருவாக்கும்பொழுது இப்படி எளிமையாக அனைத்துக் கட்டுரைகளிலும் சம்பந்தமே இல்லாமல் ஒரே தகவல்களை இட்டு, கட்டுரை அளவையும் எண்ணிக்கையையும் கூட்டுவது சரியல்ல. மேலும் விக்கியின் தரத்துக்கும் ஏற்றதல்ல. இது போல இலட்சக்கணக்கில் உருவாக்கலாம் என்றால் பலராலும் இயலும். இவை மற்ற பயனர்களுக்கு ஒரு தவறான உதாரணமாகி விடும். எனவே அச்செய்திகள் நீக்கப்பட வேண்டும். எனக்கு இதில் உடன்பாடில்லை.--[[பயனர்:Parvathisri|&#32;பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 14:26, 18 திசம்பர் 2019 (UTC)
 
== கூடுதல் செய்திகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:நஃபந்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நஃபந்தான்" page.