"விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் 2.0" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
போட்டிக்காகவெனினும் மற்ற போட்டியாளர்கள் தங்கள் நேரத்தைக் கொடுத்து கட்டுரைகளை நூற்றுக்கணக்கில் உருவாக்கும்பொழுது இப்படி எளிமையாக அனைத்துக் கட்டுரைகளிலும் சம்பந்தமே இல்லாமல் ஒரே தகவல்களை இட்டு, கட்டுரை அளவையும் எண்ணிக்கையையும் கூட்டுவது சரியல்ல. மேலும் விக்கியின் தரத்துக்கும் ஏற்றதல்ல. இது போல இலட்சக்கணக்கில் உருவாக்கலாம் என்றால் பலராலும் இயலும். இவை மற்ற பயனர்களுக்கு ஒரு தவறான உதாரணமாகி விடும். எனவே அச்செய்திகள் நீக்கப்பட வேண்டும். எனக்கு இதில் உடன்பாடில்லை. அனைவரும் தமிழ்விக்கியின் நலனுகாகவே நேரத்தைச் செலவிடுகிறோம், நானும் உழவனும் அவ்வாறுதான்.மேலும் நான் ஒருதலைப் பட்சமாக நடந்துகொள்கிறேன் எனவும், எனக்கும் தகவல் உழவனுக்கும் கருத்து வேறுபாடு என்பது போன்றும் செய்திகள் பரவுவதில் எனக்கு ஆட்சேபனை உள்ளது.--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 14:40, 18 திசம்பர் 2019 (UTC)
 
:பார்வதியுடன் கருத்துடன் உடன்படுகிறேன். போட்டிக்காக என்றில்லை. யார் எழுதுகிற கட்டுரை என்றாலும், தென்னை மரத்தில் கட்டிய பசு போன்ற கட்டுரைகளை எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். அதனால் ஒரு பயனும் இல்லை. ஒரு பொருள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளத் தான் தனிக் கட்டுரைகளும் உள்ளிணைப்புகளும் இருக்கின்றன. எனவே, ஒரே உள்ளடக்கத்தை மீண்டும் மீண்டும் பல கட்டுரைகளில் இடத் தேவை இல்லை. நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:08, 20 திசம்பர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2878264" இருந்து மீள்விக்கப்பட்டது