அற்புதத் திருவந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 733:
அரணார் அவிந்தழிய வெந்தீயம் பெய்தான்
 
சரணார விந்தங்கள் சார்ந்து.................................81
 
 
 
சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே யொத்திலங்கிச் சாராது
 
பேர்ந்தார்க்குத் தீக்கொடியின் பெற்றியவாம் -தேர்ந்துணரில்
 
தாழ்சுடரோன் செங்கதிரும் சாயும் தழல்வண்ணன்
 
வீழ்சடையே என்றுரைக்கும் மின்..............82
 
 
மின்போலும் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால்
 
என்போலும் காண்பார்கட் கென்றிரேல் - தன்போலும்
 
பொற்குன்றும் நீல மணிக்குன்றும் தாமுடனே
 
நிற்கின்ற போலும் நெடிது....................83
 
 
நெடிதாய பொங்கெரியும் தண்மதியும் நேரே
 
கடிதாங் கடுஞ்சுடரும் போலும் - கொடிதாக
 
விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினிலழியக்
 
கண்டாலும் முக்கண்ணான் கண்................84
 
 
கண்ணாரக் கண்டும்என் கையாரக் கூப்பியும்
 
எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்
 
எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ
 
பெரியானைக் காணப் பெறின்...................85
(மேலும் வளரும் .மொத்தப் பாடல்கள் 101. )
 
 
பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீது
 
உறினும் உறாதொழியு மேனும் - சிறிதுணர்த்தி
 
மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்தன் பேயாய
 
நற்கணத்தில் ஒன்றாய நாம்....................86
 
 
நாமாலை சூடியும் நம்மீசன் பொன்னடிக்கே
 
பூமாலை கொண்டு புனைந்தன்பாய் - நாமோர்
 
அறவினையே பற்றினால் எற்றே தடுமே
 
எறிவினையே என்னும் இருள்..................87
 
 
இருளி னுருவென்கோ மாமேக மென்கோ
 
மருளில் மணிநீல மென்கோ அருளெமக்கு
 
நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம்
 
ஒன்றுடையாய் கண்டத்து .....................88
 
 
ஒளிவி லிவன்மதனை ஒண்பொடியா நோக்கித்
 
தெளிவுள்ள சிந்தையினிற் சேர்வாய் -ஒளிநஞ்சம்
 
உண்டவாய் அஃதிருப்ப உன்னுடைய கண்டம்இருள்
 
கொண்டவா றென்இதனைக் கூறு................89
 
 
கூறெமக்கீ தெந்தாய் குளிர்சடையை மீதழித்திட்டு
 
ஏறமிகப் பெருகின்என் செய்தி - சீறி
 
விழித்தூரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத்
 
தெழித்தோடும் கங்கைத் திரை..................90
 
 
திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய்
 
உரைமருவி யாமுணர்ந்தோம் கண்டீர் - தெரிமினோ
 
இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைத்தோமே
 
எம்மைப் புறனுரைப்ப தென்.....................91
 
 
என்னை உடையானும் ஏகமாய் நின்றானும்
 
தன்னை அறியாத தன்மையனும் - பொன்னைச்
 
சுருளாகச் செய்தனைய தூச்சடையான் வானோர்க்கு
 
அருளாகம் வைத்த அவன்......................92
 
 
அவன் கண்டாய் வானோர் பிரானாவான் என்றும்
 
அவன்கண்டாய் அம்பவள வண்ணன் - அவன்கண்டாய்
 
மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால் நன்னெஞ்சே
 
மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு.................93
 
 
விருப்பினால் நீபிரிய கில்லாயோ வேறா
 
இருப்பிடமற் றில்லையோ என்னோ - பொருப்புமகள்
 
மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க
 
அஞ்சுமோ சொல்லாய் அவள்...................94
 
 
அவளோர் குலமங்கை பாகத் தகலாள்
 
இவளோர் சலமகளும் ஈதே - தவளநீர்
 
என்பணிவீ ரென்றும் பிரிந்தறியீர் ஈங்கிவருள்
 
அன்பணியார் சொல்லுமின் இங்கார்.............95
 
 
ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும்
 
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
 
தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து
 
மாயத்தால் வைத்தோம் மறைத்து..............96
 
 
மறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ அன்றேல்
 
உறைப்போடும் உன்கைக்கொண் டாயோ - நிறைத்திட்டு
 
உளைந்தெழுந்து நீஎரிப்ப மூவுலகும் உள்புக்கு
 
அளைந்தெழுந்த செந்தீ யழல்..................97
 
 
அழலாட அங்கை சிவந்ததோ அங்கை
 
அழகால் அழல்சிவந்த வாறோ -கழலாடப்
 
பேயாடு கானிற் பிறங்க அனலேந்தித்
 
தீயாடு வாய்இதனைச் செப்பு..................98
 
 
செப்பேந் திளமுலையாள் காணவோ தீப்படுகாட்டு
 
அப்பேய்க் கணமவைதாம் காணவோ - செப்பெனக்கொன்று
 
ஆகத்தா னங்காந் தனலுமிழும் ஐவாய
 
நாகத்தாய் ஆடுன் நடம்......................99
 
 
நடக்கிற் படிநடுங்கும் நோக்கின் திசைவேம்
 
இடிக்கில் உலகனைத்தும் ஏங்கும் - அடுக்கல்
 
பொருமேறோ ஆனேறோ பொன்னொப்பாய் நின்னேறு
 
உருமேறோ வொன்றா வுரை..................100
 
 
உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்
 
கரைவினால் காரைக்கால் பேய்சொல் - பரவுவார்
 
ஆராத அன்பினோடு அண்ணலைச் சென்றேத்துவார்
 
பேராத காதல் பிறந்து.........................101
(மொத்தப் பாடல்கள் 101)
"https://ta.wikipedia.org/wiki/அற்புதத்_திருவந்தாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது