ஒரு பெண்ணின் இதயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

706 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
'''ஒரு பெண்ணின் இதயம்''' என்பது [[மாயா ஏஞ்சலோ]] என்றப் அமெரிக்கப் பெண் எழுத்தாளரின் சுயசரிதை புத்தகம். இந்தப் புத்தகம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்தது. மாயா அவர்கள் எழுதிய ஏழு சுயசரிதை தொகுப்புகளில் இந்தப் புத்தகம் நான்காவது புத்தகமாக வெளியிடப்பட்டது. 1957 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு வரையில் மாயா அவர்களின் வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களின் தொகுப்பு தான் ''ஒரு பெண்ணின் இதயம்''. இதில் அந்த கால கட்டத்தில் தான் பிரயாணம் செயத நாடுகள், நகரங்கள் அதாவது [[கலிபோர்னியா]], [[நியூயார்க்கு நகரம்|நியுயார்க் நகரம்]], [[கெய்ரோ]] மற்றும் [[சீனா]] ஆகியவை பற்றியும், தனது பதின்பருவ வயதுடைய மகனின் வளர்ப்புப் பற்றியும், [[குடிசார் உரிமைகள் இயக்கம்|குடிசார் ஊரிமைக்கான இயக்கத்தில்]] தனது பங்களிப்பைப் பற்றியும் மற்றும் அந்தச் சமயத்தில் [[தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்]] எதிர்பாளர்களில் ஒருவரின் மேல் தான் கொண்ட காதலைப் பற்றியும் இந்தத் தொகுப்பில் எழுதியுள்ளார். ஆனால் இந்தப் புத்தகத்தின் மையக்கரு என்றால் அது தாய்மைப் பற்றிய கருத்துக்கள் தான் ஏனெனில் பெரும்பான்மையாக தனது மகனின் வளர்ப்பைப் பற்றியே எழுதியிருப்பார். இந்தத் தொகுப்பில் தனது மகன் கல்லூரியில் சேர்வதாகவும் மேலும் தான் ஒரு புதிய சுதந்திரத்தை முன்னோக்கிக் கொண்டருப்பதாகவும் முடித்திருப்பார்.
 
இந்தப் புத்தகம் [[ஓப்ரா வின்ஃப்ரே]] அவர்கள் 1997 ஆம் ஆண்டில் தேர்வு செய்த புத்தகப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. பெரும்பான்மையான விமர்ச்சகர்கள் மாயாவின் முதல் புத்தகமான ''கூண்டுப்பறவை பாடுவது ஏன் என்பது எனக்குத் தெரியும்'' என்பதான் சிறந்தப் புத்தகம் என்கின்றனர்.
 
=== பின்னணி ===
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2879562" இருந்து மீள்விக்கப்பட்டது