இரும்பு(III) சல்பேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 54:
மைகாசைட்டு, (Fe<sup>3+</sup>, Al<sup>3+</sup>)<sub>2</sub> (SO<sub>4</sub>)<sub>3</sub> என்ற வாய்ப்பாட்டை உடைய கலப்பு இரும்பு-அலுமினிய சல்பேட்டு<ref>[http://un2sg4.unige.ch/athena/cgi-bin/minfich?s=Mikasaite Mikasaite]</ref> என்பது இரும்பு (III) சல்பேட்டின் கனிம வடிவத்தின் பெயராகும். இந்த நீரற்ற வடிவம் மிகவும் அரிதாகவே கிடைக்கிறது. ஐதரேட்டுகள் மிகவும் பொதுவானவையாகும். கோக்விம்பைட் (நொனாஐதரேட்டு) அவற்றில் பெரும்பாலும் கிடைக்கின்ற ஒன்றாக உள்ளது. பராக்கோகிம்பைட் மற்றொன்று அரிதாகவே கிடைக்கக்கூடிய இயற்கை நொனாஐதரேட்டு ஆகும். கோர்னைலைட்டு (எப்டாஐதரேரேட்டு) மற்றும் குன்ஸ்டெடிட் (டெகாஐதரேட்டு) ஆகியவை அரிதாகவே காணப்படுகின்றன. லாசனைட்டு (எக்சா- அல்லது பென்டாஐதரேட்டு) ஒரு சந்தேகத்திற்குரிய இனமாகும். குறிப்பிடப்பட்ட அனைத்து இயற்கை ஐதரேட்டுகளும் தாது படுகைகளில் உள்ள இரும்பைக் கொணரும் முதன்மை தாதுக்கள் (முக்கியமாக பைரைட்டு மற்றும் மார்கசைட்டு) ஆக்சிஜனேற்றத்துடன் இணைக்கப்பட்ட நிலையற்ற கலவைகள் ஆகும். தாது படுகைகள் ஆக்ஸிஜனேற்ற மண்டலங்களின் கரைசல்களின் இரும்பு (III) சல்பேட் ஒரு முக்கியமான [[ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்|ஆக்ஸிஜனேற்றியாகும்]].
[[படிமம்:Coquimbite_crystal_structure.png|மையம்|thumb|350x350px| கோக்விம்பைட் படிக அமைப்பு ]]
 
== பயன்கள் ==
இச்சேர்மமானது கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக பல் மருத்துவத்துறையில் பல் அறுவை சிகிச்சையின் போது இரத்த இழப்பைத் தடுக்கும் காரணியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீரில் காணப்படும் ஆர்செனிக், செலினியம், பாசுபரசு மற்றும் கன உலோக மாசுக்களை நீக்க இது பயன்படுகிறது. இச்சேர்மம் குடிநீர் அல்லது தொழில்துறை செயல்முறை நீர் வழங்கலில் மூல நீரின் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், கழிவு நீரை சுத்திகரிக்கவும், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கசடுகளை அகற்றவும் பயன்படுத்தப்படுகிறது. கந்தக வாசனையை அகற்ற நீர் சுத்திகரிப்பு செயல்முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத் துறையில் உடல் திசுக்கள் மற்றும் குழாய்களை சுருக்கும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/இரும்பு(III)_சல்பேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது