இரும்பு(III) சல்பேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 57:
== பயன்கள் ==
இச்சேர்மமானது கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக பல் மருத்துவத்துறையில் பல் அறுவை சிகிச்சையின் போது இரத்த இழப்பைத் தடுக்கும் காரணியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீரில் காணப்படும் ஆர்செனிக், செலினியம், பாசுபரசு மற்றும் கன உலோக மாசுக்களை நீக்க இது பயன்படுகிறது. இச்சேர்மம் குடிநீர் அல்லது தொழில்துறை செயல்முறை நீர் வழங்கலில் மூல நீரின் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், கழிவு நீரை சுத்திகரிக்கவும், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கசடுகளை அகற்றவும் பயன்படுத்தப்படுகிறது. கந்தக வாசனையை அகற்ற நீர் சுத்திகரிப்பு செயல்முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத் துறையில் உடல் திசுக்கள் மற்றும் குழாய்களை சுருக்கும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
 
== வினைகள் ==
ஆலத்தைப் போன்றே இச்சேர்மமும் நீரில் சிறிதளவு காரத்தன்மையை நாடுகிறது. இயற்கையான காரத்தன்மை போதுமானதாக இல்லாமல் இருந்தால் சிறிதளவு
பை கார்பனேட்டு அயனிகள், ஐதராக்சைடு அயனிகள் இவற்றின் நீரில் கரையக்கூடிய உப்புகளைக் கரைத்து கரைசலின் காரத்தன்மையானது அதிகரிக்கப்படுகிறது. பெர்ரிக் சல்பேட்டின் விரும்பத் தகுந்த வினைகள் பெரும்பாலும் காரகாடித்தன்மைச் சுட்டெண் 3.5 முதல் 9.0 வரையிலான அளவிலான கரைசல்களில் சிறப்பாக நடைபெறுகின்றன.
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/இரும்பு(III)_சல்பேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது