டென் (பாரோ): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 33:
}}
 
'''ஓர்-டென்''', '''டேவென்''', '''உடிமு''' என்னும் பெயர்களாலும் அழைக்கப்படும் '''டென்''', [[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்|எகிப்தின் துவக்க கால அரச மரபின்]] [[எகிப்தின் முதல் வம்சம்| முதலாவது வம்சக் காலத்தில்]] எகிப்தை ஆட்சி செய்த தொடக்ககால [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்திய]]ஐந்தாவது [[பார்வோன்]] ஆவான். இவர் இரு முடி அணிந்தவர். மேலும் எகிப்தை 42 ஆண்டுகள் ஆண்டவர் என [[பலெர்மோ கல்]] வெட்டிப் பலகையில் குறித்துள்ளது.
 
இந்தக் கலத்துக்குரிய மன்னர்களில் [[தொல்லியல்]] அடிப்படையில் சான்றுகள் அதிகம் உள்ள மன்னன் இவனாவான். தனது ஆட்சிக்காலத்தில் டென், நாட்டைச் வளம் பெறச் செய்ததுடன், பல கண்டுபிடிப்புக்களும் இவனது ஆட்சிக்காலத்துக்கு உரியவையாகக் காணப்படுகின்றன. [[கீழ் எகிப்து]], [[மேல் எகிப்து]] இரண்டினதும் மன்னன் என்ற பெயர் பெற்ற முதல் மன்னனும், வெள்ளை, சிவப்பு ஆகிய இரண்டு முடிகளை அணிந்தவனாகக் காட்டப்படுபவனும் இவனே. [[அபிடோசு]] என்னும் இடத்துக்கு அண்மையில் உள்ள [[உம்-எல்-காபா]]வில் உள்ள இவனது [[கல்லறை]]யின் தளம் சிவப்பு, கறுப்புக் கருங்கற்களினால் ஆனது. இவ்வாறான கடினத்தன்மை கொண்ட கற்கள் கட்டிடப் பொருளாகப் பயன்பட்டது எகிப்தில் அதுவே முதல் முறை. இவனது ஆட்சிக் காலத்தில் இவனால் ஏற்படுத்தப்பட்ட அரண்மனைச் சடங்குகள் பின்வந்த ஆட்சியாளர்களாலும் பயன்படுத்தப்பட்டன. அத்துடன், இவனுக்கு அடுத்து வந்த ஆட்சியாளர்கள் இம்மன்னனுக்கு மிகுந்த மதிப்பு அளித்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/டென்_(பாரோ)" இலிருந்து மீள்விக்கப்பட்டது